விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 13 மகோற்கடர் ஓகைபெறுகாசிபர் திருப்பன்னியதிதிசெய்யுயர்தவத்தொருமைந்தனா யுற்றுமுலையுண்டுவளர்நாளன்னலாரிக்லொர

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

13. மகோற்கடர்

ஓகைபெறுகாசிபர் திருப்பன்னியதிதிசெய்யுயர்தவத்தொருமைந்தனா

யுற்றுமுலையுண்டுவளர்நாளன்னலாரிக்லொருங்கறுத்துபநயத்தில்

வாகைபெறுசுரர்முனிவர்கையடைத்திருநாமமகிழ்புசீரருள்வழங்கி

வண்காசிவேந்திடஞ்சென்றெதிர்நாரந்தகன்மார்பிடந்தாவிகொண்டாங்

கீகையிலவன்முனோன்றேவாந்தகன்போருடன்றுவரவிரதமேறி

யிபமுகங்கொண்டொடிமருப்பினவனையுமழித்தினிதுதவுதருமதத்தன்

றோகையர்கடமைமணந்தரசனமுதோடூர்விருந்துண்டநிருபர்ச்சுதன்

சுபமன்றனிறைவேற்றியருண்மகோற்ரடரெனக்சொற்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

அங்க தேசத்தைச்சார்ந்த காத்திரபுரியில் ரெனத்திர கேது வென்னு மோர்வேதியன் சாரதை என்பவளை மணந்து இல்லறம் வழுவற வழுநாளில் இரட்டைப் பேறாகவுதித்த-தேவாந்தகன்-நராந்தகனென்னும் பெயரையுடைய-பிள்ளைகளிருவர்க்கும் உபநயனாதி சடங்கு முடித்து-வேதாப்பியாசம் செய்வித்து வருநாளில்-நாரதமுனிவர் அங்குவர-அவரை ரெனத்திரகேது பூஜித்துபசரித்து-தன்பிள்ளைகளிருவரையும் பணிவிக்க-அவர்-அம்மக்களிருவரும் பெரும்பே றெய்தும்படி பஞ்சாக்கரமுபதேசித்துப் போக-அத்தேவாந்தகன்-நராந்தகனென்னு மிருவரும்-தாய்தந்தை யரிசைவா லோர்வனஞ் சென்று-அங்கு சிவபெருமானை நோக்கி-பதினாயிரவருடம் அரியதவம் செய்கையில்-உமாபதியும் அருள்சுரந்து பிரத்தியக்ஷமாக-கண்டவவ்விருவரும் பணிந்தெழுந்து துதித்து-மூவுலகாளும் வாழ்வும்-மாளாவரமும் வேண்டப்-பெருமானும் அவ்வாறே வரங்களையும் தெய்வப்படைகளையுமருளி-கணேசர் தவிர உங்களை வெல்லுநரில்லையெனச் சொல்லிப்போக-பின்பு தேவாந்தகன்-ஸ்வர்க்க லோகஞ் சென்று இந்திரனை வென்று அவ்வுலகாட்சி பெற்று-பிரமலோகம்-வைகுந்த முதலிய பதங்களினும் தன்னாணை செல்லவும்-தேவர்க ளெல்லாம் தன்னை வணங்கவும் சகலசம்பத்தோடு மரசுபுரிந் திருந்தான், நராந்தகன்-அசுரர்களைப் படைத்துணை கொண்டு-பூமிமுழுதும் வென்று-பாதலத்தை சுவாதீனஞ் செய்து-ஆதிசேடனைச் சிறைப்படுத்தி-முனிவர்கள் முதலாயினோரையும் தேவர்கட்கு அவிப்பாகம் தரவொட்டாமல் வேள்வி முதலியவற்றைத் தடுத்து காவற்குட்படுத்தி அரசு செய்து வருகையில்-அவ்விருவர்களு மாதா பிதாக்களால் குலக் கன்னியரிருவரை மணம் செய்வித்தசின்னாளில்-பலகொடுமையான பிள்ளைகளைப் பெற்று களித்திருக்கு நாளில்-அசுரர்கள் நாளுக்கு நாளோங்க-தேவர்கள் மிகவும் ஒடுங்கி வருகின்றதையும் கண்டு-அவர்கண் மாதாவான அதிதியென்பவள் மிகவுமனவருத்தமுற்று-அவ்வவுணரை யழித்து தன்மக்களாகிய தேவர்கள் துயர் தீர்க்கும்படியான வோர்புத்திரனை வேண்டி தன்கணவராகிய காசிப முனிவரைப் பிரார்த்திக்க-அவரிரங்கி-அவுணர்கள் பெற்றிருக்கும் சிவானுக்கிரகத்தையும்-தமக்கு கணேசர் முன் தந்திருக்கும் வரத்தையும் யோசித்து-அவ்வதிதிக்கு, கணேசப்பிரான் பெருமையைக் கூறி-அக்கடவுளே உனக்குப் புத்திரராவராதலால் இதையனுட்டிப் பாயாக வென்று-பிரணவ பல்லவமும் நமோநதமும் கூடிய ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை யனுக்கிரகிக்க-அவளும் அதைப் பெற்றுக் கொண்டு வேறொர் தனியிடம் சென்று தியான பூர்வமாய் நூறாண்டு வரையிற்றவஞ் செய்ய-விநாயகருமவள்- தவத்தினுக்கிரங்கி-ஜோதிமயமாகத் தரிசனை கொடுத்தருள-கண்ட அதிதி-அத்திருமேனியளி பார்க்கவாற்றாது முறையிட-அவள் காணுமாறினிய கோலத்தோடு தோன்றி-வேண்டுவர- மளித்தெழுந்ருளினர்-பின்னர்-துஷ்டர் பாரத்தானொந்த நிலமகட்கும்-கணேசரைத் துதிசெய்த பிரமன் முதலிய தேவர்கட்கும் அசரீரி அபயம் கூறித்

