குரு-சிஷ்யர் : இருபெரும் தர்மங்களின் உருவகம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

குருவே ஈச்வரன் என்று ஏக பக்தி செய்யாமல் ஈச்வரன், குரு என்று இரண்டு பேரையும் ஒருவன் பக்தி செய்யும் போதும் இப்படியெல்லாம் இவன் செய்யும் சுச்ருஷை, ஸாதனை ஆகியவற்றோடு அவர் பல தினுஸில் இவனுடைய behalf -ல் செய்வதும் சேருமென்றாலும், ‘அவரொருவரே ஈச்வரன் உள்பட ஸகலமும்’ என்று அவன் இருக்கும்போதே அவருடைய ஸஹாயம் பூர்ணமாகக் கிடைக்கும். அவர் இப்படிச் செய்வது தன்னிடமே அவன் ஏகபக்தி செய்கிறானே என்பதில் தற்பெருமையால் அல்ல. எல்லா தர்மங்களுக்கும் மேலாக சரணாகத ரக்ஷணத்தைத் தானே சொல்லியிருக்கிறது? அந்த தர்மபரிபாலனார்த்தமே அவர், தன்னையே எல்லாமாக நினைத்து சரணாகதி பண்ணிவிட்ட சிஷ்யனின் உத்தாரணத்துக்காக தாமும் தம்மாலான எல்லாம் பண்ணுவார்.

இரண்டு பெரிய தர்மங்கள். ஒன்று சரணாகத ரக்ஷணம், இன்னொன்று செய்நன்றி மறவாமை. முதலாவதின் ‘பெர்ஸானிஃபிகேஷ’னாக – ‘உருவகமாக’ – இருப்பது குருவின் லக்ஷணம். இரண்டாவதின் ‘பெர்ஸானிஃபிகேஷ’னாக இருப்பது சிஷ்யனின் லக்ஷணம்.

சரணாகத ரக்ஷணத்தின் உச்சிக்குப் போய் சிஷ்யனைக் காப்பாற்ற குரு கடமைப்பட்டிருப்பது, ‘அவரே ஸகலமும், ஈச்வரன் உள்பட’ என்று சிஷ்யன் நினைக்கும்போதுதான்.

அதனால் நான் சொன்ன மூன்று பாவங்களில் ஒன்றாக அநன்யமான குரு பக்தி செய்யும்போது இவனுடைய ஸாதனா பலம் ஒரு பங்கு என்றால் குரு இவனுக்காகச் செய்வது நூறு பங்கு, ஆயிரம் பங்காக இவனை பலப்படுத்தி ஒரே தூக்காகத் தூக்கிவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குருபக்திக்கு ஈசன் செய்யும் அருள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  எந்த பாவத்தினாலும் ஈசனருள் பெறலாம்
Next