'ர': பாபத்தைப் பொசுக்குவது

'ர' : பாபத்தைப் பொசுக்குவது

குரு என்பவர் சிஷ்யனுக்கு ஸித்தி தருகிறார் என்பதை 'க' காட்டுகிறது. அவனுடைய பாபத்தை அவர் போக்குகிறார் என்பதை 'ர' காட்டுகிறது. அக்னியை மூட்டி பஸ்மீகரம் பண்ணுகிறாற்போல இவனுடைய பாபத்தை அவர் பஸ்மமாக்கிவிடுகிறார். 'ரம்' என்பதுதான் அக்னிபீஜம்.

ஒரு ககாரமும், ஒரு ரேபமும், இரண்டு உகாரமும் சேர்ந்து உருவாகியுள்ள 'குரு' என்ற வார்த்தையில் 'க'வுக்கும் 'ர'வுக்கும் விளக்கம் கொடுத்தாயிற்று:க-ஸித்தி தருவது, ர-பாப ஹரணம்;பாபத்தை அக்னியாக பஸ்மம் பண்ணுவது.

பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றின் சக்தியையும் உள்ளே அடக்கி வைத்துக் கொண்டிருப்பதாக ஐந்து அட்ரங்கள் - பீஜாட்சரங்கள் என்று பீஜம் (என்றால்) விதை என்று தெரிந்திருக்கும். ஒரு சின்னூண்டு பீஜம் எப்படி ஒரு மஹா வ்ருக்ஷத்தை உள்ளே அடக்கிக் கொண்டிருக்கிறதோ அப்படி தெய்விகமான சக்திகளை அடக்கிக் கொண்டிருக்கும் அட்சரங்களே பீஜாட்சரம் என்கிறவை. அப்படிப் பஞ்ச மஹாபூதங்களுக்கு ஒவ்வொன்று உண்டு. ப்ருத்விக்கு 'லம்'. அப்புக்கு 'வம்'. தேயுவுக்கு 'ரம்' - தேயு என்கிற தேஜஸ் அக்னிதான். வாயுவுக்கு 'யம்'. ஆகாசத்திற்கு 'ஹம்'.

ரேபம் அக்னி தத்வம். அக்னி ஒரு வஸ்துவை பஸ்மீகரம் பண்ணுகிற மாதிரி ரேபம் பாபத்தைப் பொசுக்கி விடும். தாரக நாமம் என்று கொண்டாடப்படுகிற ராம நாமா அந்த ரேபத்தில்தான் ஆரம்பிக்கிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is ஸம்ஸ்கிருத 'ர'வும் தமிழ் 'ர'-'ற'க்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'உ': திருமாலின் வடிவம்
Next