விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்தேழாவது- இந்திரன் நந்தனவளன்றழையவுபாசித்தது சையுறாப்புகழ்சூரபன்மனதுகொடுமையைச்சகியாதுசொற்கந்தனைத

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்தேழாவது- இந்திரன் நந்தனவளன்றழையவுபாசித்தது

சையுறாப்புகழ்சூரபன்மனதுகொடுமையைச்சகியாதுசொற்கந்தனைத்

தவிர்த்தமகவான்புலோமசையுடன்சீகாழிசார்ந்தினிதமைத்தகாவி

னைவுறாதமலனைநன்மலர்கொண்டருச்சித்துவருநாளின்மாரியின்றி

நனிவாடமனமேங்கியசரீரிவாக்கின்மகிழ்நணிநாரதன்சொல்வண்ண

மையிராவன்பினைங்கரனையினைதேத்தவவ்வள்ளலருள்கூர்ந்துகைலை

மரூஉநதியையரனல்கிடக்கொள்குறுமுனிகாண்டமிசையர்வாயசமதாகி

கையாலவறவனோச்சக்கவிழ்த்திடுநீர்கவின்சையகிரியினின்றுங்

காவிரியெனச்சென்றநந்தனந்தழைவுறக்காணுவான்போற்பாய்ந்ததே

இதன் சரித்திர சங்கிரகம்

சூரபன்மன் கொடுமையால்-விண்ணுலகத்தை விட்டு இந்திராணியுடன்-சீர்காழிப்பதியையடைந்து-அவ்விடத்தோர் நந்தனவனம் வைத்து அதில் நின்றும்-பத்திர புஷ்பங்களைக் கொண்டு-சிவபெருமானை-இந்திரனர்ச்சித்து வருநாளில்-மழையில்லாமல்-அந்நந்தன வனம் வாடக்கண்டு-தன் மனம் வாடிநிற்குஞ் சமயத்தில்-நதி வந்து நந்தனவனத்திற்பாயுமென்றோர்-அசரீரி வாக்குண்டாக-அதனான் மகிழ்வுற்றவனாகி-யங்கு வந்த நாரதர் சொற்படியே இந்திரன் கணேசரைப் பிராத்திக்க-அவரும் பிரத்தியக்ஷமாகி-அவன் வேண்டுகோளின்படி-சையகிரிச்சாரலிற் சென்று-அவண் தங்கி நின்ற- அகத்தியர்- (காவிரி நதியைச் சிவபெருமானிடத்துப் பெற்றடைத்திருந்த) கமண்டலத்தின் மீது-காகவடிவங் கொண்டேற-அது கண்டம் முனிவர்-கையாலோட்டின சமயத்தில்-உதைந்தெழுந்த காலாற்கவிழ்த்திட்ட நீரோடி இந்திரனது நந்தனவனத்தில் பிரவாகம் போலப் பரவிப் பாயப் பெற்றனவாம்.

***********************************************************************