நெல்லிக்காய்

Latin Name – Phyllanthus emblica (emblica officinalis)
Family – Euphorbiaceae (एरण्ड-कुलम्)
English Name – Emblic myrobalan, Indian gooseberry
Sanskrit Name – आमलकी, धात्री

Indian Gooseberry - Nellikkai - Amalaki

        செவிலித்தாய் இன்று ஏட்டளவில் பிரசித்தமானவள். சென்ற நூற்றாண்டின் இறுதிவரை வாழ்ந்தவள். இளஞ்சிசுவிற்குப் பால் கொடுக்கும் தாய், பால் கொடுக்க முடியாதபடி நோய்வாய்ப்பட நேர்ந்தாலோ, அவளது பால் சிசுவிற்கு ஒத்துக்கொள்ளாவிடிலோ, அத்தாயின் குலம், அறிவு முதலியவைகளில் பொருந்தும் ஒருவளைத் தாய் என்று அவளை அழைப்பர். மருந்துப்பொருள்களில் தாயாராகும் வாய்ப்புக் கடுக்காய்க்கும், செவிலித்தாயாகும் வாய்ப்பு நெல்லிக்காய்க்கும் உண்டு. கடுக்காயை தசமாதா ஹரீதகீ என்றும், நெல்லிக்காயை தாத்ரீ என்றும் அழைப்பர். இரண்டிற்கும் பலவகைகளில் ஒற்றுமை உண்டு. இரண்டும் உப்புசுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளவை. கடுக்காய் கிடைக்காவிடத்திலும் கடுக்காயைப் பயன்படுத்தமுடியாமல் ஆனால் அதே குணமுள்ள பொருள் ஒன்றைப் பயன்படுத்த வேண்டியவிடத்திலும் நெல்லிக்காயை உபயோகிக்கலாம்.
ஹரீதகீம் பஞ்சரஸாமுஷ்ணாமலவணாம் சிவாம்
       தோஷானுலோமனீம் லக்வீம் வித்யாத் தீபனபாசனீம்
       ஆயுஷ்யாம் பௌஷ்டிகாம் தந்யாம் வயஸஸ்தாபனீம் பராம்
       யாந்யுக்தானி ஹரீதக்யா வீர்யஸ்யது விபர்யய:
என்கிறார் சரகர். தாய் உதவமுடியாத நிலையில் செவிலித்தாய் உதவுவதுபோல கடுக்காய் (மாதா) உதவமுடியாத நிலையில் உணவாகவும் மருந்தாகவும் நெல்லிக்காய் (தாத்ரீ) பயன்படுகிறது. திரிபலை என்ற முக்கனிக் கூட்டில் இவ்விரண்டிற்குமே இடமுண்டு. மூன்றாவது தான்றிக்காய். கடுக்காய் உஷ்ண வீர்யமுள்ளது. நெல்லிக்காய் சீதவீர்யமுள்ளது. இது ஒன்றே மாறுதல். இறைவன் ஒரே குணமுள்ள இரு பொருள்களைத்தான் படைப்பதில்லையே!
கடுக்காயையும் நெல்லிக்காயையும் மற்றோர் ஒற்றுமை பெயரளவிலும் செயலளவிலும் தொடர்கிறது. வயஸ் ஸ்தா என்ற பெயர் இரண்டுக்கும் பொது. வயதை நிலைநிறுத்தும் பொருள் எனப்பெயர். நமது நடத்தை உணவு முதலியவைகளால் ஆண்டிற்கு ஒரு வயது என்ற வரையை நீட்டி இரண்டாண்டிற்கு ஒரு வயது என்றபடி வயதால் குறிக்கப்படும் தேய்வைக் குறைத்துக்கொள்ளலாம். கட்டுப்பாட்டுக்குட்பட்ட வாழ்க்கை முறையுள்ளவர்களது தோற்றம் வயதைக் குறைத்துக் காண்பிக்கும். கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையுள்ளவர்களுக்கு ஆன வயதைவிட அதிக வயது வாழ்ந்த தோற்றம் காணும். சரீர மன ஆரோக்கியத்தைச் செவ்வனே பாதுகாப்பதால், வயதை நிலைநிறுத்துபவையாக வயஸ் ஸ்தாபனங்களாகக் கடுக்காயும் நெல்லிக்காயும் புகழப்படுகின்றன.