தேற்றினளாக-ஓர்நாள்-அதிதி-தன்னியமப்படி-விநாயக ரர்ச்சனையை முடித்து அதிக ஆராமையோடு துதிக்க-பெருமான்-அனந்த முடிகளும் கைகளும் திருவடிகளு முடைய விசுவமூர்த்தியா யெழுந்தருளி முன்னிற்க-அஃதெடுக்க வளர்க்க விசைவாயிராமைகண்டு அவள்-குழந்தை வடிவோடு வரும்படி பிரார்த்திக்க, அவ்வாறே பெருமானெழுந் தருளலும்-அங்ஙனே யவளெடுத்து தனது தனத்திழி பாலைப் புகட்டி மகவாகக் கொள்ள-அவ்வற்புதத்தைக் கண்ட காசிபர் மனக்களிப்புற்று-சாதகமருமாதிசெய்து மகோற்கடரென நாமகரணம் சாற்றி வளர்த்து வருநாளில்-வசிட்ட வாமதேவராதி பலமுனிவரும் வந்து பிள்ளைப் பெருமானைப் பணிந்து புகழ்ந்து போக-அவர்கட்கருள் வழங்கி ஓர்வருட வகவையுயராகலும்-இரத்த மழை முதலிய வுற்பாதங்களைக் கண்ட நராந்தகனஞ்சி-சோதிடரா லுண்மை யுணர்ந்து-விநாயகப் பெருமானை வதை செய்யும் படி விரசையெனும் அசுர ஸ்ரீயை ஏவ-அவளும் சென்று கணேசப்பிரானை யற்றமறிந்து எடுத்துண்டனளாக-அங்ஙனே-நம்பெருமாள் திருவடி விரல் நகத்தால் அவளுடைய வயிற்றைப் பிளந்தருளினர்-இரண்டா மாண்டில்-உதத்தன்-துந்துபி யென்பவர்களை ஏவ-அவர்கள் கிளிப்பிள்ளை வடிவோடு வர-பெருமான் பருந்து வடிவங்கொண்டு கொன்றருளினர்-மூன்றாமாண்டில்-பிதாவால் செனள கர்மநிறைவேற்றப் பெற்று-தாயாகிய அதிதி-வியதிபாத ஸ்நானத்தின் பொருட்டு அடுத்த சோமவதி யெனும் தடாகத்திற்குப் பிள்ளைப் பெருமானை எடுத்துக்கொண்டு போய்க் கரையிலிருத்தி நீராடுகையில் அத்தடாகத்தினுள் பிருகு சாபத்தினால் முதலையாய் வசிக்கும் சித்திரனென்னும் காந்தருவராஜன் அதனுளிறங்கின மகோற்கடப்பிரானைப் பற்றினதன்மேல் அவன் முதுகி னாரோகணித்து-கரைமீதேற்றி அவனுக்கச்சாப நீக்கியருளினர், நான்- காமாண்டில்-காசிபராச்சிரமத்திற்கு விருந்தாகவந்த-ஆகா-ஊகூ-தும்புரு வென்னும் யாழ்வல்லவராகிய காந்தருவர் மூவரும் நீராடி நியமமுடித்தபின் விநாயகர்-மகேஸ்வரர்-உமை- விஷ்ணு-சூரியன் என்னு மூர்த்தங்களை யோராதனத்திட்டு