தெய்வத்தின் குரல் - முதல் பாகம்

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

அன்பும் அருளும்

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழுமானால் குடும்பத்தின் தலைவன் முயன்று அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவச் செய்வதைப் பார்க்கிறோம். நாட்டில் அரசியல் பிரச்சனைகளோ கொந்தளிப்போ எழுமானால் நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் தலையிட்டு அதனை அடக்குவதைக் காண்கிறோம். யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்படின் யார் தீர்த்து வைக்க முடியும்.

தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம்தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீர்க்கமுடியும்.

இன்று அவதார புருஷராக - நாயன்மாராக- உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ பெரியவர்கள் தாம்குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாக, துன்பத்தைப் போக்க வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.

பெரியவர்களிடம் போனால் நம் இன்னல்கள் இன்பமயமாகின்றன. மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. அந்த தெய்வ சன்னிதானத்தின்முன் நின்றால் ஒரு சாந்தி கிடைக்கின்றது. குளிர் பூந்தென்றல் நம் மேனியில் படுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒரு துணிவு, தெம்பு, தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இவை அவர்கள் பால் முழு ஈடுபாடு கொண்டவர்கள் தினசரி உணரும் உண்மை, (கடவுளிடமும் பெரியவர்களிடமும் முழுபக்தி கொண்ட கூட்டம் மட்டுமே அந்தச் சன்னிதானத்தின் முன்பு இத்தகைய இன்பானுபவ உணர்வையும் உரத்தையும் பெற முடியும்.)

பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள். உலக மக்களின் நன்மைக்காகவே நாழிகை தோறும் பூஜை செய்பவர்கள்.

அவர்கள் செய்த தவமும்-செய்து கொண்டிருக்கிற பேரருளும், பேணிக்காக்கும் பேரறமும் இந்த உலகத்தை வளப்படுத்திக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணலாம்.

பெரியவர்கள் பல்துறை அறிவும் பல்களைச் செறிவும் பெற்றவர்கள். அவர்கள் நடமாடும் தெய்வம் மட்டுமல்ல. நடமாடும் பல்கலைக் கழகமும்கூட, அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து மக்கள் நல் அறிவு பெற, நாடு நலம் பெற, உலகம் உய்வு பெற, எத்தனையோ அறிவு மொழிகள் அறிவு உறை வடிவில் வந்துள்ளன.

மனித வாழ்வை வளப்படுத்தவும், புனிதப்படுத்தவும் அவர்கள் வேதங்களிலிருந்தும் இதிகாச புராண சாஸ்திரங்களிலிருந்தும் எத்தனையோ மேற்கோள்கள் காட்டிப் பல்வேறு சந்தர்பங்களில் உரையாற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுந்த குரல் காற்றோடு கலந்து போகாமல், என்றும் நின்று நிலவும் வண்ணம் தெய்வத்தின் குரலாகி அவை அச்சு ஏட்டில் பதிவாகிச் சிறந்த நூலாக இப்பொழுது வடிவெடுத்துள்ளது. சொர்ணமூர்த்தியின் எண்ண வடிவங்களே கருத்து வண்ண வடிவங்களாகியுள்ளன.

ஆசாரிய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ, இதிகாசங்களையோ வேதங்களையோ தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்குச் சாறு பிழிந்து தருவதுபோல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச் சாறுகள்.

இந்து மதத்தின் பெருமையும், நமது பண்பாட்டின் அருமையையும், கடவுளின் வடிவங்களையும், வேதசாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறைச்சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும், பாமரரும் புரிந்துகொள்ளும் வகைவில் ஒலிப்பதைக் கேட்கலாம், படிக்கலாம்.