மழை நாட்களின் ஆரம்பத்தில் பூக்க ஆரம்பித்துப் பனி நாட்களில் பழம் தரும் இம்மரம் இந்தியாவெங்கிலும் பயிராகிறது. இதில் மற்ற இருவகைகள் அரிநெல்லியும் கருநெல்லியாகும். கருநெல்லியின் காய் கருமை கலந்திருக்கும். மிக அரிது. ரஸாயனமாகச் சித்தர்கள் சாப்பிடுவர் விதை பெருத்து நார் மிகுந்து கடும் புளிப்புடன் காணும் மற்றோர் வகை நெல்லி காட்டுநெல்லி எனப்படும். தமிழில் ஆமலகம், ஆலகம், ஆந்பல், தாத்திரீ, மிருதுபலா, மீதுந்து என்று பல பெயர்களில் வழங்கப்பெறுகிறது. தெலுங்கில் உஸிரிக, மலையாளத்தில் நெல்லிக்காய், கன்னடத்தில் நெல்லிக்காய், ஸம்ஸ்கிருதத்தில் ஆமலகீ, தாத்ரீ, வயஸ் ஸ்தா, ஹிந்தியில் ஆம்வலா, வங்காளியில் ஆமலா, குஜராத்தியில் ஆம்வலா, வாடினில் Emblic Myrobolan. இதில் காலிக் ஆஸிட், டானிக் ஆஸிட், சர்க்கரை, ஆல்ப்யுமின், கால்ஷியம், விட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன.
புளிப்பு தூக்கலாகவும், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உரைப்பு சற்றுத் தாழ்ந்தும் உள்ளது. எளிதில் ஜீர்ணமாகக் கூடியது (லகு) வரட்சி தரக்கூடியது (ரூக்ஷம்) குளிர்ச்சி தரக்கூடியது (சீதம்).
ஜலத்தின் இயற்கைச்சுவை இனிப்பு. சுவையறியும் புலனாகிய நாக்கில் இந்த இயற்கைச் சுவையை  அறியும் ஸூக்ஷ்மம் போதாதென்பர். ஆகவே அவ்யக்த மதுரம் என்று புலப்படாத இனிப்பென ஜலத்தின் சுவையை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இந்த புலப்படாத இனிப்பையும் அறியும் திறமையை நெல்லிக்காய் தருகிறது. நெல்லிக்காயை வாயிலிட்டுச் சுவைத்தவுடன் மேல் ஜலம் பருகக் கற்கண்டாக இனிக்கும். சிறுவர்கள் இதைப் பரீக்ஷிக்க அடிக்கடி நெல்லிக்காயைச் சுவைப்பதும், ஜலம் பருகுவதுமாக இருந்து பின் தொண்டைக்கட்டு, சளி,  வேக்காளம் முதலியவைகளுக்கு உள்ளாவது உண்டு. நெல்லிக் காயின் சீதள குணமும் குளிர்ந்து இனிக்கும் ஜலத்தின் கபத்தை வளர்க்கும் சக்தியும் இந்நிலையைப் பலவீனமானவர்களிடம் ஏற்படுத்துவிடுகிறது. கிணற்று நீர் கடுப்பாக வாய்க்கு வழங்காதிருக்கும்போது புதிதாகக் கிணறு வெட்டுபவர்கள் நெல்லிக்கட்டையிலான வட்டவடிவமுள்ள ஆதாரத்தின் பேரில் கிணற்றின் சுற்றுச் சுவரை எழுப்புவார்கள். பக்கவாட்டு ஊற்றுகளிலிருந்து சுரக்கும் ஜலம் இதன் வழியே பாய்வதால் ஜலத்தின் கடுப்பைக் குறைப்பதும் நாக்கின் சுவை உணர் திறனைக் கூராக்குவதும் நெல்லிக்காயின் தனிப்பட்ட சக்தி.
