'உ': திருமாலின் வடிவம்

உ' திருமாலின் வடிவம்

' ('குரு' என்பதிலுள்ள ஒலிகளில்) 'உ' பாக்கி. முதலெழுத்தான் 'கு', கடைசி எழுத்தான 'ரு' இரண்டிலும் 'உ' சேர்ந்திருக்கிறதால் அதற்கு விசேஷம் இருக்கவேண்டும். அதற்கு என்ன அர்த்தம், விளக்கம் சொல்லியிருக்கிறது?

உகாரோ விஷ்ணுரவ்யக்த :

உகாரம் விஷ்ணு ஸ்வரூபம்

ப்ரணவம் த்ரிமூர்த்தி ஸ்வரூபம். அது அ-உ-ம் என்ற மூன்று எழுத்தால் ஆனது. அ+உ =ஓ. 'ஓ'வுக்கு அப்புறம் 'ம்' - மகாரம். இந்த மூன்று எழுத்துக்கள் முறையே ப்ரம்ம, விஷ்ணு, ருத்ரர்களைக் குறிப்பவை. அதாவது அ என்பது ப்ரம்மா, உ- விஷ்ணு. அதுதான் நமக்கு விஷயம், ம-ருத்ரன் 'ம்' என்பதை நீட்டி முடிப்பதில் இன்னும் இரண்டு ஸ¨ட்சம சப்தங்கள். அவற்றுக்கு சப்தம் என்ற பேரே சொல்வதில்லை, வேறே இரண்டு பேர்கள். அவை (முறையே) மஹேச்வரன், மாயை என்றெல்லாம் சொல்கிற மாயா சக்தியையும், அந்த சக்தியும் போய் ஒடுங்கி விடுகிற ஸதாசிவம் என்ற பரம ஸத்யத்தையும் குறிக்கிறவை. அது இருக்கட்டும்... கு-ரு என்று இரட்டித்து வருகிற உகாரம் விஷ்ணு ஸ்வரூபம்.

உகாரோ விஷ்ணுரவ்யக்த:- 'விஷ்ணு:அவ்யக்த:' 'உகாரமென்பது அவ்யக்தமாக இருக்கப்பட்ட விஷ்ணு ஸ்வரூபம்'.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'ர': பாபத்தைப் பொசுக்குவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'அவ்யக்தம்' என்பது என்ன?
Next