விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் இலீலாகாண்டம் அகிலமெலாந்தனக்குள்ளாயவற்றினுட்டானாகநின்றங்களவில்கற்பத் திகறருமவ்விடர்நீங்கியுயிர்த்தொகைகள்

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

இலீலாகாண்டம்

அகிலமெலாந்தனக்குள்ளாயவற்றினுட்டானாகநின்றங்களவில்கற்பத் திகறருமவ்விடர்நீங்கியுயிர்த்தொகைகள்வாழவெளியெளிதெழுந்து

மகிழவரும்பிரணவகுஞ்சரமாலீலாகாண்டமான்மியத்தைப்

பகர்வதற்கப்பரம்பொருட்டாணற்றுணையாய்நாவினிதம்பயக்குந்தானே.

1. வக்கிரதுண்டர்

உலமுழுவதுநிலையவாக்கிறிதிசங்காரமோங்கக்குணப்பகுதியி

னுற்றவயனரியுருத்திரர்தொழிற்பெறவருளினுயர்வாலைபுவனையோடு

மிலகுதிரிபுரையெனுஞ்சத்திகளைநல்கிமேலியாவுமாம்பேருருக்கொண்

டேற்றவம்மூவரையகட்டிலிட்டவண்மேவுமெண்ணிலாவண்டகோடி

மலிசராசரவர்க்கமுதலியவுறுந்தொழின்மரபவர்த்தேற்றுவித்தே

வார்செவிபுழைக்கைவழியாகவெளியுய்த்தருண்மாண்புடைக்கருணையனையாம்

அலகிலாற்புதவகண்டாகண்டசச்சிதானந்தஷாட்குண்யசர்வா

தாரவக்கிரதுண்டமூர்த்தியாயலரிநடுவமர்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

முன்னொரு பிரமப்பிரளயமான பின் யதாப்பிரகாரமுலகையுண்டாக்க பரப்பிரமமாகிய வக்கிரதுண்ட விநாயகர் திருவுளங்கூர்ந்து தமது திரிகுணங்களினால் பிரமன்விண்டு உருத்திரன் என திரிமூர்த்திகளையும் படைத்தருளினர், பின்பம் மூவரும் தம்மைப் படைத்த முதலையறியவேண்டித் தவஞ்செய்ய-அவர்கண்முன்-கோடி சூரியப்பிரகாசமான திருவுருவமும் துதிக்கையும் நீண்டு வளர்ந்திருக்கின்ற தந்தங்களும் பாலலோசனமும் மஹா சுந்தரமுடன் விளங்கு மோர் வேழமுகமும்-பிறையணிந்த நவரத்தின கீரிடம், குண்டலம், புஜகவசம், சரப்பளிபதக்கம், பேரணிச் சிலம்பு, முதஸாகிய ஆபரணங்களும், வாள், கேடகம், வேல், வில், இவைகளை ஏந்திய நான்கு திவ்வியாஸ்தங்களும்-திருமார்பிற் கொன்றைமாலையும்-உப்ய திருவடியுமாக சிங்கவாகனரூடராய் வக்கிரதுண்டமூர்த்தி பிரசன்னமாகி-சிருஷ்டி-திதி-சங்காரமென்னு முத்தொழில்களை நடாத்திவரக் கட்டளையிட்டு, அத்தொழில்களை இயற்றுந் திறத்தையுணர்த்துமாறு அம்மூவரையுஞ் செல்லவிடுத்து-தமது கருப்பத்துள்ள வகிலாண்ட சராசர கோடிகளையும், கிர்த்திய மூர்த்திகளையும், பிரத்தியக்ஷமாகக்காட்டித் தெளிவித்து-விண்டு உருத்திரனிவர்களை திருச்செவி வழியாகவும்-பிரமனை துதிக்கை வழியாகவும் வெளியில் விட்டு-அக்கிர்த்திய ஸித்தியாம் பொருட்டு மூன்று சத்திகளையு மவர்கட்குத் தந்தருளினர்,

***********************************************************************