நெல்லிக்காய் சிறந்த ரஸாயனப் பொருள். சரகர் ரஸாயன அதிகாரத்தில் பெரும்பகுதியை நெல்லிக்காயின் முறைகளை விளக்கவே பயன்படுத்தியிருக்கிறார். சியவனப்ராசம் என்ற சிறப்புவாய்ந்த ரஸாயனத்திற்கு இதுவே தாய்ச் சரக்கு. விட்டமின் சி யை அதிக அளவில் உபயோகிக்கத் தோலில் திட்டு திட்டாக வெண்குஷ்டம் போன்ற வெளுப்பு ஏற்படக்கூடும் என்று சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி நிபுணர் கூறியுள்ளார். தோலின் நிறத்தைப் பாதுகாக்கும் மை போன்ற பொருளை விட்டமின் சி கரைத்துவிடக் கூடும். இது ஓரளவு செயற்கை விட்டமின் விஷயத்தில்தான் பொருந்தும். இயற்தையாக விட்டமின்  ஸி உள்ள உணவுப் பொருள்களை எத்தனை அதிகம் உபயோகப்படுத்தினாலும் இந்நோய் ஏற்படாது. அதிலும் நெல்லிக்காய் இந்நோய்வராமல் தடுப்பதில் நல்ல சக்திவாந்ததென ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆரோக்கியமுள்ளவன் தினமும் உஷவில் நெல்லிக்காயையோ ஏதேனும் ஒருவகையில் சேர்த்துவர ஆரோக்கியம் நன்கு ஸ்திரப்பட்டு நிற்கும். அதில் உள்ள புளிப்பு வாயுவைக் கண்டித்து அளவுக்கு மீறவிடாது. அதன் இனிப்பும் சீதவீர்யமும் பித்தத்தைத் தன்னிலையில் பாதுகாப்பதால் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்க முடிகிறது. கடுக்காயிலும் இதே சிறப்புக் குணங்களுண்டு. கடுக்காய் வீர்யத்தில் உஷ்ணம். இது சீதம் என்பதே மாறுதல். இதிலுள்ள சீதம் இரவில் தனித்து உபயோகிப்பதற்கு இடையூறாகிறது. ஆகவே நெல்லிக்காயை உணவுப் பொருளாக இரவில் (ஊறுகாயாகவோ, துவையலாகவோ, பச்சடியாகவோ) உபயோகிப்பதில்லை. பகற்போதில் மாத்திரம் உபயோகிக்கத் தக்கதென்பதுதான் இதைக் கடுக்காய்க்குச் செவிலியாக்கக் காரணம். உபவாஸமிருந்த மறுநாள் காலையில் பாரணைக்கு இதைச் சேர்ப்பது, உபவாஸத்தால் ஏற்படும் இரைப்பைக் குடலழற்சியை மாற்றவும் பித்தச் சேர்க்கையை அகற்றவும் பயன்படுகிறது.
தயிரைத் தனித்து நெடுங்காலம் உண்பதால் சில கெடுதல்கள் ஏற்படும். ஆனால் அவை நெல்லிக்காயுடன் சேர்த்து உண்ணும்போது ஏற்படுவதில்லை என்கிறது ஆயுர்வேதம். நல்ல ருசி தரும் பொருள் என்பதை ஜலத்திற்கு இனிப்புச் சுவை கூட்டுவதாலேயே அறிந்திருப்போம். ஆகவே, உணவில் வெறுப்பு – சுவை உணர்ச்சிக் குறைவாலோ, வெகுட்டலாலோ, அஜீர்ணத்தாலோ ஏற்பட்டிருப்பின் அதை மாற்றி ருசி பசி ஜீர்ணசக்தி அளிக்கவல்லது. மலத்தை இறுக விடாமல் இளக்கி வெளியேற்றும். குடலிலும் குழாய்களிலும் ஏற்படும் அடைப்பு பூச்சு இவைகளைப் போக்கும். சுவாஸகோசத்திற்கும் ஹிருதயத்திற்கும் மூளைக்கும் பலம் தரும். ஞாபக சக்தி, கடும் உழைப்பிலும் களைக்காத திடம், மென்மையான தொண்டை, தோலின் மென்மை, புஷ்டி இவைகளைத் தரவல்லது. வாய் நீர் சுரப்பு, வாந்தி, தலைசுற்றல், மலபந்தம், உட்சூடு, வெட்டை படுதல், உள்ளெரிவு, தாதுக்ஷயம் இவைகளைப் போன்ற உடலுறுப்புகளின் தளர்ச்சியையும் வேக்காளத்தையும் உணர்த்தும் நிலைகளில் ஏற்றது.
