விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் நாற்பத்தொன்றாவது- க்ஷிப்ரப்பிரசாதனுபாசித்தது தயாகரமிகுங்கிருச்சமதமுனிசொற்படித்தகடவுனணைந்தகாசித் தலத்த

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

நாற்பத்தொன்றாவது- க்ஷிப்ரப்பிரசாதனுபாசித்தது

தயாகரமிகுங்கிருச்சமதமுனிசொற்படித்தகடவுனணைந்தகாசித்

தலத்தினிற்கோமகன்சிப்ரப்பிரசாதன்சதுர்த்தியிற்கங்கையாடி

நியாமாதிமுற்றிநற்றுண்டிராஜர்ச்சனிதிநேர்ந்துநிலவுதயப்பரம்

நிகரின்மஞ்சனமாடையணிகலனிவேதனநிறைவன்னியறுகார்ச்சனை

சுயேச்சையினடாத்தியம்முனியுதவுமனுவாற்றுதிப்பவிறைவந்தெந்நனுந்

துன்னுநாமம்பரசுபாணியென்றிட்டோர்சுடர்குலிசமுதவவனம்

மயேசரைவணங்கிமீண்டுக்கன்னபுரியில்வருடத்தொவொன்றாய்சகத்திர

மகமூடித்தரசாண்டிருந்துகாலாந்தத்தின்மருவினன்பரமபதமே

இதன் சரித்திர சங்கிரகம்

கீர்த்தியெனும் இராஜபத்தினி கிருச்சமதமுனிவரை வணங்கினது குமாரனாகிய க்ஷிப்ரப்பிரசாதனுக்கு விசேஷ பிரயோசனத்தை விரைவிற்றருவதாயும் ஜெபித்தற்கெளிதாயு மிராநின்றவோர் கணேசமந்திரத்தை அனுக்கிரகிக்கும்படி விண்ணப்பஞ் செய்துக் கொண்டதன் மேல்-அம்முனிவருமனக்கனிவாய் நாலெழுத்துமந்திரத்தை முறைப்படியவனுக்குபதேசித்து ஆக்கியாபித்தவாறே அவனும் தன்தாயுடன் விசேடமகிமை வாய்ந்த காசிஸ்தலமடைந்து மாசிமாத அபரபக்ஷ சதுர்த்தி தினத்தில் துண்டி விநாயகரை விதிப்படி பூசித்து அம்மனுவை ஜெபித்து அறுகுவன்னிமந்தாரத்தால் அர்ச்சிக்கையில் கணேசர் பிரத்தியக்ஷமாகி அக்கிப்ரப்பிரசாதன் எக்காலத்தும் ஓரிடையூறில்வருந்தாமல் தீர்க்காயுள் கல்வி செல்வ முதலானவைகளைப் பெற்று அரசாண்ட பின்னர் தமதுபதஞ்சேரத்தக்கதாக வரமும், திரிபுவனமு மஞ்சத்தக்க வஜ்ராயுதத்தினையுமளித்து, பரசுபாணியெனவோர்நாமமுநல்கப் பெற்றபின் தன்னகரடைந்து பிதாவால் அரசுரிமை பெற்று இரத்தினத்தினால் விநாயக மூர்த்தி திருவுருவஞ் அமைத்து அதை தனது கண்டத்தில் தாரணஞ் செய்து கொண்டு வருடத்திற்கொன்றாக ஆயிரமகத்தையு முற்றினவனாய் சுகித்துவாழ்ந்திருந்தபின் தெய்வ விமானமேற் கணேசர்ச் சாரூபபதமடைந்தனன்.

***********************************************************************