கௌமாரம்

கௌமாரம்

இந்துக்களுக்கு ஷண்மதத்தை ஸ்தாபித்து அதற்கான பூஜை வழிமுறைகளையும் ஆதிசங்கரர் வகுத்தார் என முன்னமையே சொல்லப்பட்டுள்ளது. தைவப்படையின் ஸேனாதிபதியாகிய சுப்ரமண்யரை பிரதான தெய்வமாகக் கொண்ட வழிபாட்டு முறைக்கு கௌமாரம் எனப்பெயர்.

தமிழ் பேசும் நல்லுலகிலும் கீழ்தேசங்களான போர்னியோ, ஸுமத்ரா, ஜாவா, இலங்கை போன்ற நாடுகளிலும் சுப்ரமண்யக் கடவுள் மிகவும் பிரசித்தமானவர்.

இவருடைய வழிபாடு உணர்ச்சிபொங்க மேற்கொள்ளப் படுகிறது. பக்தர்கள் காவடிகள் எடுத்து ஆடும்போது உலகினை மறந்து இருக்கின்றனர். தற்காலிகத்திற்கு கடவுள் உணர்வின்றி வேறு ஏதும் இல்லாமல் கடவுளால் ஆட்கொள்ளப்பட்டவர்களாகி விடுகின்றனர்.

தென் இந்தியாவில் தமிழில் ' முருகன்'என அறியப்படும் சுப்ரமண்யரின் வழிபாடு முதன்முதலில் அகத்திய முனிவரால் ஏற்படுத்தப்பட்டது என்பது வழிவழியாக வந்துள்ளது. சங்க காலத்தில் (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு) புலவர் நக்கீரர் சுப்ரமண்யரின் சிறந்த புகழ்மிக்க பக்தர், தன்னுடைய திருமுருகாற்றுப்படையில் சுப்ரமண்யர் தன் பக்தர்களுக்கு அருள் பாலித்ததை காட்டும் வகையில் ஆறுபடைவீடு என்று அழைக்கப்படும் ஆறு புனித தலங்களை தேர்ந்தெடுத்துக் காட்டியுள்ளார். இத்தலங்கள் எண்ணிக்கையில் ஆறாக இருப்பதால் இதற்கு அறுபடை வீடுகள் எனப்பெயர். இவற்றிற்கு தனித்தனியாக பல்வேறு தெய்வீக சக்திகள் உள்ளன என்று அறியப்படுகிறது.

அறுபடை வீடுகள் கீழ்க்கண்டவாறு-

1. திருப்பரங்குன்றம் - உல்லாசம்- ஆனந்தமிகுதி

2. திருச்செந்தூர் - நிராகுலம் - கவலையின்மை

3. பழனி யோகம் தவநிலை

4. ல்வாமிமலை ஹிதம் - சுகமளித்தல்

5. திருத்தணி ஸல்லாபம் - இன்பம்

6. பழமுதிர்சோலை - அற்புதம்



*

*


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  -   நமது பாரம்பரியம்  is காணாபத்யம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  -   நமது பாரம்பரியம்  is  சைவம்
Next