துவையல், ஊறுகாய், பச்சடி, முரப்பா, தேன் ஊறல் ஆகத் தயாரித்து உபயோகிக்கலாம். புளிக்குப் பதில் நெல்லிக்காயை அரைத்துக் கலக்கி ரஸம் வைத்து உபயோகிக்கலாம். இயற்கையில் வருஷத்தில் 2-3 மாத காலமே கிடைக்கக்கூடிய நெல்லிக்காய்களை வருஷம் முழுவதும் உபயோகிக்கத் தக்கதாக்க அதை வெயிலிலுலர்த்தி வற்றலாக்கிக் கொள்வதும், முரப்பா, தேன் ஊறலாக்கிக்கொள்வதும் தான் வழி, அப்படியே காயவைத்து வற்றலாக்கிக் கொள்வதை விட முற்றிய நெல்லிக்காய்களைப் பொறுக்கி நல்ல ஈயம் பூசிய பாத்திரத்தில் போட்டு நெல்லிக்காய் முழுகுமளவிற்கு ஜலம் சேர்த்து அடுப்பில் ஏற்றி நன்கு ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறியதும் உருக்குலையாமல் சுளை சுளையாக அவைகளைப் பிரித்து விதைகளை அகற்றி மூங்கில் தட்டுகளில் பரப்பி உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளலாம். வெண்மையாயிருப்பதால் பால் முள்ளி என்று இதற்குப் பெயர். ருசி, நிறம், மணம், குணம் இவைகளில் பெருமளவில் பச்சை நெல்லிக்காயை ஒத்திருக்கும்.
தேன் நெல்லிக்காய் – நன்கு முற்றிய நெல்லிக்காய்களை அலம்பி மேல் ஈரத்தைத் துடைத்துவிட்டு ஒரு வெள்ளி அல்லது எவர்ஸில்வர் கம்பி, அல்லது நீண்ட கருவேலம்முள் அல்லது திடமான தென்னை ஈர்க்கு இவைகளில் ஒன்றால் நெல்லிக்காய்களில் 10-15 குத்து குத்தி ஒரு பீங்கான் ஜாடியிலிடவும். பிறகு நெல்லிக்காய்கள் நிரம்புமளவிற்குத் தேன் நிரம்பி மூடிவைக்கவும். (தேனிற்குப்பதில் நல்ல கெட்டியான சர்க்கரைப்பாகையும் ஊற்றி வைப்பதுண்டு).
தினம் 3,4 மணி நேரம் மூடியை அகற்றிச் சுத்தமான மெல்லிய துணியால் வேடுகட்டி, வெயிலில் வைத்திருக்கவும். இவ்விதம்15 நாட்கள் செய்ததும் ஜாடியை நன்கு மூடி ஈரக்கசிவு இல்லாததும், ஈ எறும்பு தீண்டக்கூடாததுமான இடத்தில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். நன்கு ஊறியதும் ஈரப்பசையற்ற சுத்தமான ஸ்பூன் உதவிகொண்டு கொட்டைகளை அகற்றிவிடலாம். இதைத் தினமும் காலையில் 1,2 நெல்லிக்காய் சாப்பிட்டுவர நல்ல பலம், புஷ்டி, பசி, மனத்தெளிவு, சுறுசுறுப்பு உண்டாகும்.
