திருப்புலியூர் (குட்டநாடு)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

மலைநாட்டுத் திருப்பதிகள்

திருப்புலியூர் (குட்டநாடு)

செங்கண்ணூரிலிருந்து (மார்க்கம் 82 காண்க) மேற்கே 3 1/2 மைல் தூரத்திலுள்ளது. வண்டியில் போகலாம். பஸ் வெகு அரிதாகப் போகிறது. வசதி ஒன்றுமில்லை.

மூலவர் - மாயப்பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - பொற்கொடி நாச்சியார்.

தீர்த்தம் - ப்ரஜ்ஞாஸரஸ், பூஞ்சுனை தீர்த்தம்.

விமானம் - புருஷோத்தம விமானம்.

ப்ரத்யக்ஷம் - ஸப்தரிஷிகள்.

விசேஷங்கள் - இக்கோவிலை பீமன் ஜுர்ணோத்தாரணம் செய்ததால் பீமசேனனால் ப்ரதிஷ்டை என்றழைக்கப்படுகிறது. CH குமாரன் வ்ருஷாதர்பி அரசாண்ட போது, க்ஷ£மம் உண்டானதாகவும், அப்போது அங்கு வந்த ஸப்தரிஷிகளுக்கு அரசன் தானம் செய்வதாகச் சொல்ல, அரசர்களிடம் தானம் பெறுவது மஹாபாபம் என்று ரிஷிகள் போக, மந்திரிகள் மூலம் பொன் கலந்த பழங்களை அனுப்ப, ஞானத்ருஷ்டியால் ரிஷிகள் அதை உணர்ந்து மறுக்க, அரசன் ஹோமம் செய்து க்ருத்யை என்ற மாரக ஸ்த்ரீயை உண்டாக்கி ரிஷிகளைக் கொல்ல ஏவ, பகவான் இந்திரனை அனுப்பி க்ரூதயைக் கொன்று ரிஷிகளை ஸ்வர்க்கத்துக்கு அழைத்துப் போய் ஸுகாநுபவம் செய்துவைத்ததாக ஸ்தல புராணம். ஸப்தரிஷிகள் ஸ்ரீமந்நாராயணன் தான் தேவதைகளுக்குள் உத்தமன் என்று பரதேவதா நிர்ணயம் செய்ததால் பகவான் ப்ரத்யக்ஷமாகி மாயப்பிரானாக காட்சி கொடுப்பதாக ஐதீஹம்.

மங்களாசாஸனம் -

நம்மாழ்வார் - 3535 - 45

திருமங்கையாழ்வார் - 2673 (71)

மொத்தம் 12 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவாறன்விளை (ஆரம்முளா)
Next