சித்திர ஆதிசங்கரர் காமாட்சியிடம் எல்லையற்ற பக்தி கொண்டனர் ஆசாரியர் அவள் வாழும் ஆலயத்தில் 'காமகோடிபீடம்'என

சித்திர ஆதிசங்கரர்

காமாட்சியிடம் எல்லையற்ற பக்தி கொண்டனர் ஆசாரியர். அவள் வாழும் ஆலயத்தில் 'காமகோடிபீடம்'என்ற மகத்தான சக்திபீடம் உண்டு. காஞ்சிபுரத்தில் தமக்கெனமையமான மடத்தை ஏற்படுத்திக்கொண்ட சங்கரர், அந்த இடத்திற்கு காமாட்சி அம்மனின் பீடத்தின் பெயரான காமகோடிபீடம் என்பதையே தமது மடத்திற்கும் வைத்துக்கொண்டார்.

பஞ்சலிங்கங்களில் எஞ்சிய யோகலிங்கத்தை தனது பீடத்தின் பூஜைக்கென வைத்துக்கொண்டார். இன்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸ்வாமிகளும் பூஜை செய்யும் சந்திர மௌலீசுவ ஸ்படிகலிங்கமே இந்த யோகலிங்கமாகும்.

காஞ்சி மடத்தில் ஜகத்குரு ஸ்ரீ சங்கரபகவத்பாதர்கள் ஞான ஆட்சி நடத்தி, காமாட்சியை வழிபட்டு வாழ்ந்து வந்தார்.

வேத மதத்தில் பல தெய்வங்களை வழிபடுகின்றோம். ஆனால் இவை முற்றிலும் வேறு வேறானவை அல்ல. ஒரே பரமாத்மாதான் இப்படிப் பல தெய்வங்களாகி இருக்கிறார்.

<< Prev. page * Next page >>