பூஜித்து தியானஞ் செய்கையிலவற்றை மறைத்து-பிதா வேண்ட அவர்க்கு-சமஸ்த உலகங்களும் தேவர்களும் தமது திருவயிற்றி லடங்கியிருக்கு மற்புதத்தை திருவாய் திறந்து காட்டி தெரிசிப்பித்து, அவ்வாத்மார்த்தத்தை மீட்டுங்கொடுத்து அவர்களாற் பூஜை கொண்டருளினர்-ஐந்தாமாண்டில் உபநயன சடங்கு கொண்டருளுங் காலத்தில்-நராந்தகனா லேவப்பட்டு முனிவர்கள் போல் வந்த-பிங்களன்-விகிர்தன்-சபலன்-விசாலன்-பிங்காக்ஷன்-என்னும் இவ் அசுரர்களை வரும்-அக்ஷதைகளில் அஸ்திரங்களை ஆவாகனஞ் செய்து தூவலும்-அஃதுணர்ந்த பெருமானும் வேறே ஐந்தரிசகளை எடுத்துத் தூவியவர்களை சங்கரித்தருளினர்;பின்பு பிள்ளையாரை அர்ச்சிக்க தேவர்கள் வேண்டிக் கொண்டபடி-சிவ- பெருமான்-பினாகம்-திரிசூலம்-உடுக்கை-மழு-கங்கை-பிறை-சடைமுடி-இவைகளைச் சூட்டி- விரூபாக்ஷன்-பரசுபாணி-பாலசந்திரனென்னும் திருநாமங்களைச் சாற்ற, உமையம்மை- சிங்கவாகனம் கொடுத்து சிங்கவாகனனென வழைத்து வாட்பட்டை கொடுக்க, பிரமன். கமண்டலமும் தாமரைப் பூவும் சாத்தி பிரமபதியென் றழைத்துத் துதிக்க, விஷ்ணு-பீதாம்பரமும் சக்கரமுமணிந்து விஷ்ணுபதி யென்று துதிக்க, பிரகற்பதி இரத்தின பாலிகையை வைத்துவரதரென்று வாழ்த்த, வருணன்-பாசம் சாத்தி-சர்வப் பிரியதேவரென்று புகழ-இம்முறையே-சமுத்திர ராஜன், ஆதிசேடன்- யமன்- அக்கினி- வாயு- முதலியவர்கள்- முத்துமாலை-சயனம்-தண்டம்-அழற்சத்தி-வேகசத்தி-இவைகளைத் திருவடியில் வைத்து- மாலாதரன் முதலிய பலநாமங்கள் கூறி வணங்கினார்கள், அக்காலத்தில் பிள்ளையாரை குழந்தை யென்று மதித்து வணங்காதிருந்த இந்திரனுக்கு விஸ்வரூபம் காட்டி யடிமைகொண்டருளியும்-இவ்விதமாகப் பெருமான் லீலைகள் செய்தெழுந்தருளி ஆறாமாண்டான காலத்தில்-காசிபர் மாணாக்கனானகாசிராஜன் தன் குமாரனுக்கு விவாகம் செய்விக்க வேண்டி-தன்னாசிரியரை யழைக்க அவர் தமது மகனாராகிய மகோற்கடரை அனுப்ப-அவரும் அவ்வரசனோடு தேரெறி-கண்டக பருவத சமீபமாய்

வருகையில்-அவ்விடத்தில் ஓர் தெய்வப்படை வர-அதைப் பிள்ளையார் கைப்பற்றி அதை வேண்டித் தவஞ்செய்திருந்த தூமாக்ஷன் மீதேவியவனைக் கொல்ல-கண்ட காசிராஜ னஞ்சி நிற்கையில்-எதிர்த்த அத்தூமன் மக்களான செகனன்-மனுவென்பவர்களை தமது சுவாசத்தால் நராந்தகன் சபையிற் புகவீழ்த்திக் கொன்றருளினர்;அவர்களோடு வந்த சேனைகளிலிறந்தார் போக மற்றையரோடினர்-நராந்தகனறிந்து ஐஞ்நூற்றுவரை ஏவ-அவர்களைப் பெருமான் பேரிடி முழக்கங் காட்டி மாய்த்தருளினர், அதை சிலவொற்றர்கள் நராந்தகனுக்குத் தெரிவித்து புத்திகூற-அவர்களைச் சீறிக்கொன்று விட்டு வேறு சிலரை ஏவ-அச்சமயத்தில் அரசனும் பிள்ளையாரும் காசிநகரத்தை யடைய-அவ்விடத்தில் யாவருங் களிப்போடு தரிசிக்கப் பவனி வருகையில்-அங்ஙனம் ஏவப்பட்டவர்களில் தந்துரன்-விகண்டனென்னு மிருவரும் அக்காசிநகரத்துப் புரோகிதனுடைய மக்களைப்போ லெதிர் வந்து தழுவ-அவர்களைத் தழுவிக்கொன்றும்;காற்று வடிவமாக வந்த பதங்கன்-விதுல னென்பவர்களை-அணியாகிய சேடனால் வலி குறைவித்துப் பின்னரவர்களைக் கொன்றும், அவர்களால் அழிந்த பட்டணத்தை பெருமான் பார்வையாற் புதுக்க-கண்ட அரசன்-அன்பும் அச்சமும்-களிப்பும் கொண்டு வணங்கி தனதரண்மனைக்கழைத்துச் செல்கையில்-அங்கடை கல்லாகக் கிடந்த கூடனெனு மசுரனைத் தேங்காய்களைக் கொண்டுடைத்து வலிகுறைத்துப் பரசாயுதத்தாற்கொன்றவனுடலைப் பாதலத்தில் வீழ்த்தித் தேரை விட்டிறங்கி அரசன் கைலாகு கொடுக்க அரண்மனைக்குட் பிரவேசித்து சபாமண்டபத்தில் வீற்றிருந்து அரசன் செய்த பூசையைக் கைக்கொண்டவிடத்திருந்தருளினர், அன்றுபோக மறுநாள் வீதியிலாடுஞ் சிறுவர்களோடு தாமும் விளையாடு கையில்-பூர்வம் பிரம்மாவான-அவ்விராஜனது புரோகிதனெனும்-தருமதத்தன்-அரச னிசைவு கொண்டு தமது புத்திரிகளைத் திருமணஞ் செய்விக்கும்படி மகோற்கட மூர்த்தியாரைத் தமதாச்சிரமத்திற் கழைத்துக் கொண்டுபோக-அவ்விடத்தில் கழுதை வடிவாக வந்த காமன் குரோதன் முதலிய வனேக வசுரர்களை மாய்த்தும், யானைவடிவமாக