ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |


