ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
அன்னம் என்பதில் ப்ரோட்டீன், கார்போ ஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும் இல்லை. காய்கறியாகவும் அதை விலைக்கோ, தான்யமாகவோ கொடுத்தவர். அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களுக்கும் அந்த அன்னத்தில் சூட்சூம்மாக டெபாஸிட் ஆகி சாப்பிடுவதற்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால், சாப்பிடுகிறவனையும் அந்த தோஷம் தொற்றிக் கொள்ளும் இதுதான் அன்ன தோஷம் என்பது
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |