வைதிகமாகவே ஸகல வித்யைகளும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இன்னொரு முக்யமான விஷயம் சொல்ல வேண்டும். வித்யை என்றால் வைதிகமான வித்யையாகவே இருந்த காலம் அது. அதனால் எந்த ஆர்ட், ஸயன்ஸானாலும் அதுவும் கூட வேத அத்யயனத்தோடும், வேத வித்யைகளான பதிநாலோடும் சேர்த்துத்தான் வைதிகமான வாழ்முறைக்குப் பயன்படுவதாகவே போதிக்கப்படும்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் வேதம் முழுதையும் ஒப்புக்கொள்ளாமல் அதில் ஒரு பகுதியை மட்டும் ஒப்புக் கொள்ளும் பூர்வ மீமாம்ஸை முதலான வித்யைகளையும், அடியோடு வேதத்தையே ஒப்புக்கொள்ளாத சார்வாகம் முதலிய வித்யைகளையும், வேதத்தை ஆதரிப்பதாகவும் சொல்லமுடியாமல் ஆக்ஷேபிப்பதாகவும் சொல்லமுடியாமல் அதற்கு நேர் ஸம்பந்தமில்லாமல் இன்டிபென்டென்ட் – ஆக ஏற்பட்ட ஸாங்க்யம், யோகம் முதலான வித்யைகளையுங்கூட வேத அத்யயனத்தோடு சேர்த்தேதான் சொல்லிக் கொடுத்தார்கள். பிற்பாடு வேத ப்ராமாண்யத்தை ஆக்ஷேபித்து அவைதிகமான பௌத்த மதம் தோன்றி, பௌத்தர்கள் யுனிவர்ஸிடிகள் நடத்தியபோதுகூட அவற்றிலே சதுர்தச (பதிநான்கு) வேதவித்யைகளையும் சொல்லிக் கொடுத்தார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தர்மம் - ப்ரஹ்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  எல்லா ஜாதியாரும்
Next