வந்த குண்டனென்பவனை மல்லயுத்தத்தாற் கொன்று தருமதத்தனுடைய திருமனையி லெழுந்தருளி யிருக்கையில், முன்னிறந்த தூமன் மனைவி சிரம்பை கொண்டு வந்த விஷதயிலத்தை-அவளாற்றானே பூசும்படி செய்தவனைக் கொன்ற பின்பு-தாம்கலியாணக் கோலராய் தருமதத்தர் வேண்டுகோளின் படி யவர்பெண்களாகிய சித்தி புத்திகளைத் திருக்கலியாண முடித்துக் கொண்டு அங்கு சிலநாளிருந்த பின்பு-தேவிமார்ளோடு சிங்கவாகனத்தின் மேல் அரசனரண்மனைக் கெழுந்தருளியிருந்தனர்-அப்போதரசன்-தன் மந்திரிகளுக்கு-ஸ்வாமிகளது பெருமையைத் தெரிவித்து-இவரது சன்னிதியிற்றானே தன் குமாரனுக்கு விவாகஞ் செய்விக்க வேண்டுமென்று குறிப்பிக்க அவர்களிலொருவன்-தேவாந்தகனராந்தக சம்மாரத்தின் பின் விவாகம் செய்து யுக்தமென்று சொல்ல-அரசனதற்கிசைந்து நிற்க கேட்ட பெருமானும் அவ்விரண்ட சுரேந்திரர்களும் தமது கையினால் விரைவில் வந்து மடிவர்களெனத் திருவாய்மலர்ந்தனர் உடனே யஸ்தமயமாக-ஸந்தியாவந்தன கருமங்களை நிறைவேற்றி போஜன முடித்து திருப்பள்ளிக்குச் சென்றபின் அவ்விரவில்-விதாரணன்- சுவாலாமுகன்- வியாக்கிரமுகனை வாயைப்பிளந்தழித்து, அவர்களாலழிந்தபட்டணத்தையு முயிர்களையு மீட்டெழுப்பி யருள-கண்ட அரசன் தன்மனைவிக்குப் பெருமானருள் விளையாடல்களைத் தெரிவிக்க-மறுநாளவ்விராஜ பத்தினிகையாலரசன் விருந்தமைத்து பெருமானோ டமுது செய்கையில் பெருமான் திருப்பரிகாலத்தில் தன்பத்தினியாற் படைத்தன்றியும் வேறு சில பதார்த்தங்களும் திருமேனியில் தான் சூட்டினதல்லாமல் வேறு சிலபூஷணங்களுக்கு மிருக்கக் கண்டையங் கொண்டு வினாவிய வரசனுக்கு-அவற்றையர்ப்பித்த புருசுண்டியின் அன்பின் பெருமையைக் கூற-கேட்டவரசன் அவரைத் தன்னகரிற்றருவித்துப் பூஜிக்க வபேக்ஷித்தவனாய்-பெருமான் கட்டளைப்படி தண்டகவன மடைந்தம் முனிவரை வணங்கியக்கடவுட் டிருவவதார லீலகளனைத்தையுங் கூறியழைக்க அவர் வருவதற்கு மறுக்க மீண்டுமகோற்கடர்கற் பித்த வகையே கஜானனரெனத் திருநாமத்தைக் கூறி யழைத்து வந்து

