எல்லா ஜாதியாரும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பல தொழில்களுக்கான பல வித்யைகள் ஏற்பட்ட போது வேத அத்யயனத்துக்குத் தகுதி பெற்ற த்ரைவர்ணிகர்களும் (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களான மூன்று வர்ணத்தினரும்) குருகுலங்களில் சேர்ந்து படித்தார்கள். நான்காம் வர்ணத்தவர்கள் குருகுலத்தின் ஆசார்யமார்கள் போஜனம் முடித்தபின் அவர்களிடம் வந்து தங்களுடைய தொழிலுக்கான சாஸ்த்ரங்களைத் தெரிந்துகொண்டு போவார்கள். ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் குருகுலத்தின் மூலமாக எந்தெந்த அளவுக்கு கல்வி பெறவேண்டிய அவசியமிருந்தது என்பதை அப்புறம் சொல்கிறேன். அப்போது இந்த முறையில் பாரபக்ஷம் எதுவுமில்லை என்பது புரியும்.

மொத்தத்தில் குருகுலவாஸமாகவே குருவோடுகூட இருந்து படித்த த்ரைவர்ணிகர்களும்கூட ஒரே மாதிரியான கோர்ஸ் படிக்கவில்லை. குருகுலவாஸம் எத்தனை வருஷம் என்பதிலும்கூட அவர்களுக்குள் வித்யாஸமிருந்தது. மூன்று வர்ணத்தினரும் வெவ்வேறு வயஸுகளில்தான் உபநயன ஸம்ஸ்காரம் பெற்று குருகுலத்துக்கு அனுப்பப்பட்டார்கள்*.


*இவ்விஷயங்கள் இதே உரையில் பிறிதோரிடத்தில் விவரிக்கப்படுகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வைதிகமாகவே ஸகல வித்யைகளும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கட்டாய கல்வி
Next