தேசிய இலட்சணம் வாசகமாக வேதவாக்கு

தேசிய இலட்சிய வாசகமாக வேதவாக்கு

மகிழ்ச்சிக்குரிய மற்றொன்று, தேசத்தின் இலட்சிய வாசகமாகவே உபநிஷத வாக்கான 'ஸத்யமேவ ஜயதே' என்பதைத் தேர்ந்தெடுத்திருப்பதாகும். இதனால் உண்மையே வெல்லும் என்பது சநாதன தர்மத்தின் ஆதார சாத்திரமாம் வேதத்தின் பெரும் பிரமாணத்திலேயே மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இங்குங்கூட அந்த நவீன மனப்பான்மையாளருக்கு உரிய விதத்திலேயே, மத சாத்திரம் - தத்துவ சாத்திரம் என்று மேநாட்டார் வேறு படுத்திக் கூறும் இரண்டில் இவ்வாசகம் ஹிந்து மதமாகக் கொள்வதற்கின்றி எல்லோருக்குமுரிய தத்துவ சாத்திரமாயும், அதோடு உலகெங்குமே ஒரு நன்னெறியில் கருத்து என்ற அளவில் வழங்கப்படுவதாயுமிருப்பதாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பேசப்பட்டது. எவ்விதமாயினும் மறைமொழியே தேசிய இலட்சிய வாசகமாயிருப்பதைப் பாராட்டுகிறோம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தேசக் கொடியில் தர்ம சக்கரம் இடம் பெற்றதன் உட்காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  தர்ம சக்கரமா? ஆலைத் தொழில் சக்கரமா?
Next