சோடசோபசாரமுடன் பூசித்து மகிழ்ந்து மூவருமொருங்கு விருந்துண்ட பின்-புருசுண்டி முனிவர் தமதாச்சிரமத்திற்குச் சென்றனராக-மறுநாள் மேகனென்னு மோரசுரன்-ஜோதிடனாக வடிவங் கொண்டு அரசனிடஞ் சென்று துற்போதனை செய்திருக்கும் போது-பெருமானவண் சென்று தாமே ஜோதிடம் கேட்டு மகிழ்ந்து பரிசளிப்பவர் போல முத்தாரத்தை யணிவித்தழித்தும், பழங்கிணறும் தவளையுமாகத் தோன்றி நின்ற-கூபன்கந்தனெனு மசுரர்களைக் சங்கரித்தும், இவையனைத்தையுங் கேள்வியுற்ற நராந்தகன் தனது சிற்றப்பனான பதங்கனுடைய புத்திராளெனும் அம்பன்-அந்தகன்-துங்கன்-இவர்களைச் சேனைகளோடேவ- அவர்கள் வந்து மாயைப்போர் செய்ய-மகோற்கட மூர்த்திகள் வந்தம் மூவரையும் சேனைகளையு மொருங்கழித்தனர், அப்பாதகர் மூவரும் இறந்த செய்தியை யவர்கள் தாயாகிய பிரமரை கேட்டு வருந்தி மகோற்கடபிள்ளையாரை வஞ்சித்துக் கொல்ல அதிதி வடிவங் கொண்டு வந்து-விஷங்கலந்தின் பண்டங்களைக் கொடுக்க வதை யக்கடவுள் புசிக்குமளவி லவ்விஷம் அப்பிரமரையின் தலைக்கேறிமாய்ந்தனள், இவ்வாறக்கடவுண் மகத்வங்களைக் கண்ட அந்நகரவாசிகள் பெருமானுக்கு விருந்தமைக்கும் படி அரசன் முன்னிலையில் விண்ணப்பித்தவாறே மறுநாள் நடத்த-பிள்ளையாரு மாங்காங்கவர்கள் பூசையைக் கொண்டருளியது போல அது தினத்தில்-சுக்கிலன்-வித்துருமை யெனுந் தம்பதிகள் ஏழைப்பத்திசெய்த புல்லரிசி யமுதுண்டு பெருஞ்செல்வமளித்து திருவிளையாடல் செய்திருக்கையில் நாரதரா லறிந்து வந்த-ஜனகாதியர்க்கும் கிருபை வழங்கியவர்களோடும் அரசனோடு அரண்மனையிலத் தினமே திருவமுது செய்தருளினர்-அது நிற்க தன்னா லேவப்பட்ட அவுணவீரரெல்லா மடிந்தவர்களன்றி மீண்டுவராமையாகக் கண்ட நராந்தகன் கவலை கொண்டு-சூலன் சகலனென்பவர்களைத் தூதாக ஏவ-அவ்விருவரு மானிச வடிவோடும் சென்றும் கோற்கடப் பிள்ளையாரைக்கண்டு வஞ்சகத்தாற் கொல்ல நினைத்து-தங்கள் சுயரூபத்தோடு மெழுந்து அவர் திருக்கரங்களைப் பற்றலும்-அக்கைகளை யுதறி பெருமானவர்களைப் பற்றி நிலத்திலறையப் போகையில்-அவர்கள் பிரார்த்திக்க விரங்கி அவர்களை நராந்தகனுக் கறிவிக்கும் படி சில முக்கிய வார்த்தைகளைச் சொல்லி விடுக்க அவர்களும் சென்று நடந்த செய்திகளை சாங்கமாகச் சொல்லக் கேட்ட நராந்தகன்-மானமும் கோபமு மேற்கொண்டு-தானே சதுரங்க சேனைகளோடும் யுத்தசன்னாகனாய்ச் சென்று காசிநகரத்தை யடைந்து முத்திக்கை செய்ய-தூதராலறிந்த அரசன்-நால்வகைச் சேனையோடுஞ் சென்று-அசுரப் படையோடு போரேற்று அப்படைகளை முறித்து நிற்கையில்-நராந்தகன் சீறி-அரசன் தானைகளை யதப்படுத்தி-யவ்வரசனையுமவன் மக்களமைச்சர் முதலியோரையுஞ் சிறைப்படுத்தி ஜெயபாலனாய் காசிப்பட்டணத்துட் பிரவேசித்தனன்-இச்செய்தி தூதராற் கேள்வியுற்ற அவ்வரசன் மனைவியாகிய அம்பையென்பவள்-மனம் வருந்தி மகோற்கடப் பெருமான் சன்னிதியடைந்து விண்ணப்பிக்க-பிள்ளையாரும் அபயந்தந்தருளி யுத்தத்திற்கெழுந்தருளத் திருவுளங்கொண்ட மாத்திரத்தில்-அவர் திருமுகத்தினின்று மனந்த சேனைகளோடும் குறூரனென்பவன் தோன்றி ஆகாரம் வேண்டி நிற்க-அவனை-நராந்தகனுடைய சேனைகளையுண்ட-அவன் சிறையிலிகப்பட்ட காசிராஜன் முதலியோர்களை மீட்டு வரக்கடவையென்றவே- அவனவ்வண்ணமே சென்று-அசுர சேனைளை யெல்லாமழித்து-நராந்தகனையும் தேரூ டெடுத்து வானிற்கடாவி மூர்ச்சிக்கப் பண்ணி-காசிராஜன் முதலியோரை யழைத்துக் கொண்டு சன்னிதானத்தை யடைந்தான்-நராந்தகன் மூர்ச்சை தெளிந்து மாயைப் போர் செய்துவர-பெருமான் அவனைச் சங்கரிக்கும் படி தாமே எழுந்தருளி அவன் மாயைகளெல்லாவற்றையும் நாசஞ் செய்து-கடைமுறையில் சிரகரசரணங்களை யறுத்தெறியுந்தோறு முளைத்து வரக்கண்டு அவன் பெற்றிருக்கும் வரத்தைதிருவுளஞ் செய்தோர் விஸ்வரூபங் கொண்டருள-நராந்தகன்-தானுமவ்வாறுருக் கொண்டெதிர் நிற்க-பெருமான் கண்டு-அவனைக் கீழே தள்ளி மார்பை திருவடி நகத்தாற் பிளந்து அவனுடலைத் தேய்த்தருளி யப்போரை முடித்து-அரசன் முதலியவர்களோடு

