"தத்துவமசி மகாவாக்கியம்" பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது இது காடுகளிலும் மலைகளிலும் முனிவர்கள் தாங்கள் கற்று அறிந்து கொண்ட வேதங்களைத் தீவிரமாக ஆராய்ந்து, அ

"தத்துவமசி மகாவாக்கியம்"

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. காடுகளிலும் மலைகளிலும் முனிவர்கள் தாங்கள் கற்று அறிந்து கொண்ட வேதங்களைத் தீவிரமாக ஆராய்ந்து, அவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து அவற்றின் உண்மைப் பொருளைத் தெளிவாகக்கொண்டு உணர்ந்து கொள்வதற்காகச் சீடர்களுடன் சென்று பல ஆண்டுகள் நிட்டையில் அமர்ந்திருந்தனர். தவ யோக நெறியில் நின்றனர். உலகத்தை மறந்தனர். தங்களுடைய பார்வையையெல்லாம் தம்முள் செலுத்தினர். அவர்களுடைய உள்ளங்களில் பரம்பொருளைப் பற்றியும், தங்களைப் பற்றியும் உண்மைகள் தோன்றலாயின. அந்த உண்மைகளே நமக்கு உபநிடதங்களாகக் கிடைத்துள்ளன. உபநிடதங்கள் இந்திய நாடு உலகத்திற்கு அளித்த ஆன்மீகப் பொக்கிஷங்களாகும். என்றும் குறையாத செல்வமுமாகும். அவையே வேதாந்தம் எனப்படும். அவை பரம்பொருளை விளக்குகின்றன. சீடனைப் படிப்படியாக ஆன்மீக சிகரத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

உபநிடதங்களில் சாந்தோக்கியம் முக்கியமானது. அது சாம வேதத்தைச் சேர்ந்தது. சாந்தோக்கியத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான நிகழ்ச்சி ஒன்று பின்வருமாறு.

சுவேதகேது என்ற பெயருடைய ஓர் இளைஞன் வேதங்களைப் படித்துச் சிறந்த அறிவு பெறுகிறான். எனினும் தான் பெற்ற அறிவு முழுமையானதன்று என்று அவன் உணர்ந்து கொள்ளவில்லை. தன்னுடைய அறிவைப் பற்றி அவன் கர்வப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவனுடைய தந்தை, அருணி என்பவர் அவனை அழைத்து, "எல்லாவற்றையும் படித்து விட்டதாகச் சொல்லிக் கொள்கின்றாயே, எல்லாவற்றிற்கும் மேலான பரம்பொருளின் தன்மையைப் பற்றி என்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்கிறார். தனது அறிவின்மையை நன்கு உணர்ந்த சுவேதகேது தந்தையாரிடம், பரம்பொருளைப் பற்றித் தனக்கு விளக்க வேண்டும் என்று அடக்கத்துடன் கேட்டுக் கொள்கின்றான். பல உதாரணங்களைக் கொடுத்து, படிப்படியாகத்தனது மகனை அருணி முனிவர் முற்றிலும் உணர வைக்கின்றார். அவனுடைய ஆன்மிக இருளைப் போக்குகின்றார். உள்ளளியைப் பெருக்குகின்றார்.

மண் ஒன்று, அதை வைத்துக்குயவன் பல மண் பாண்டங்களைச் செய்கின்றான். பாண்டங்கள் பெயரிலும் உருவத்திலும் வெவ்வேறாக இருக்கலாம். அவற்றிற்கு அடிப்படை மண்தான். தங்கம் ஒன்று. தங்கத்திலிருந்து தட்டான் பல ஆபரணங்களைச் செய்கின்றான். அவற்றிற்கு மூலம் தங்கம்தானே. சூரியனைக் காண்கின்றோம். சூரியனுடைய கிரணங்களில் பல நிறங்கள் கலந்து நிற்கின்றன. ஆனால், அவையெல்லாம் சூரியனிடமிருந்து எழுந்தவை. பால் தயிராகிறது தயிர் வெண்ணெய் ஆகிறது. வெண்ணெய் நெய் ஆகிறது. எல்லாவற்றிற்கும் தயிர்தான் அடிப்படையாக இருப்பது பரம்பொருளே. நாம் பார்ப்பது, அனுபவிப்பது போன்றவைக்குப் பரம்பொருளே ஆதாரமாகும். அதுவே மூலப்பொருள்.

