திரு நிலாத்திங்கள் துண்டம் (காஞ்சீபுரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திரு நிலாத்திங்கள் துண்டம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உட்ப்ராகாரத்தில் மிகச்சிறிய ஸந்நிதியாக உள்ளது. (மார்க்கம் 43 காண்க) . சிவன்கோவில் குருக்கள்தான் பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கிறார். புஷ்கரிணி இப்போது இல்லை.

மூலவர் - நிலாத்திங்கள் துண்டத்தான், சந்த்ர சூடப்பெருமாள், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - நேர்ஒருவரில்லா வல்லி, நிலாத்திங்கள் துண்டத் தாயார்.

விமானம் - புருஷஸ¨க்த விமானம் ( ஸ¨ர்ய விமானம்) .

ப்ரத்யக்ஷம் - சிவன்.

விசேஷங்கள் - இங்கே ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தவம் செய்ததாகவும், பார்வதியின் தவத்தை சோதிக்க சிவன், மாமரத்தை எரிக்க, பார்வதி, வாமனனைப்ரார்த்திக்க, வாமனர் சங்கசக்ரகதாபாணியாக அம்ருத கிரணங்கள்கொண்டு மாமரத்தைத் தழைக்கச் செய்து, பார்வதியும் தாபம் தீர்ந்து, தவம் செய்ததாகவும், பார்வதியின் தாபத்தை துண்டித்தபடியால் பெருமாளுக்கு 'நிலாத்திங்கள் துண்டத்தான்' என்ற பெயர் உண்டாயிற்றாம்.

சிவன், தன் தலையிலுள்ள கங்கையை பார்வதியின் தவத்தைக் கெடுக்க ஏவ, கங்கையும் வேகமாக வர, பார்வதி தன் தமக்கை என்று கருதி வணங்கியும் லக்ஷ்யம் செய்யாததால் மணலினால் செய்த லிங்கம் கரையாமல் இருக்க, பார்வதி அதை அணைத்துக்கொள்ள, சிவன் சந்துஷ்டனாகி அந்த லிங்கத்தில் ஆவிர்பவித்ததாக ஐதீஹம். பார்வதி வேண்டுகோளின்படி வாமனர் அவள் பக்கத்தில் இன்னும் இருப்பதாக புராண வரலாறு.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 2059 - 1 பாசுரம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருப்பாடகம் (காஞ்சீபுரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திரு ஊரகம் (காஞ்சீபுரம்)
Next