காசிப்பட்டணத்திற் கெழுந்தருளினர்-இச்செய்தியறிந்த தேவாந்தகன் அதிக துக்கத்தை- யடைந்து ஒருவாறு தேறி-மறுநாளுதயகாலத்தில் யுத்தசன்னத்தனாய் சகல சேனைகளோடும் புறப்பட்டு காசிப்பட்டணத்தையடைய-அரசனதையுணர்ந்து-அஞ்சி பெருமானுக்கு விண்ணப்பிக்க-அவரவனைத்தேற்றி-உபயநாச்சிமரோடும் சிங்காரூடராய் பூதப்படைகளுடன் யுத்தகளமடைந்து-பகைவைர் சேனைப்பெருக்கை பார்த்து-அவற்றையழிக்கும்படி சித்தி தேவியாருக்குக் கட்டளையிட்டருள-அவரும் அணிமாவாதி எண்வகை சித்தி சக்திகள ஏவ-அச்சக்திகள் வந்து தேவாந்தகன் படைகளையும் படைவீரர்களையுமழிக்க-அவன் கண்டு கோபித்து-அச்சத்திகளோடு போர் செய்து முறியடிக்க அதுபோ தீசத்வசத்திப்புருவ நெரிப்பிலுண்டானவோர் சத்தியாங்கத் தேவாந்தகனுக்கு பே¬க்ஷ செய்திருந்த சுக்கிரனை விழுங்கி வயிற்றில் வைத்திருந்தனளாக-அக்கொடும்போர்க்கவ் வெண்மர்களாற்றாது-தம்மை ஏவிய சித்தி தேவியாரிடம் சென்று முறையிடக்கண்டு-அருகிருந்த புத்தி தேவியார் பவுத்தேவி யெனுஞ் சத்தியை ஏவ-அவள் சென்று சேனைகளைச் சிலநேரம் போராடிக் கொன்று பின்பு சேனைகளோடு அத்தேவாந்தகனையு மெடுத்து விழுங்கி தன்னை ஏவிய தேவியாரிடஞ் செல்லும் போது-அழியாவரம் பெற்ற-தேவாந்தகன்-சூக்குமவடித்தால் வெளிப்பட்டு தன் தந்தையிடஞ் சென்று முறையிட-அது போதவன் கூறின மந்திரத்தையுச்சரித்து அன்றிரவிலோர் வேள்வியை முடித்து-அதனாலுண்டான படைகளையும் குதிரையையுங் கொண்டு மறுநாட்காலை போர்களத்தடுக்க-சத்திகணங்களும்-பூதகணங்களும்- இராக்ஷதகணங்களுட னெதிர்த்து போர்செய்கையில்-தெய்வப்படைகள் இளைக்க-கண்ட குறூரன்-தேவாந்தகன் சேனைகளிற் றலைப்பட்டு நாசம் செய்து அவனோடு தெய்வப்- படைகளாற் போர்புரிகையில்-அவனஞ்சி-விண்ணில் மறைந்தேவின காந்தர்வ மோகனா அஸ்திரத்தால் குறூரன் மயங்கிநிற்க-தேவாந்தகன்-மறுபடியும் பூமிக்கு வந்து-வேறோர் வேள்வி முடித்து-பெருமான் படைகளை எல்லாம்-அதப்படுத்தும் படியோர்-பெண் பூதத்தை ஏவ-அப்பூதம் வருங்கால்-பிள்ளையார்-அம்மோகப் படையை ஞானப்படையா அழித்தவுடன்- குறூரனும் சமர்க்கெழ-அது