சித்திர ஆதிசங்கரர் இவ்விதமான பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து, பின்னர் கங்கா நதி பாயும் சமவெளியை அடைந்தார்

சித்திர ஆதிசங்கரர்

இவ்விதமான பல ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து, பின்னர் கங்கா நதி பாயும் சமவெளியை அடைந்தார். அங்கே தம் சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தினார். அவர்களுக்கு உபதேசத்தின் மூலம் பல அரிய தத்துவங்களை விளக்கினார். பிற மதவாதிகளுடன் வாதம் செய்து அவற்களை வென்று வேதாந்தக் கருத்துக்களை வேரூன்றச் செய்தார் நம் ஆசாரியர். பாரத தேசமெங்கும் சுற்றி அத்வைதத்தைப் பரப்பிய ஸ்ரீசங்கரர், வடகோடியிலிருந்து தெற்கே வந்து சிதம்பரத்தை அடைந்தார். அங்கே பஞ்சலிங்கங்களில் ஒருவரான மோட்சலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்.

மீண்டும் சிருங்ககிரிக்கு எழுந்தருளினார் நம் ஜகத்குரு சங்கராச்சாரியார். பரமசிவன் அளித்த பஞ்சலிங்கங்களில் போகலிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார்.

பிறகு தமது உலக வாழ்வை நிறைவு செய்யத் திருஉள்ளம்கொண்டு, ஏழு மோட்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சியம்பதிக்கு விரைந்தார்.

காஞ்சி எல்லையிலேயே மன்னன் ராஜசேனன் ஆசாரியரைப் பணிந்து வரவேற்றான். சர்வ தீர்த்த கரையிலுள்ள விசுவேசுவரர் ஆலயத்தில் தங்கினார் நம் ஆசாரியர்.

<< Prev. page * Next page >>