திரு ஊரகம் (காஞ்சீபுரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திரு ஊரகம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீபுரத்தில் பஸ் நிலையத்திற்கு ஸமீபமாகவே உள்ளது. (மார்க்கம் 43 காண்க)

மூலவர் - திருவிக்ரமன், உலகளந்த பெருமாள், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - பேரகத்தான்.

தீர்த்தம் - அமுதவல்லி நாச்சியார், அம்ருதவல்லி.

தீர்த்தம் - நாக தீர்த்தம் (சேஷ தீர்த்தம்) .

விமானம் - ஸாரஸ்ரீகர விமானம்.

ப்ரத்யக்ஷம் - ஆதிசேஷன்.

விசேஷங்கள் - இங்கு ஊரகம் (பேரகம்) தவிர நீரகம், காரகம், கார்வானம் ஆகிய 3 திவ்ய தேசங்களின் பெருமாள்கள் எழுந்தருளியிருக்கின்றனர். பலிசக்ரவர்த்தி பகவானைப் பணிந்து பகவான் த்ருவிக்ரமாவதாரம் செய்தபொழுது பகவான் திருவடியின்கீழ் அகப்பட்டுக் கொண்டபடியால் திருவிக்ரம கோலத்தை ஸேவிக்க முடியவில்லை. ஆகையால் திருவிக்ரம கோலத்தை ஸேவிக்க வேண்டும் என்கிற பிரார்த்தனைக்கிணங்க ஸத்யவ்ரத ஷேத்ரத்தில் (காஞ்சீபுரத்தில்) அந்த அவதாரத்தை எடுத்துக் காண்பித்ததாக உலகளந்த பெருமாள் கோவில் வரலாறு. உலகளந்த பெருமாள், ஊரகம் இரண்டும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கருதப்படுகிறது. மிகப் பெரிய திருவுருவத்தை நிமிர்ந்து ஸேவிக்க முடியாமல் போன மஹாபலிக்காக உலகளந்த பெருமாள் ஸந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஸந்நிதியில் எம்பெருமான் ஆதிசேஷனாய் திருக்கோலம்கொண்டு ஸேவை ஸாதித்ததாக ஊரக ஷேத்திர வரலாறு.

மங்காளசாஸனம் -

திருமழிசையாழ்வார் - 814, 815

திருமங்கையாழ்வார் - 2059, 2064, 2673 (70) , 2674 (128)

மொத்தம் 6 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திரு நிலாத்திங்கள் துண்டம் (காஞ்சீபுரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவெஃகா (காஞ்சிபுரம்)
Next