விநாயக புராணம் 4 விநாயகமான்ம்யஸாரம் இருபத்தைந்தாவது- புருசுண்டியுபாசித்தது மும்மதக்களிறெனத்திரியும்வெஞ்சினவேடன்மொய்வாள்கொடாறலைப்போன் முற்

விநாயக புராணம்

4. விநாயகமான்ம்யஸாரம்

இருபத்தைந்தாவது- புருசுண்டியுபாசித்தது

மும்மதக்களிறெனத்திரியும்வெஞ்சினவேடன்மொய்வாள்கொடாறலைப்போன்

முற்கலரருட்பார்வையானற்குணம்பெற்றுமுன்பணியவவரிரங்கிச்

செம்மையின்விதித்தவாறவனோருலர்ந்தகொம்பிற்குக்கணேசரதுசீர்

திருந்துநாமஸ்மரணையடுநீர்விடத்தளிர்த்திட்டதுதெளிந்தமுனிவர்ப்

பெம்மான்கமண்டலத்தறலாற்பவித்திரம்பெற்றெழிற்புருவநாப்பட்

பெரும்புழைக்கையுறீஇப்புருசுண்டியென்னவோர்பெயருலகின்வாய்ந்தவரரு

ளம்மனுவையோதிநற்றவமியற்றிடவைங்கரத்தையனமலமாம்வே

தாகமத்திறமருளிமுப்பொருண்முடிபுசொலவருண்முத்தனாயினானால்

இதன் சரித்திர சங்கிரகம்

தண்டகவனத்தைச் சார்ந்த நந்துரமென்னும் நகரத்திற்குச் சமீபமான வேடச்சேரியில் வசிக்கும் விப்பிரதனென்னும் வேடன் ஓர் நாள் அதற்கடுத்த வனமார்க்கமாக வந்த முற்கலமுனி வரைக் கண்டவுடன் தன்வழக்கப்படி விரைந்தெழுந்து வாளாற்றுணிக்கச் சமீபிக்கையில் அவருற்றுநோக்கின வளவில் நல்லறிவு திக்கப்பெற்று உடனே கீழ் வீழ்ந்து அவர் பாதங்களைப் பற்றி விடாதிருந்தனனாக அவனிடத்திலவர்க் கிரக்கமுண்டாகி முந்தி அவன் மனோவுறுதியை யறியவேண்டி கணேசமூர்த்திநாமத்தை மாத்திரம் அவனுக்குபதேசித்து ஒருலர்ந்த கொம்பை நட்டு அது தளிர்க்கின்ற பரியந்தம் நீர்விட்டு அம்மனுவைத் தியானித்து வருதியென்று அவர் சென்ற பின்பு அவ்வாறே ஆயிரவருடவரையிலதற்கு நீரைவிட்டு ஜபித்தவர் அது தளிர்த்துப்பூத்திருப்பதை மேற்படி முனிவர் மீண்டவண் வந்து கண்டு வியந்து தமது கமண்டல நீரை மந்தரித்து அவன் மேற்றூவினவுடன் அவன் அது காறுஞ்செய்த பாபங்களெல்லாம் விமோசனமாகப்பட்டவன் புருவமத்தியிற்று திக்கையு முண்டாகக்கண்டு வியந்து உடனே கணேசரது ஏகாக்ஷர மந்திரோபதேசஞ்செய்து ஓர் கற்பம் வாழக்கடவை யென்றன் புடனாசீர்வாதஞ் செய்து அவண்துளிர்த்த மரமும் கற்பக விருக்ஷமாகவென்று சொல்லிப்போன பின்னர் - புருவநடுவில்சுண்டந் தாங்கி நின்ற காரணத்தாற் புருசுண்டியெனும் பெயராயவன்மேலு மோராயிரவருடவரையில் அவ்வேகாக்ஷரமந்திரத்தை இடைவிடாமல் ஜபித்து வந்த தன்மேற் பிரசன்னமான விநாயகக் கடவுள் பரிபூரண கடாக்ஷம்பாலித்து அவனருகமர்ந்து வேதாகமரகசியங்களையும், சரியை, கிரியை, யோக, ஞானத்திறத்தினையும், தீர்க்கமாய்த்தெளிய உபதேசித்தருளினர் அது முதல் கணேசமூர்த்தியின் சாரூபத்தைப் பெற்றவம் முனிவன் ஜீவன் முத்தனாயினன்.

அன்றியு மப்புருசுண்டிமுனிவன் சங்கடசதுர்த்தி விரதத்தை விதிப்படி அனுஷ்டித்து முற்றின பலனைக் கணேசமூர்த்தியின் திருக்கரத்தில் தத்தஞ்செய்து நரகத்தில் வீழ்த்தப்பட்டிருந்த தனது பிதிர்களையும் புண்ணியலோகத்திற் சேர்ப்பித்தனன்.

***********************************************************************