ஒளி படைத்த கண்களுக்கு… - Ayurveda Articles | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. Ayurveda Index
  4. ஒளி படைத்த கண்களுக்கு…
ஆயுர்வேதக் கட்டுரைகள்

ஒளி படைத்த கண்களுக்கு…

Sri Kanchi Kamakoti Peetham

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்


ஒளி படைத்த கண்களுக்கு…
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

கண் பார்வையின் வளத்தைக் குறைக்கும் சூழ்நிலையின் நடுவில்தான் நாம் இன்று வாழவேண்டிய நிர்பந்தம். உடல் சூடு, வெயில், நெருப்பு போன்ற புறக்காரணங்கள் அதிகரித்திருக்கும் போது அதைக் தணித்துக் கொள்ள உடனடியாக குளிர்ந்த நீரில் மூழ்குவதாலும், தூரத்திலுள்ள பொருட்களை உற்று நோக்குவது, தூக்கமின்மை, தும்பு, தூசு, புகை கண்ணிற்படுவதாலும், உண்ட உணவு செரிக்காமல் வாந்தியாகும் நிலையில் அதை அடக்குவதாலும், இரவில் அதிக அளவில் திரவ உணவைச் சாப்பிடுவதாலும், மலம்- சிறுநீர்- கீழ்க்குடல் காற்று அகியவற்றை பலவந்தமாக அடக்குவதாலும், தொடர்ந்தாற் போல் மிகவும் அழுவது, சினங்கொள்வது, துயரமுறுவது இவற்றாலும், தலையில் அடிபடுதல், அதிக அளவில் மதுபானம் அருந்துதல், பருவ காலங்களுக்குத் தகுந்தாற்போல் உணவு மற்றும் செயல்களைச் செய்யாதிருத்தலும், அதிகமான புணர்ச்சி, கண்ணீரை, வலியை அடக்குவதாலும், படுத்துக்கொண்டே தொலைக்காட்சியில் இருட்டில் நாடகம், சினிமா போன்றவை பார்ப்பது, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காதிருத்தல் போன்ற காரணங்களால் கண்ணில் புரை வளர்தல், பார்வை பலவீனம் ஆகிய உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கண் பாதுகாப்பில் முக்கியமாக வைகறை துயிலெமுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முந்தைய ஒரு மணிநேரம் அருணோதய வேளை. அதற்கு முன் ஒரு மணி நேரம் ப்ரம்ஹமுஹூர்த்தம் எனப்படும். அவ்வேளையில் எழுந்து சுத்தமான தண்ணீரையும் பருகுதல், பல் தேய்த்து வாயில் நீர் நிரப்பிக் கொண்டு கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவுதல், தினசரி அல்லது அடிக்கடியாவது தலைக்கும் பாதங்களுக்கும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், ராத்திரி தூங்கும் முன் உள்ளங்கால் நடுவில் பசுநெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், உணவில் பொன்னாங்கண்ணி, ஊசிப்பாலைக்கீரை, பசுவின் பால் போன்றவை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் முதலிய எளிய முறைகள் கண்களுக்கு விசேஷ பலம் தரும் வழிகளாகும்.

Home Page ஆயுர்வேதம்