நெல்லிக்காயைச் சாறு பிழிந்து சர்க்கரையோ கற்கண்டோ சேர்த்து பாகாக்கிக்கொள்ளலாம். இதற்கு நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர், கற்கண்டு அல்லது சர்க்கரை அல்லது குழைவு ஜீனி ஒரு கிலோ இரண்டையும் கலந்து மைசூர்பாகு பதத்திற்கு வரும்வரை பாகாக்கி இறக்கி ஏலம் 2 கிராம் தூளாக்கி அதில் போட்டுக் கிளறி ஈயம் பூசிய தட்டிலோ, பீங்கான் தட்டிலோ கொட்டி ஆறியதும் வில்லைகளாக்கிக் கொள்ளலாம். தலையிலும் மார்பிலும் வலியுடன் கொதிப்பு உணரப்படும்போது சாப்பிட மிகவும் ஏற்றது.
ஆமலகரஸாயனம் – பால் முள்ளியாகத் தயாரித்த நெல்லிமுள்ளியின் சூர்ணம் 100 கிராம் எடுத்துப் பீங்கான் பாத்திரத்திலிட்டு அதில் முற்றிய நெல்லிக்காயின் சாறு பிழிந்து நெல்லி முள்ளிச்சூர்ணம் குழம்பாக ஆகும்வரை சேர்த்துப்பிறகு உலர்த்திவிடவும். (200 மில்லி லிட்டர் திரவம் இருந்தால் போதுமானது.) இப்படி 15 – 30 நாள்வரை தினமும் காலையில் புதிது புதிதாகச் சாறு சேர்த்து மாலைக்குள் அந்தச் சாறு சுண்டுமளவிற்கு வெயிலில் வைத்து மறுபடியும் மறுநாள் காலை சாறு சேர்க்கவும். இவ்விதம் 15 அல்லது 20 நாட்கள் செய்ததும் உலர்த்திச் சம அளவு குழைவு ஜீனி சேர்த்து வைத்துக்கொள்ளவும். இதில் காலையில் ½ - 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு மேல் சூடான பசுவின் பால் சாப்பிட உடல் களைப்பு அயர்வு நீங்கி சுறுசுறுப்புடனிருக்கும். மூளை வேலை உள்ளவர்களுக்கும் பாலர்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் ஏற்றது.
இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் உடலில் சேர இது மிகவும் உதவும். இரும்பு – சுண்ணாம்பு சத்துள்ள மருந்துகள் சாப்பிடும்போது இதையும் உணவாகக்கூடச் சேர்ப்பதோ லேகியம், சூர்ணம், தேன் ஊறல் முதலிய ஏதேனும் ஒரு பாகமுறையில் தயார்செய்து சேர்ப்பதோ மிக நல்லது நெல்லிக்காய்ச் சாறு சேர்த்துத் தயாரித்த அயபஸ்மமும், பவழம், முத்துச்சிப்பி, மான்கொம்பு இவைகளின் பஸ்மமும் நல்ல ரஸாயனமாகின்றன. ஆமலகரஸாயனம், சியவனப்ராசம், தாத்ரீ கிருதம், கனகாரிஷ்டம் முதலிய மருந்துகள் நெல்லிக்காய் அதிகம் சேர்ந்துள்ள மருந்துகள். இவை வைத்தியர்களாலேயோ பெருத்த மருந்து உற்பத்திசாலைகளாலோ தயாரிக்கத் தக்கவை. நெல்லிக்காய் சாறு சேர்த்த தைலங்கள் கோடையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க மிகவும் ஏற்றவை.
