ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்

 மலர்: 23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2


ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்

[ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்களால் அருளிய இந்த ஸ்தோத்ரத்தை தினம் பாராயணம் செய்தால் பாபங்கள் போய் துக்கங்கள் விலகி மங்களம் உண்டாகும்]
பஜே வ்ரஜைக மண்டனம் ஸமஸ்த பாபகண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்சனம் ஸதைவ நந்தநந்தனம் I
ஸுபிச்ச குச்சமஸ்தகம் ஸுனாதவேணு ஹஸ்தகம்
அனங்கரங்க ஸாகரம் நமாமி க்ருஷ்ண நாகரம் II
இடைச்சேரிக்கு அலங்காரமானவரும், எல்லா பாவங்களையும் போக்குகிறவரும், எப்பொழுதும் தனது பக்தர்களின் மனதை சந்தோஷப்படுத்துகின்றவரும், நந்தகோப புத்திரரும், அழகிய மயில் தோகையை சிரஸ்ஸில் தரித்தவரும் இனிமையான சப்தத்துடன் கூடிய புல்லாங்குழலை கையில் கொண்டவரும் மன்மதனுடைய விளையாட்டிற்கு இருப்பிடமானவரும் மதுரா நகரத்தின் பாக்யமுமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

மனோஜகர்வமோசனம் விசாலலோல லோசனம்
விதூதகோபலோசனம் நமாமி பத்மலோசனம் I
கராரவிந்த பூதரம் ஸ்மிதாவலோக ஸுந்தரம்
மஹேந்த்ரமானதாரணம் நமாமி க்ருஷ்ணவாரணம் II
மன்மதனுடைய கர்வத்தை போக்குகிறவரும், நீண்டதும் துரு துருத்த கண்களை உடையவரும் கோபர்களுடைய துக்கத்தை போக்குகின்றவரும் செந்தாமரைக் கண்ணனுமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன். தாமரை போன்ற கைகளால் கோவர்தன மலையைத் தூக்கியவரும் புன்சிரிப்போடு கூடிய பார்வையால் அழகு வாய்ந்தவரும் இந்திரனுடைய கர்வத்தைப் போக்கியவருமான ஸ்ரீ கிருஷ்ணனாகிற மதகஜத்தை நமஸ்கரிக்கிறேன்.

கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்ட மண்டலம்
வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி கிருஷ்ணதுர்லபம் I
யசோதயா ஸமோதயா ஸகோபயா ஸநந்தயா
யுதம் ஸுகைகதாயகம் நமாமி கோபநாயகம் II
கதம்ப (அடம்ப) புஷ்பத்தைக் காதில் குண்டலமாக தரிசித்தவரும் மிக அழகிய கன்னப்ரதேசங்களை உடையவரும் கோப கன்னிகைகளுக்குச் சிறந்த நாயகனும், கிடைப்பதற்கரிதான ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன். கோபர்களுடன் கூடியவரும் நந்தகோபருடன் கூடியவரும், சந்தோஷமான யசோதையுடன் கூடியவரும் சிறந்த சுகத்தை அளிப்பவரும் கோப நாயகருமான ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

தைதவ பாதபங்கஜம் மதீயமானஸே நிஜம்
ததானமுத்தமாலகம் நமாமி நந்தபாலகம் I
ஸமஸ்ததோஷ சோஷணம் ஸமஸ்தலோக போஷணம்
ஸமஸ்தகோப மானஸம் நமாமி க்ருஷ்ணலாலஸம் II
எனது மனதில் தனது சரணகமலத்தை எப்பொழுதும் வைத்த வரும் சிறந்த அலகத்தை உடையவருமான நந்தகோபருடைய குழந்தையை நமஸ்கரிக்கிறேன். எல்லா தோஷங்களையும் அடியோடு போக்குகின்றவரும் எல்லா உலகங்களையும் காப்பவரும் எல்லா கோபர்களுடைய மனதிலும் குடி கொண்டவருமான விளையாடும் க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

