அனைத்து மத மக்களும் சகோதரச் சமூகமாக

அனைத்து மத மக்களும் சகோதரச் சமூகமாக

மதத்தைக் காப்பது போன் விஷயங்களில் அரசாங்கம் செய்வதைவிட மக்களே செய்யக்கூடியதுதான் மிக அதிகம். முதலில் ஒவ்வொரு மதத்திலும் விசுவாசமாக ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அம்மதத்திலுள்ள பிறரையும் தட்டி எழுப்ப வேண்டும். இதற்கு ஹிந்து மதத்திலேயே அதிகத் தேவை இருக்கிறது. ஏனெனில், பிற மதஸ்தர் யாவருமே தூங்காமல் விழிப்புடன்தான் இருந்து வருகின்றனர். இவ்வாறு எந்த ஒரு மத சமுதாயமும் முழுதாக அம்மதத்திடம் விசுவாசத்துடன் ஒழுகச் செய்ய அந்தந்த மதத்தினரே விசுவாசத்துடன் ஒழுகச் செய்ய அந்தந்த மதத்தினரே முயல வேண்டும். மேலும், ஒவ்வொரு மதத்தினரும் பிற மதத்தினரே முயல வேண்டும், மேலும், ஒவ்வொரு மதத்தினரும் பிற மதத்தினருக்கும் தமது நியாயமான உரிமைகளையும், வாதங்களையும் அன்போடு எடுத்துச் சொல்லி, அவர்களது ஒப்புதலைப் பெற முயன்று பார்க்க வேண்டும். ஏனெனில் இந்நாட்டின் பிரஜைகள் எல்லோரும் எம்மதத்தினராயினும் சகோதரச் சமூகமாகச் சேர்ந்து வாழ வேண்டியவர்கள். அப்படியின்றி மதபேத உணர்வினால் பரஸ்பரச் சர்ச்சையிலும் சண்டையிலும் ஈடுபட்டோமாயின், நமது சொந்த வாணாளும் வீணாகி, நாட்டின் அமைதியும் குலைவது தவிர ஒரு பயனும் விளையாது. ஆகையால், முதற்கண் பிற மதத்தினர் என்றவுடனேயே, எதிர்ப்புணர்ச்சியோடுதான் வாதிடுவது என்றில்லாமல், நேயத்துடனேயே அணுகி, தங்களுக்குள் நியாயமான உரிமைகளைப் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் பார்ப்பது என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதற்கு நாட்டின் மிகப் பெரும்பாலோராக உள்ள ஹிந்து மதத்தோரே வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு சொல்லுவது, அம்மதத்திலுள்ள மானரோஷ உணர்ச்சிகள் மிக்கோருக்கு அவ்வளவாக ஏற்புடையதாக இராதுதான். காரணம் என்னவெனில், பொதுவாகச் சிறுபான்மையினர்தான் பெரும்பான்மையினரிடம் உரிமைகளை இழந்து அவர்களிடம் குழைந்து செல்வதாக இருக்கும். எவருக்குப் பெரும்பான்மையோ அவருக்கு பலமும் பெரியதாயிருக்குமாதலால் இதுவே உலக இயற்கை. ஆனால் விந்தையாக இந்நாட்டிலோ இதற்கு மாறான நிலையாக உள்ளது!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is சுதந்திரப் போராட்டம் செய்யத் தவறிய விஷயம்;ஹிந்து மதம் கண்ட பாதிப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  இந்தியாவில் சிறுபான்மை - பெரும்பான்மையினரின் விசித்திர நிலைமை
Next