தேனீக்கள் பல பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கின்றன. ஆனால் தேன் ஒன்றே உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமுமே பரம்பொருளில் சேருகின்றன. உலகெங்கிலும் பல நதிகள் கிழக்கிலும் வடக்கிலும், மேற்கிலும் தெற்கிலும் பாய்ந்து கடலை அடைந்து அங்கே தங்குகின்றன. கடலை அடைந்தவுடன் நதிகளுக்கெனத் தனிப்பெயர் கிடையாது. உருவம் கிடையாது. மனிதன் விழித்திருக்கும்பொழுதும், உறங்கும்பொழுதும், கனவு காணும்பொழுதும், அவனுடைய உயிரானது தொடர்ந்து இயங்குகின்றது. ஒரு சிறிய ஆல மர வித்து நாளடைவில் பெரிய மரமாக வளருகிறது. வித்திலும் மரத்திலும் இருக்கின்ற மூலப்பொருள் ஒன்றே. ஒரு பாண்டத்தில் தண்ணீரை வைத்து அந்தத் தண்ணீரில் சிறிது உப்பைக் கலக்கும்பொழுது தண்ணீர் முழுவதும் உப்பாகின்றது. அதேபோல பரம்பொருள் எல்லாவற்றிலும் அடிப்படையாக, மூலமாக, சாரமாக நிற்கின்றது. இதுவே உண்மை. "அதுவே ஆத்மா. அதுவே c ஆகிறாய்" என்று அருணி சுவேதகேதுவிற்கு விளக்குகின்றார்.

அதுவே தத்துவமசி மகாவாக்கியமாகும். இதே கருத்தைக்கொண்ட "பிரஞ்ஞானம் பிரம்ம" என்னும் மகாவாக்கியம் இருக்கு வேகத்தில் வருகிறது. "பிரம்மைவாஹம் அஸ்மி" என்பது யசுர்வேத மகாவாக்கியம்.

"அயமாத்மா பிர்ஹ்ம" என்பது அதர்வ வேத மகாவாக்கியம். மிகப்பெரிய உண்மையை இந்த மகாவாக்கியங்கள் வெகு சுருக்கமாகச் சொல்லி முடிக்கின்றன. அதை விளக்க சங்கரர், இராமானுஜர், மத்துவர் ஆகிய மகான்கள் முன்வந்தனர். அத்வைதம், துவைதம், விஸிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்கள் தோன்றி மக்களிடையே வெகுவாகப் பரவின. பரம்பொருள், உயிர் (ஆத்மா) இவற்றிற்கான தொடர்பு போன்றவைகளுக்கு இந்தத் தத்தவங்கள் விளக்கங்களாக அமைந்துள்ளன. மகாவாக்கியங்கள் கடலைப் போன்றவை. ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டவை. ஆன்மிகப் பாதையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் அனுபூதிமானாகிய குருவிடமிருந்து இந்தக் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவற்றிலுள்ள உண்மையை அனுபவிக்க வேண்டும். பின்னர்த் தெளிவடைய வேண்டும். பரம்பொருளை உணர்ந்து கொள்வது அவ்வளவு எளிதன்று. அறிவு முதிர்ந்த நிலையில் இறைவனுடைய அருளால் இது நடந்தேற வேண்டும். இதுவும் அவரவருடைய அனுபவத்தால்தான் நிகழும். "தானே தனித்து எம்பிரான் தன்னைச் சந்தித்தே" என்பார் திருமூலர். ஆகவேதான் குருவானவர் சீடனை நோக்கிப் பல விளக்கங்களைக் கொடுத்து, "அது c ஆகிறாய்" என்கிறார். இந்த வாக்கியத்தில் பொதிந்து கிடக்கும் உண்மையை உணர்ந்துகொண்ட சீடனும் "நானே பரம்பொருள் ஆகிறேன்" என்று அறிந்து கொள்கின்றான்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய சொற்கள் அது, பரம்பொருள். c, நான் ஆகும். அது என்னும் சொல் பரம்பொருளைக் குறிக்கும். c, நான் என்னும் சொற்கள் சீவனை, அதாவது உயிரைக் குறிக்கும். பரம்பொருளைத் தவிர வேறொன்றும் இல்லை. உயிர், உலகம் போன்றவையெல்லாம் கற்பனையே என்று உள்ளத்தில் உணர்ந்து கொள்வது ஒரு நிலையாகும். அந்த நிலையில் பரம்பொருள் ஒன்றே. அதுவே எல்லாவற்றிற்கும் வியாபித்திருக்கின்றது. அதுவே மெய்

மற்றவையெல்லாம் பொய் என்கின்ற அறிவு தோன்றுகின்றது. இந்த அறிவு அத்வைத அறிவு எனப்படும். இறைவனை நினைத்து நினைத்து, உருகி உருகிச்சித்தம் சிவமாகிய நிலையில் மாணிக்கவாசகப் பெருமான் "நீயலாற் பிறிது மற்றின்மை" என்றும், "ஒன்று நீயல்ல அன்றி ஒன்று இல்லை" என்றும் தனது உள்ளக்கிடக்கையை வெளியிடுகின்றார். "நானும் பொய், என் நெஞ்சம் பொய், என் அன்பு பொய்" என்கின்ற மாணிக்கவாசகரின் திருவாக்கும் இதே உணர்வைத்தான் பிரதிபலிக்கின்றதோ