தலைக்குப் பற்று – தலையில் நீர்கோர்வையோ கனமோ இன்றி ஏற்படும் கடும் தாபஜ்வரம் அல்லது நல்ல வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும் ஏற்படும் கொதிப்புத் தலைவலி, ரத்தக் கொதிப்பில் ஏற்படும் தலைசுற்றுதல், தலைவலி, கிறுகிறுப்பு இவைகளில் நெல்லிமுள்ளிப்பற்று மிக நல்லது. நெல்லிமுள்ளியைப் பாலிலோ ஜலத்திலோ சிறிதுநேரம் ஊறவைத்து அரைத்துப் புளியங்கொட்டைகனம் நெற்றியில் பற்றுப் போட உடன் தலையில் ஏறிய சூடும் கொதிப்பும் அடங்கி வேதனை குறைந்து தூக்கம் வரும். நவச்சாரம் 1-2 சிட்டிகை அல்லது பச்சைக் கற்பூரம் 2-3 அரிசி எடை சேர்ப்பது அதிக குணம் தரும். நீர் சளி இருக்கும்போது இதைப் போடக்கூடாது.
அதிக புத்திவேலையுள்ளவர்கள் தினமும் இரவில் தூக்கம் வராமல் திணறுவதுண்டு. பூர்ண ஓய்வு கிடைக்காத்தால் அவர்களுக்குக் குழப்பமும் தளர்ச்சியும் அதிகம் ஏற்படும். அதைத் தவிர்க்க மாலை வேளைகளில் தலைக்கு லேசாக க்ஷீரபலா தைலத்தைத் தடவிக்கொண்டு அதன்மேல் நெல்லிமுள்ளிப் பற்றைப்போட்டுக்கொண்டு 15-30 நிமிஷங்கள் உட்கார்ந்திருந்துவிட்டுப் பிறகு ஸ்னானம் செய்வதால் இரவில் நல்ல தூக்கமும் அதன் பலனாகத் தெளிவும் சுறுசுறுப்பும் ஏற்படும். நெல்லிமுள்ளியை ஊறவைத்தரைத்து லேசாகச் சுடவைத்து அதைத் தலையில் புளியங்கொட்டைகனத்திற்கு அப்பிக்கொள்வது நல்லது. நீர்க்கோர்வை, சளி போன்ற கபக்கோளாறு உள்ளவர்கள் இதைச் செய்துகொள்ளக்கூடாது.

वयस्थामलकी वृष्या जातीफलरसं शिवम्।
धात्रीफलं श्रीफलं च तथामृतफलं स्मृतम्॥
त्रिष्वामलकमाख्यातं धात्री तिष्यफलामृता। (भावप्रकाशिका)
वयःस्थाऽऽमलकं वृष्यं जातीफलरसं शिवम्।
धात्रीफलं श्रीफलं  च तथाऽमृतफलं स्मृतम्॥ (धन्वन्तरिनिघण्टु)
आमलकी वयःस्था च श्रीफला धात्रिका तथा।
अमृता च शिवा शान्ता शीताऽमृतफला तथा॥
जातीफला च धात्रेयी ज्ञेया धात्रीफला तथा।
वृष्या वृत्तफला चैव रोचनी शरभूह्वया॥ (राजनिघण्टु)
कफपित्तहरं वृष्यं अम्ळमामलकं तथा।
भेदनं मधुरं पाके रुच्यं वीर्ये हिमं मृदु॥ (मदनादिनिघण्टु)
हरीतकीसमं धात्रीफलं किन्तु विशेषतः।
रक्तपित्तप्रमेहघ्नं परं वृष्यं रसायनम्॥
हन्ति वातं तदाम्ळत्वात्पित्तं माधुर्यशैत्यतः।
कफं रूक्षकषायत्वात्फलं धात्र्यास्त्रिदोषजित्॥
यस्य यस्य फलस्येह वीर्यं भवति यादृशम्।
तस्य तस्यैव वीर्येण मज्जानामपि निर्दिशेत्॥ (भावप्रकाशिका)
कषायं कटुतिक्ताम्ळं स्वादु चामलकं हिमम्।
सरं त्रिदोषहृद् वृष्यं ज्वरघ्नं च रसायनम्॥
हन्ति वातं तदम्ळत्वात्पित्तं माधुर्यशैत्यतः।
कफं रूक्षकषायत्वात्फलं धात्र्यास्त्रिदोषजित्॥ (धन्वन्तरिनिघण्टु)
आमलकं कषायाम्ळं मधुरं शिशिरं लघु।
दाहपित्तवमीमेहशोफघ्नं च रसायनम्॥
कटुमधुरकषायं किञ्चिदम्ळं कफघ्नं
रुचिकरमतिशीतं हन्ति पित्ताम्रतापम्।
श्रमवमनविबन्धाध्मानविष्टंभदोष-
प्रशमनममृताभं चामलक्याः फलं स्यात्॥ (राजनिघण्टु)
अम्ळं समधुरं तिक्तं कषायं कटुकं सरम्।
चक्षुष्यं सर्वदोषघ्नं वृष्यमामलकी फलम्॥
हन्ति वातं तदम्ळत्वात्पित्तं माधुर्यशैत्यतः।
