தர்ம சக்கரமா? ஆலைத் தொழில் சக்கரமா?

தர்ம சக்கரமா? ஆலைத் தொழில் சக்கரமா?

சக்கரத்தைத் தேர்ந்தெடுப்பதில் சங்கேதமாக மற்றுமொரு கொள்கையும் தெரிவிக்கப்படுகிறதோ என்று ஐயுறுவோரும் உள்ளனர். நம்முடைய 'தேசாசாரம்' என்ற பிரத்தியேக மரபு எளிய வாழ்க்கைதான் என்றும், இயந்திர உதவியை நாடாது, எளிய வாழ்க்கைக்கான சிறிய அளவினதான உபகரணங்களை, பெருத்த ஜனத்தொகை படைத்த நம் நாட்டில் முக்கியமாக மக்களின் உடலுழைப்பிலிருந்தே கைத் தொழிலாகத்தான் பெற வேண்டும் என்றும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் முதலிடம் கொண்ட மஹாத்மா கருதினார். அந்தக் கருத்துக்கு உருவகமாகக் குடிசைத் தொழிலாக உடலுழைப்பிலிருந்தே கைத் தொழிலாகத்தான் பெறவேண்டும் என்றும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் முதலிடம் கொண்ட மஹாத்மாக கருதினார். அந்தக் கருத்துக்கு உருவகமாகக் குடிசைத் தொழிலாக உடலுழைப்பின் மூலம் நடக்கும் நெசவுக்குத் தேவைப்படும் எளிய கருவியான கைராட்டையாம் சர்க்காவைத் தமது கட்சியின் கொடி நடுவில் பொறிக்கச் செய்தார். ஆனால் அவ்வழிக்கு மாறாக, மேநாட்டுப் பாணியில் பெருக்கமான சுகபோக சாதனங்களுடன் வாழ்க்கை நடத்தும் முறையையே சுதந்திர பாரதத்தில் நிறுவ விரும்புகிறோம் என்றும், அதற்குத் தேவையான ஏராளமான உபகரணங்களைப் பெரிய பெரிய இயந்திரங்கள் செயற்படும் ஆலைத் தொழில் மூலமே பெறச் செய்வோம் என்றும் காட்டுமுகமாகவே ஆலை இயந்திரத்திற்கும் அடையாளமாகவுள்ள சக்கரத்தை - 'சக்ரா'வை - சர்க்காவின் இடத்தில் நவீனக் கொள்கைக்காரர்களான தலைவர்கள் பொறித்துள்ளனரோ என்பதே அந்த ஐயம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தேசிய இலட்சணம் வாசகமாக வேதவாக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஒரு ரிஷியின் தியாகம்   ஏரண்டகர் : பெயர்க்காரணம்
Next