மொத்தத்தில் இது ஒர் அருட்பெரும் அறிவுக் களஞ்சியம். இதைப் படித்தால் பாமரன் பண்டிதனாகலாம், அறிஞர் பேரறிஞனாகலாம். மனிதன் தெய்வமாகலாம், இந்த தெய்வத்தின் குரலை, பல டேப் களிலிருந்தும் கல்கி பத்திரிக்கையின் அருள் வாக்குகளிலிருந்தும், பல்வேறு ஸ்ரீ முகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்தும் எடுத்தும் எழுதியவர் காஞ்சிப் பெரியவர்ளிள் அன்பையும் ஆசியையும் பெரிதும் பெற்ற ஆசிரியர் திரு.ரா. கணபதி அவர்கள்.

பொருளடக்கம்

மங்களாரம்பம்

விநாயகர்

தத்துவ மயமான விநாயகர்

அத்வைதம்

ஸ்வாமி நாமா? இல்லை என்றால்?


அத்வைதம்

அதுவேதான் இது!

  ஸ்வாமி எதற்கு? அத்வைதம் அமைதிக்கே.

அத்வைதமும் அணு விஞ்ஞானமும்

அழுக்கு நீங்க வழி

கண்ணமும் அகண்டமும்

நிறைந்த ஆனந்தம்

கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்

ஆனந்தம் எங்கே

எதிர்கொண்டு அழைப்பான்?

மாயை

அகமும் புறமும்

துக்கச் சுமை குறைய வழி

யோகி

துக்க பரிகாரம்

த்வைதம் ./. பௌத்தம் = அத்வைதம்

ஆசார்யர்களின் ஆக்ஞை

மதம்

தர்மமே தலைக்காக்கும்

பாப புண்ணியங்கள்

மதத்தின் பயன்

மனிதனும் மிருகமும்

சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி

மதங்களின் ஒற்றுமை

மதபோதகரின் யோக்கியதாம்சங்கள்

வைதிக மதம்

பெயரில்லாத மதம்

உலகம் பரவிய மதம்

நம் மதத்தின் தனி அம்சங்கள்

தருமங்களின் பாகுபாடு

வர்ண தர்மம்

வேற்றுமையில் ஒற்றுமை

காரியத்தில் பேதமும் மனோ பேதமும்

இங்கு மட்டும் இருப்பானேன்

  பொருப்பாள் யார் ? பரிகாரம் என்ன ?

அதம பட்சப் பரிகாரம்

வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலலாக வேண்டும்

என் காரியம்

நாகரீக வியாதிக்கு மருந்து

சமயமும் சமூகமும்

தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ?

மூலமாகிய வேதம்

வைதிகமும் தமிழும்

வேதத்தின் மூல வடிவம்

சாஸ்திரமா? மனசாட்சியா?

சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி

பொதுவான தர்மங்கள்

சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை

அஹிம்ஸை

சத்தியம்

எள்ளும் தண்ணீரும் எங்கே போயின?

பூஜை

பரோபகாரம்

சேவையே மேலான பாக்கியம்

எல்லா உயிர்களின் திருப்திக்காக

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்

குற்றமும் குணமும்

கோபம்

கோபம் கொள்ளத் தகுதி ஏது

அன்பும் துன்பமும்

அன்பு

சமூக விஷயங்கள்

எது சுயராஜ்யம்

அறமும் அன்பும் அரசாங்கமும்

குற்றத்தைக் குறைக்கும் வழி

உண்மைக் கல்வி

கல்வி முறையின் கோளாறு

வாழ்க்கைத் தரம்

எளிய வாழ்வு

கணக்காயிருக்கணும்

பணத்தை விட்டுக் குணத்தைக் கொள்க

வரதக்ஷிணைப் பிரச்சனை

இளைஞர் கடமை

அஹிம்ஸா ஸோல்ஜர்கள் தேவை

  வையகம் துயர்தீர வழி

பண்பாடு

பண்பாட்டின் இதயஸ்தானம்

ஸங்கீத லக்ஷியம் சாந்தமே

இசை வழியே ஈஸ்வரானுபவம்

காந்தர்வ வேதம்

வாக்கின் பயன்

சொல்லுக்கும் பொருளுக்கும் மூலம் இறைவனே

எழுத்தாளர் கடமை

மஹா பாரதம்

விஞ்ஞானமுமம் ஆன்ம நிறைவும்

வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்யலாமா ?