कफं रूक्षकषायत्वात्फलेभ्योऽभ्यधिकं च तत्॥ (सुश्रुतसंहिता. सूत्रस्थानम्)
आमलक्याः फलं किञ्चित्कटुकं स्वादु तिक्तकम्।
अम्ळं च तुवरं शीतं जराव्याधिविनाशनम्॥
वृष्यं केष्यं सारकं च हितं चारुचिनाशकम्।
रक्तपित्तं प्रमेहं च विषजूर्त्तिवमिं तथा॥
आध्मानं बद्धविट्कत्वं शोफं शोषं तृषां तथा।
रक्तस्य विकृतिं चैव त्रिदोषं चैव नाशयेत्।
अम्ळत्वाद्वातहं प्रोक्तं माधुर्याच्चैव शीततः।
पित्तनाशकरं चोक्तं रूक्षत्वाच्च कषायतः॥
कफनाशकरं प्रोक्तं पूर्वैर्विद्याविशारदैः।
आमलस्य फलं शुष्कं तिक्तमम्ळं कटुस्मृतम्॥
मधुरं तुवरं केश्यं भग्नसन्धानकारकम्।
धातुवृद्धिकरं नेत्र्यं लेपनात्कान्तिकारकम्॥
पित्तं कफं तृषां घर्मं मेदोरोगं विषं तथा।
त्रिदोषं नाशयत्येवं पूर्वाचार्यैर्निरूपितम्॥ (निघण्टुरत्नाकरम्)
तद्वत् धात्री स्वेदमेदोहराम्ळा शुक्ळळा हिमा।
भग्नसन्धानकृत् केश्या पिपासाकफपित्तहृत्॥
तन्मज्जा तुवरः स्वादुस्तृट्च्छर्द्यनिलपित्तहा।
हन्ति वातं तदम्लळत्वात् पित्तं माधुर्यशैत्यतः॥
कफं रूक्षकषायत्वात् फलेभ्योऽभ्यधिकं मतम्।
चक्षुष्यं सर्वदोषघ्नं वृष्यमामलकीफलम्॥ (कैयदेवनिघण्टु)
आदौ अन्ते च मध्ये च भोजनस्य प्रशस्यते।
निरत्ययं दोषहरं फलेष्वामलकीफलम्॥ (राजवल्लभः)
तन्मज्जा प्रदरच्छद्रिवातपित्तज्वरापहा।
कषायमधुरा वृष्या श्वासकासनिबर्हणा॥ (शालिग्रामनिघण्टु)
विद्यादामलके सर्वान् रसान् लवणवर्जितान्।
रूक्षं स्वादु कषायाम्ळं कफपित्तहरं परम्॥ (चरकसंहिता – सूत्रस्थानम्)
........... आमलकं शीतमम्ळं पित्तकफापहम्।
कटु पाके हिमं केश्यं .............................॥ (अष्टाङ्गहृदयम् – सूत्रस्थानम्)
एवमामलकं चूर्णं स्वरसेनैव भावितम्।
शर्करामधुसर्पिभिः युक्तं लीढ्वा पयः पिबेत्॥
एतेनाशीतिवर्षोऽपि युवेव परिहृष्यति॥ (चरकसंहिता.उत्तरस्थानम्)
आमलं घृतभृष्टं तु पिष्टं काञ्चिकवारिभिः।
जयेन्मूर्द्ध्नि प्रलेपेन रक्तं नासिकया स्रुतम्॥ (शार्ङ्गधरम्)
धात्रीचूर्णं सितायुक्तं भक्षयेत् रक्तपित्तनुत्। (रसरत्नसमुच्चयम्)

Amalaki (Gooseberry):
It is called as mother because in Sanskrit it is called dhatri. They term dhatri means a mother who gives breast feeding to a child. It is also called as vayastha as it prevents the aging process of a human being. The word vayastha is split in to two vayas – stha meaning (vayas = age, Stha =constant). During rainy season the flowering takes place and in winter it gives the fruits. There are two types of gooseberry one being small in size and another being larger. The bigger variety which is called as karrunelly in Tamil is good rejuvenator and it is a little difficult to procure. A raw green gooseberry will have sour taste predominantly along with sweet, bitter, astringent and pungent ion taste and a little inferior level. It is easily digestible and it is coolant. In dry form it is more of sour and astringent in nature.
