சொல்லு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

சொல்லு

பரமேச்சர விண்ணகரம்

பெரிய காஞ்சிபுரத்தில் வைகுந்தப் பெருமாள் சன்னிதி இருக்கிறது. ஆழ்வார் அதைப் பரமேச்சுர விண்ணகரம் என்று கூறுகிறார். பல்லவ மன்னன் இக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறான். எனவே, இம்மன்னனையும் சேர்த்துப் புகழ்கிறார் ஆழ்வார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பல்லவன் பணிந்த பரமேச்வர விண்ணகரம்

1128. சொல்லுவன் சொற்பொருள் தானைவை யாய்ச்சுவை

யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,

நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்

தான் தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

பல்லவன் வில்லவ னென்றுல கில்பல

ராய்ப்பல வேந்தர் வணங்குகழல்

பல்லவன், மல்லையர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

பாண்டியனைவென்ற பல்லவன் பணிந்த கோயில் இது

1129. கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட

ரும்நில னும்மலை யும்,தன்னுந்தித்

தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தட

மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,

தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு

வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,

பார்மன்னு பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே

பாம்பணைப் பள்ளிகொண்டவன் இடமே இக்கோயில்

1130. உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண் டானொரு

கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,

வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி

மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,

நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு

வாயி லுகச்செரு வில்முனநாள்,

பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

உலகம் உண்டவன் இடம் இக்கோயில்தான்

1131. அண்டமு மெண்டிசை யும்நில னுமலை

நீரொடு வானெரி கால்முதலா

உண்டவன், எந்தைபி ரானதி டமொளி

மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி

விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரைந்

தாரிரி யச்செரு வில்முனிந்து,

பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

தென்னவனை வென்றவன் பளிந்த கோயில் இது

1132. தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர்

தீர்த்தர வம்வெரு வ,முனநாள்

பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந்

தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

தேம்பொழில் குன்றெயில் தென்ன்வ னைத்

பச்செரு மேல்வியந் தன்றுசென்ற, திசைப்

பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

பல்லவர்கோன் பணிந்த கோயில் இது

1133. திண்படைக் கோளரி யினுரு வாய்த்திற

லோனக லம்செரு வில்முனநாள்,

புண்படப் போழ்ந்த பிரானதி டம்பொரு

மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,

வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை

வெல்கொடி வேல்படை முன்னுயர்த்த,

பண்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

கருவூர் வென்றவன் பணிந்த கோயில் இது

1134. இலகிய நீண்முடி மாவலி தன்பெரு

வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,

சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந்

தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

உலகுடை, மண்ணவன் தென்னவ னைக்கன்னி

மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,

பலபடை சாயவென் றான்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

நென்மெலி வென்ற பல்லவன் பணிந்த கோயில்

1135. குடைத்திறல் மன்னவ னாயரு கால்குரங்

கைப்டை யா,மலை யால்கடலை

அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி

மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி

விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு

வச்செரு வேல்வலங் கைப்பிடித்த,

படைத்திறல் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

ஏழு எருதுகளை அடக்கியவன் இடம் இக்கோயில்

1136. பிறையுடை, வாணுதல் பின்னை திறத்து

முன்னொரு கால்செரு வில்லுருமின்

மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந்

தாந்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,

கறையுடை வாள்மற மன்னர்கெ டக்கடல்

போல முழங்கும் குரல்கடுவாய்,

பறையுடைப் பல்லவர் கோன்பணிந் தபர

மேச்சுர விண்ணக ரமதுவே.

இவற்றைப் படிப்போர் திருமகள் அருள் பெறுவர்

1137. பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்

தபர மேச்சுர விண்ணகர்மேல், பணிந்

தார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை

வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,

சீர்மன்னு செந்தமிழ் மாலைவர் லார்திரு

மாமகள் தன்னரு ளால்,உலகில்

தேர்மன்ன ராயலி மாகடல் சூழ்செழு

நீருல காண்டு திகழ்வார்களே.

அடிவரவு - சொல்லுவன் கார் உரம் அண்டம் தூம்பு திண் இலகிய குடை பிறை பார் - மஞ்சாடு.









 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திரிபுரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மஞ்சாடு
Next