தவத்தாலும், யோகத்தாலும், ஆன்மிகத்தின் நிறைவினாலும் உயர்ந்த மனமுடைய சீவன் எல்லாம் பரம்பொருளே என்கின்ற உணர்வுடன் சமுதாயத்தில் வாழ்ந்து வருவது வியப்பு ஒன்றுமில்லை. அத்தகைய மாண்பு பெற்ற பக்குவன் மகாவாக்கியங்களின் தெளிவைப் பெற்ற சீவன் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற தெளிவைப் பெற்ற சீவன் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோனற் தெளிவைப் பெற்றவர்கள் வாழ்க்கையை வெறுத்து, வாழ்க்கை அனுபவங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில்லை. பலர் இந்த வாழ்க்கை மாயை என்பதை உள்ளத்தில் ஏற்று இறைவன் அருளால் அந்த வாழ்க்கையைத் தாமரை இலைத்தண்ணீர் போல நடத்தி வருவதையும் நாம் பார்க்கின்றோம். "மாய வாழ்க்கையை மெய்யென்றெண்ணி மதித்திடா வகை நல்கினான்" என்று மாணிக்கவாசகப் பெருமான் பாடுகின்றார்.

திருமூலர் பெருமான் ஓர் சிறந்த ஞானியும் யோகியுமாவார். பரம்பொருளைத் தம்முள் உணர்ந்தவர். இறைவனுடைய பேரறிவு. பேராற்றல், பெரும் கருணை ஆகியவற்றை நன்கு அறிந்து கொண்டவர். உயிர்களுடைய தன்மையைப் பற்றியும், உயிர்களைக் கட்டுப்படுத்தும் பாசத்தைப் பற்றியும் தனது யோக வலிமையால் அறிந்து, தெளிந்து கொண்டவர். அவர் அருளிச் செய்துள்ள திருமந்திர மணிமாலை ஆன்மிகத்தைப் பற்றிய எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கூறுகின்றது. மகாவாக்கியங்கள் பற்றியும் பல இடங்களில் கூறுகின்றது. திருமூலர் ஞானத்துள் ஞானத்தை நமக்குப் பிழிந்து கொடுக்கும் ஒப்பற்ற ஞானாசிரியராக இருப்பதால், அவருடைய விளக்கம் மிகச் சிறப்புடையதாகும். அதையும் நாம் தெரிந்து கொள்ள முற்படுவோம்.

பரம்பொருள் ஒன்றே. அது அநாதியானது. மலமில்லாதது. என்றும், எங்கும் உள்ளது. யாவற்றையும் தன்னுள் அடக்கியுள்ளது. குணமும் குறியும் இல்லாதது. அதுவே நித்தியப் பொருள். பேரறிவும், பேராற்றலும் பெற்றது. ஆனந்தமயமானது. உயிர்களை உய்விக்க சதா தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டே இருக்கின்றது. பரம்பொருளின் திருவருள் இயக்கம். ஐந்தொழில்கள் நடத்தப்படுவதன் வாயிலாக நம்முடைய அனுபவத்திற்கு உட்படுகிறது.

இறைவனைப் போல உயிரும் அநாதி. உயிரைப் பந்திக்கும் பாசமும் அநாதி. உயிர் சிற்றறிவும், சிறு ஆற்றலும் பெற்ற ஒன்று. உயிரினுடைய அறிவு தான் சார்ந்ததன் பொருளையே அறிந்து கொள்ளும். உடலில் புகுந்து பொறிகளையும் மற்ற கருவிகளையும் பெற்று நிற்கும் பொழுது அவற்றால் கிடைக்கக்கூடிய அறிவையே முழுமையாக எடுத்துக்கொள்ளும். அவற்றிடமிருந்து சுதந்திரம் பெற்று இறைவனைச் சாரும்பொழுது இறையறிவு பெற்றுச்சிவமாம்ட

தன்மையில் நிற்கும். முதலில் சுட்டறிவு, பின்னர் முற்றறிவு ஆகியவை உயிரினுடைய அறிவின் வளர்ச்சியைக் குறிக்கும். உயிருடன் அநாதியாகச் சேர்ந்துள்ளது. ஆணவமலமாகும். மாயையும், கன்மமும் வந்து பொருந்தியவை. உயிர் மேலும் மேலும் பிறப்புகள் எடுக்க இறை வழி செய்கின்றன. இவற்றின் வலிமையால் உயிரானது உடலையும், கருவிகளையும் பயன்படுத்தி அவை வழி சென்று, உலக விஷயங்களில் பொருந்தித் தோய்கிறது. தன்னை இந்திரியங்கள் போன்ற கருவிகள் மயமாகவே கருதிக்கொள்கின்றது. "மாயக் குழியில் விழுவர் மனை மக்கள், பாசத்தில் உற்றுப் பதைக்கின்றவாறே" என்கிறார் திருமூலர். மும்மலங்களைக் கொண்ட பாசம் சீவனைச் சிவத்திடமிருந்து பிரித்து வைக்கின்றது.

