அரசு புரிய வேண்டிய மத போஷணை, அதனால் அரசு பெறும் லாபம்

அரசு புரிய வேண்டிய மத போஷணை அதனால் அரசு பெறும் லாபம்

பிரஜைகளின் உள்ள உயர்வுக்கு உதவுவதில் அரசாங்கத்திற்குப் பங்கு உண்டு என்ற காரணத்தோடு, மத வளர்ச்சியின் வழியே ஏற்படும் உள்ளத்தின் உயர்வால் அரசாங்கத்திற்கே நேராக ஒரு லாபமும் உண்டு என்பதை ஓர் அரசாங்கம் எல்லா மதங்களுக்கும் ஆதரவு தந்துதவ வேண்டுமென்பதற்கு ஓர் உபகாரணமாக (துணைக்காரணமாக) க் காட்ட விரும்புகிறோம். தற்போது ஒரு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் eP ஏராளமான குற்றங்கள் நடைபெறுவதால் நீதிமன்றங்கள், உள்நாட்டுப் பாதுக்காப்பான போலீஸ் ஆகியவற்றுக்கு அரசாங்கம் ஏராளமாகச் செலவழிக்க வேண்டியுள்ளது. அதோடு சட்டத்தையும் ஒழுங்கையும் காக்கும் பணி மீகக் கடினமானதாகவும், அரசாங்கத்திற்கு மிகுந்த மனச்சுமையேற்றுவதாகவும் உள்ளது. இச்செலவில் ஒரு சிறு பங்கினை மதங்களின் போஷாணைக்காக்கி, எல்லா மதஸ்தர்களுக்கும் ஆலயத் திருப்பணி செய்வது, எல்லா மத ஸ்தாபனங்களுக்கும் திரவிய காணிக்கையளிப்பது, ஸத்ஸங்கங்களுக்கு மானியமளிப்பது, ஸத்துக்களான யாவருக்கும் சம்மானமளிப்பது என முற்கால மன்னர்கள் செய்தாற் போல் செய்து மதாபிமானம் வளர்வதற்காகச் செலவிட்டாலே போதும், அதன் வழியே மக்களின் உள்ளம் உயர்ந்து பண்பட்டு, முற்காலத்திலிருந்தாற்போலவே குற்றங்களும் வெகுவாகக் குறைந்துவிடும். எனவே நீதித்துறை, போலீஸ் துறை ஆகியவற்றின் தேவையும் வெகுவாகக் குறைந்து அரசாங்கத்திற்கு cF, பொறுப்புச் சுமை என்ற இரு இனத்திலும் நிகர லாபம் கிடைக்கும். முற்காலத்தை விடத் தன்னிச்சையாக மக்கள் நடக்கத் தொடங்கியிருக்கும் இக்காலத்தில், அன்றை விட ஆசைகளையும், பேராசைகளையும் தூண்டிவிடக்கூடிய பொருள்களும், கொள்கைகளும் நாள்தோறும் மலிந்து, குற்றம் புரியும் வாய்ப்புகளும் பெருகிவரும் விஷமயமான சூழலில் மாற்று மருந்தாம் அமிர்தமாக மேற்சொன்ன விதங்களில் அரசாங்கம் அளிக்க வேண்டிய மத போஷணையும் முன்னைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே முடிந்த முடிவாக, ஒரு நாட்டில் நன்மக்கள் பெருகி, குற்றங்கள் குறைய வேண்டுமெனில் அதன் அரசாங்கம் மதபோஷணை அளிப்பதைத் தனது கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டுமென்றாகிறது. இதனைத் தொடர்ந்து, 'ஸெக்யூலரிஸம்' என்பதை எம் மதமும் சாராத்தன்மை என்று தப்பர்த்தம் செய்து கொண்டு எதற்குமே அதரவு தராது விலகி நிற்பதை விடுத்து, குறிப்பிட்டதொரு மதத்தை மட்டும் சாராது எல்லாவற்றையும் ஆதரிப்பதே முறையான அர்த்தமெனப் புரிந்து கொண்டு அரசாங்கம் செயலாற்ற வேண்டும் என்றுமாகிறது.

இன்று அநேகமாக எல்லா நாடுகளிலுமே பல்வேறு மதத்தினர் கூடி வாழ்வதால், எல்லா மதங்களையும் சமநோக்குடன் ஆதரித்து, அவற்றின் அபிவிருத்திகளுக்கான போஷணையை அரசாங்கங்கள் அளிப்பதே

'ஸெக்யூலரிஸம்' எனப்பெயர் கொண்ட கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கும். உலகவியல் என்பதே நவீன விஞ்ஞானத்தாலும் புரட்சிக் கருத்துக்களாலும் உலகெங்கிலும் ஓங்கிப் பரவி, ஆன்மவியல் அடித்துச் செல்லப்படும் ஆபத்துக் கட்டத்தில் ஜன சமுதாயம் இருக்கும் இத்தருணத்தில், மக்கள் மாக்களாகி விடாமல் காக்க வேண்டுமெனில் இத்தகைய செக்யூலரிஸமே நடைமுறையாக வேண்டும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடலாகாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அரசு போஷணை:ஹிந்து மதமும் பிற மதங்களும்
Next