தமிழ்நாட்டுப் பண்பின் பெருமை

கர்ம மார்க்கம்

வெளியே கர்மம், உள்ளே தியானம்

சீலம் உண்டாக வழி

ஸம்ஸாரே கிம் ஸாரம் ?

உள்ளும் புறமும்

சடங்குகள்

யோகத்தின் தொடக்கம் கர்மமே

கர்ம யோகம்

பக்தி

ஸ்வாமி

ஸ்வாமி என்றால் என்ன ?

இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்.

கர்மமும் பக்தியும்

உருவமும் அருவமும்

ஈஸ்வரன்

மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்

ஆலய வழிபாடு

ஆலயங்களின் தூய்மை

ஆலயமும் தெய்வீகக் கலைகளும்

ஆலயமும் ஆஸ்பத்திரியும்

ஐம்புலன்கள் ஐந்து உபச்சாரங்கள்

நாக மகிமை

நமஸ்காரம்

பக்தி

பக்தி செய்வது எதற்காக ?

காரணமில்லாத பக்தி

முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி

"என்னையே எனக்குக் கொடு"

பகவத்பாதர் தரும் பக்தி லட்சணம்

இஷ்ட தேவதை

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

சம்பு சங்கரனார்

மனிதப் பிறவியும் வேண்டுவதே

நம் தருமதத்தில் மூல புருஷர்

கண்ணன் பிறந்த தினம்

ஸ்ரீ ராமன்

ஸ்ரீராம நவமி

ஐயப்பன்

ஸ்வாமி என்றால் குமாரஸ்வாமியே

அருள் மின்னல்

குமாரன்

சிவ சக்தியின் ஐக்கிய ஸ்தானம்

தந்தையை மிஞ்சிய தனயன்

வேத நெறியை வாழ்விப்பவன்

முருகனின் தமிழ்நாட்டு அவதாரம்

முருகனின் வடநாட்டு அவதாரம்

அக்கினியில் அடங்கிய அவதார புருஷர்கள்

முருகனின் பூர்வ அவதாரம்

சகல மார்க்க நிறைவான சரவணபவன்

உம்மாச்சி

பசுபதி

தேவர்கள்

சிவராத்ரி

சிவ, விஷ்ணு அபேதம்

சிவ மயம் ; ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்

அரனை மறவேல் ; திருமாலுக்கு அடிமை செய்

காலையில் திருமால், மாலையில் மஹாதேவன்

ஒற்றும் உணர்த்தும் உத்தமத் தலங்கள்

இரண்டு ராஜாக்கள்

" பகவான் யார் ?" பகவத் பாதர் பதில்

விபூதி, திருமண்ணின் மகிமை

சிறுவர் இருவரின் சிறப்பு வாக்கு

ஸரஸ்வதி

மஹாலக்ஷ்மி

பராசக்தியே மஹாலக்ஷ்மி

மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி

பக்தியே பெரிய லக்ஷ்மி

நவராத்திரி நாயகியர்

எனக்கு முக்கியம் அம்பாள்

அன்னைத் தெய்வம்

தேவியின் திருவடித் தியானம்

இயற்கை ஏமாற்றுகிறது ! அம்பாள் ஏமாற்றுகிறாள்

காமாக்ஷி

காமாக்ஷியின் சிவப்பு

கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி

காமாக்ஷியின் கருமை

காமாக்ஷியின் கருணை

காமாக்ஷியின் பெருமை

காமாக்ஷியின் சரிதை

காமாக்ஷியின் கண்கள்

அம்பாளின் ஸ்வரூபம்

அம்பாளின் இருப்பிடம்

ஞானாம்பிகை

பவானித்வம்

வாக்குவன்மை வருக்ஷிப்பாள்

பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?

ஆசாரியாள் காட்டும் அம்பாள்

இன்னல் தருவதும் அவள் இன்னருளே !

சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி

அன்னபூர்ணி

அம்மா

மங்களாரத்தி

அநுமார் அநுக்கிரஹிப்பார்

 

  Next page in   is  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்
Next