புவோ பராவதாரகம் பவாப்திகரண தாரகம்

யசோமதீகிசோரகம் நமாமி துக்தசோரகம் I
த்ருகந்தகாந்த பங்கினம் ஸதாஸதாலஸங்கினம்
தினே தினே நவம் நவம் நமாமி நந்தஸம்பவம் II
பூமியின் பாரத்தைப் போக்கியவரும் ஸம்ஸாரமாகிற (ஜனன மரணமாகிற) ஸமுத்திரத்தைத் தாண்ட வைப்பதில் ஓடக்காரனாக இருப்பரும், யசோதையின் குழந்தையும் பாலைத் திருடுகின்றவருமான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கின்றேன். கடைக்கண்ணின் அழகை உடையவரும் எப்பொழுதும் ஸாதுக்களின் கூட்டத்தில் பற்றுள்ளவரும் தினந்தோறும் புதிது புதிதாகத் தோற்றமளிப்பவருமான நந்தகோபரின் புத்திரரை நமஸ்கரிக்கிறேன்.

குணாகரம் ஸுகாகரம் க்ருபாகரம் க்ருபாவரம்

ஸுரத்விஷந்திகந்தனம் நமாமி கோபநந்தனம் I
நவீனகோப நாகரம் நவீன கேலிலம்படம்
நமாமி மேகஸுந்தரம் தடித்ப்ரபால ஸத்படம் II
குணங்களுக்கு இருப்பிடமானவரும், சுகத்துக்கு இருப்பிடமானவரும், கருணையால் சிறந்தவரும், அசுரர்களை நாசம் செய்கின்றவருமான கோபாலனை நமஸ்கரிக்கிறேன். நகரத்தில் வஸிக்கும் புதிய இடையனும் புதிதான விளையாட்டுகளில் ஆசை கொண்டவரும் மேகம்போல் அழகு வாய்ந்தவரும் மின்னல் போன்ற பீதாம்பரத்தை தரிக்கின்றவருமான ஸ்ரீ க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

ஸமஸ்தகோப நந்தனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம் I
நிகாமகாம தாயகம் தருகந்தசாரு ஸாயகம்
ரஸால வேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம் II
எல்லா இடையர்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரும் பத்மம் போன்ற ஹ்ருதயத்திற்கு மோஹத்தைக் கொடுப்பவரும், கொடி வீட்டின் நடுவில் இருப்பவரும் பிரகாசிக்கின்ற சூரியன் போல் காந்தி வாய்ந்தவரும் விரும்பிய பொருளை அளிப்பவரும் கடைக் கண்ணை அம்பாகக் கொண்டவரும், மிக்க ரஸமாக வேணுகானம் செய்கின்றவரும் கொடி வீட்டிற்குத் தலைவனாகப் பிரகாசிக்கின்றவருமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

விதக்தகோபிகா மனோமனோக்ஞதல்ப சாயினம்

நமாமிகுஞ்சகானனே ப்ரவ்ருத்த வன்னிபாயினம் I
யதா ததா யதா ததா ததைவ க்ருஷ்ணஸத்கதா
மயாஸதைவ கீயதாம் ததாக்ருபா விதீயதாம் II
ப்ரணாமிகாஷ்டகத்வயம் ஜபத்ய தீத்ய ய: புமான்
பவேத்ஸ நந்தநந்தனே பவே பவே ஸுபக்திமான் II
ரஸிகைகளான கோபிகைகளின் மனமாகிற அழகிய கட்டிலில் படுத்திருப்பவரும், கொடி வீடுகளில் உண்டான தீயைக் குடித்தவருமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன். எப்பொழுது எப்படி க்ருஷ்ண சரிதம் நடந்ததோ அவ்வாறே நான் கானம் செய்யும்படி தாங்கள் அனுக்ரஹம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண நமஸ்கார ரூபமான இந்த இரண்டு அஷ்டகங்களையும் யார் படித்து ஜபிக்கிறானோ அவன் ஒவ்வொரு ஜன்மாவிலும் கிருஷ்ணனிடத்தில் சிறந்த பக்திமானாக விளங்குவான்.

Home Page