ஆசார்யாள் விதிக்கும் ஆசாரியக் கடமை.

ஆசார்யாள் விதிக்கும் ஆசாரியக் கடமை

ஸரி, ஆசார்யாள் ஒரு ஆசார்யனுக்குச் சொல்லியுள்ள அந்த நியமம் என்ன?

'அதுதான் சொன்னீர்களே, 'யதாவத் வித்யை கற்பிக்கணும்' என்று!' என்று கேட்கலாம். அப்படிக் கற்பிப்பது, பாடம் சொல்லிக்கொடுப்பது உபாயந்தான், means-தான். தற்கால ஆசிரியர்களின் கடமை அப்படித்தான் பாடம் சொல்லிக் கொடுப்பதோடு முடிந்துவிடுவதாக அமைந்து விட்டது. ஆனால் அதல்ல நிஜமான ஆசார்யனின் கடமை. கற்றுக்கொண்ட பாடத்தின் ப்ரயோஜனத்தை மாணவன் தன்னுடைய வாழ்க்கையில் ப்ரத்யக்ஷமாகக் காணும்படிச் செய்வதே நிஜ ஆசார்யனின் கடமையாகப் பூர்வ காலங்களில் கருதப்பட்டது. கற்ற வித்யையால் மாணவன் சொந்த வாழ்க்கையில் ப்ரயோஜனம் அடைய வேண்டும். அதுதான் லக்ஷ்யம், இப்படி ஒரு குரு யதாவத்தாக ப்ரஹ்ம வித்யை போதிக்கிறாரென்றால் அது சிஷ்யனை ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்றுகிற லக்ஷ்யத்திற்கு உபாயமாகச் செய்யப்படுவதே. அவருடைய லக்ஷ்யம் அவனைக் கரை ஏற்றுவது. அது 'உபேயம்'. அதற்கு வரியான 'உபாயம்' கற்றுக்கொடுப்பது. இந்த உபாயத்தால் சிஷ்யன் லக்ஷ்யத்தை அடைந்தேவிடுமாறு குரு பண்ணுவதைத்தான் அவரது கடமையாக இங்கே ஆசார்யாள் சொல்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குரு அறிந்த அனைத்தும் சீடனுக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஸ   த்குருவும் சிஷ்யனும்
Next