The lodge of gooseberry is kept on the base of well in order to keep the water in sweet taste and also to remove the impurity of the well water. After we consume a gooseberry and drink water then water tastes sweet. But for some people it would cause phlegm accumulation and a slight burning in the oral cavity. This is due to the astringent taste and the chillness of water. Gooseberry is said to be very rich in vitamin C and it protects the skin complexion on its regular use after fast if a gooseberry is used it is good for health due to its cooling property. However gooseberry should not be used in night time.
As a paste, pickle, pachadi, morappa, honey or some of the form the gooseberry can be consumed. Raw gooseberry can be collected only in two to three months time in a year for rest of the season it can be preserved in dry form. In severe ulcer and acidity cases instead of tamarind the dry gooseberry soaked in water can be squeezed and with that water RASAM can be prepared. Instead of drying in sun better soak in hot water and when it become a little boiled and pale in color the seeds can be removed and dry in shadow is the best way of using it as food product. 
Gooseberry opens up the taste buds of the tongue. It loosens the fecal matter in the rectal bag thereby preventing constipation. It scrapes the unwanted deposits in the form of debris in the intestinal canal and other channel of the body. It strengthens the lungs thereby preventing cough and cold. It also strengthens the heart there by preventing the giddiness and tiredness of the body. As it stabilizes the brain it improves the memory power and prevents tiredness even in hard work. By continuous usages of gooseberry the voice becomes soft the skin texture is smooth and brings in enormous clarity to face. It helps in enhancing the iron and calcium in the body. Some of the Ayurveda products such as chyavana prash, amalaka rashayanam etc have the main ingredient and are prescribed as the best rejuvenators.
When a person suffers out of severe headache due to dryness and heat of the body without any water logging in the head and cold then gooseberry made into a paste and applied on the forehead, relieves the heat and give a sound sleep. People having too much brainy work and poor sleep can apply ksheerabala tailam an Ayurvedic oil on the head and then apply gooseberry on the head as a paste and take warm water bath after some time, it prevents confusion tiredness of the brain and  keeps the brain fresh.  It gives the sound sleep when cold and running nose is there then it should not be applied.
Matured Gooseberry pricked with silver needle and soaked with pure honey and kept in hot sun for some time within 15 -20 days they will gate well soaked, seeds are removed without any water contact and again soaked with honey for any number of days. Daily one to two number of gooseberry consumed in the morning before food, induces a good appetite, clarity to mind. It can be consumed along with food also.
The juice extracted from the gooseberry mixed with sugar or sugar candy powder and made into a linctus form when dry and cut into mysore pak can be preserved in a glass bottle. One or two pieces consumed in daily basis prevent stress and strain, pain and burning sensation in head and chest.
200 grams dry gooseberry soaked in the juice extracted from gooseberry is dried for 16 or 32 days. It turns into slight black color. An equal quantity of sugar is added and crushed into nice powder. Half teaspoon of this when consumed in empty stomach morning and evening acts as wonderful tonic in improving the function of intestinal canal. It enhances the essences the food absorption through the intestines and helps in the removal of excessive exhaustion, for old age people.  

 

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்