போதவனைத் தடுத்து-பவுத்தேவி-சென்றப் பெண் பூதத்தைப் பொருதழிக்க-அது கண்ட தேவாந்தகன் போர்க்குவர-அவனைக் குறூர னெதிர்த்து போர்செய் திளைக்க-அது கண்டு தேவர்கள் முறையிட-பெருமான் திருவுளங்கூர்ந்து-சாரதியாகிய வாயுவை எச்சரித்து-இரதத்தை நடத்திக் கொண்டு போய் தேவாந்தகனை வளைத்து-யுத்தஞ் செய்கையில்-மகோற்கடர்-அவனுடைய-கீரிடம்-தூணி-வில்-தேர்-சேமத்தேர்-இவற்றைநுறுக்கியும்-ஓமகுண்டத்துதித்த குதிரைமீதவனூர்ந்து வாட்போரிட-தமது மழுவாயுதத்தா லவ்வாளையும் தூணியையும் பொடித்துக் குதிரையையும் நிலத்தில் வீழ்த்தின பின்-தெய்வப்படைகளாலு மவனுடன் பெரும் போராற்றி-மறு நாள் போர்க்களத்தில் அத்தேவாந்தகன் பெற்றிருக்கும் சிவானுக்கிரகத்தைத் திருவுளத்தடைத்து உடனே யானைமுகங் கொண்டு-தமது தந்தங்களி லொன்றையடித்து திருகரத்திற் கொண்சருளலும்-அதுகண்ட தேவாந்தகன் பறிக்கவோடித் தேர்மேற்பாய-அங்ஙனே பெருமானக் கோடாயுதத்தால்-அவன் தலை பொடிபடத்தாக்கி மாய்த்தருளினர்-அதுகண்ட தேவர்களு முனிவர்களு மலர்மாரி சொரிந்து வேத வாக்கியங்களாற் புகழ்ந்து களித்துக் கூத்தாடினர்-பின்பு மகோற்கடரும்-அத்திருவுருவினை மாற்றி முன் போல பிள்ளை பெருமானராய்-உபயநாச்சி மார்களோடு-வீரசிங்க மூர்ந்து- போரிலிறந்தோ ரனைவரையு முய்வித்து-தமதோர் வீரசக்தி வயிற்றுளிருந்த சுக்கிரனை

வெளிப்படுத்தி யவனிடஞ்செல்ல வேவி-அரசன் முதலியோர் புடை சூழ்ந்துவர நகரப் பிரவேசமாகி-அங்கரசன் மகனுக்கு சமஸ்த சம்பிரம்த்தோடு மணவினை முடிப்பித்து- யாவர்க்கும் பேரருள்வழங்கி-அக்காசிப்பதியை விட்டு-கசியபாச்சிரமஞ் சென்று அங்கு சில நாளிருந்து-தமது ஆனந்த பவனமெனுந் திருப்புவனத்திற் கெழுந்தருளினர்-அது முதல் காசிபர் ஓராலயஞ் அமைத்து மகோற்கடப் பெருமானை விக்கிரக வடிவங் கொண்டு ஸ்தாபனஞ் செய்து வழிபட்டிருந்தனர். அவ்வாறே காசி ராஜனு முற்கல முனிவர் அனுக்கிரகப்படி மகோற்டப் பெருமானை திருவுருக்கண்டு வழிபட்டுய்ந்தனன்.

***********************************************************************