ஆனால், இறைவனுடைய நியதிப்படி எல்லா உயிர்களும் இறைவனடைய அருளைக் காலப்போக்கில் பெற்றே தீரும். உயிர்களுடைய நலன் கருதி இறைவன் தன் பேரருள் தன்மையால் மிகவும் இழிந்த நிலையில் உள்ள உயிர்களாகிய நம்மை, நமது பக்கவத்திற்கேற்ப ஆட்கொள்கின்றான். உயிருக்கு அருள் விளக்கம் கிடைக்கின்றது. உயிருக்குள்ள ஒரு முக்கியத் தன்மை மலப்பற்றில் இருப்பது அல்லது சிவனுடைய அருளைப்பற்றி நிற்பதாகும். மலமாகிய பற்றை விட்டுச் சிவப்பற்றைப் பெறுவது இறைவனுடைய திருவருளால்தான். ஊஞ்சல் சங்கிலியைப் பற்றி விட்டத்திலிருந்து தொங்கி ஆடிக்கொண்டிருக்கின்றது. சங்கிலி அறுந்தால் ஊஞ்சல் தரையில் விழுந்து, தரையைப் பற்றி நிற்கின்றது. ஊஞ்சலின் ஆட்டமும் ஓய்ந்துவிடுகின்றது. அதேபோல்தான் உயிரினுடைய இயக்கமும் நடைபெறுகிறது. அறிவு விளக்கம் பெற்ற நிலையில் உயிருக்குப் பிறப்பு நீங்க வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றும். இதன் காரணமாக உயிரானது சரியை, கிரியை, யோகம் போன்ற நெறிகளை மேற்கொள்ள விழையும். இந்த நெறிகள் ஞானத்திற்கான வழியைக்காட்டுகின்றன. அப்பொழுது இறைவன் குரு வடிவாக வந்து நமக்கு அருள் செய்கின்றான். அந்த அருளால், சூரியனுடைய ஒளியால் சூரியகாந்தக் கல்லைப் பாய்ச்சிய பஞ்சில் b பிடிப்பது போல உயிருக்கு ஞான விளக்கம் ஏற்படுகின்றது. அப்பொழுது உயிர் தான் சார்ந்துள்ள உடல். கருவிகள் ஆகியவற்றைத் தனக்கு வேறுபட்டதாக உணர்ந்து கொள்கின்றது. தன்னுடைய அறிவு இறைவனுடைய அறிவு என்கின்ற எண்ணமும் தனது செயல் அவனுடைய செயல் எனவும் உணர்வு தோன்றும். உடலுக்கு அடிமையாகிய தன்மை நீங்கித்தான் என்றுமே சிவத்திற்கு அடிமை என்று உயிர் புரிந்துகொள்கின்றது. இந்த நிலையைத் திருமூலர்.

"செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து

அப்பரிசாக அமர்ந்திருந் தாரே". (திருமந்திரம் - 126)

என்று விளங்குகிறார்.

சிவமாம் தன்மையைப் பெற்ற பெருமைக்குரிய உயிர்கள் எல்லாம் சிவன் செயல் என்கின்ற உணர்வில் நிற்கும்.

"இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி

இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி" (திருமந்திரம் - 127)

நமக்கு நேரும் நன்மையும், தீமையும், இன்பமும், துன்பமும் அவனால் ஆவன. அவன் செயலுக்கு நாம் நம்மை அர்ப்பணித்து விட்டோம். அவனுடைய திருவருள் ஒன்றுதான் நமக்குத் தெரியும். இதைத்தவிர நாம் நாமாகச் செய்வது வேறொன்றுமில்லை என்கிற உணர்வு உள்ளத்திலே தோன்றும். அந்த உணர்வை மாணிக்கவாசகப் பெருமான்

"நன்றே செய்வாய் பிழைசெய்வாய்

நானோ இதற்கு நாயகமே"

என்று புலப்படுத்துகின்றார்.

இந்த உணர்வுகளைத் திருமூலர் இரண்டு திருமந்திரங்களில் வெளிப்படுத்துகின்றார். அவை பின்வருமாறு -

"சிந்தையது என்னச் சிவன் என்ன வேறில்லை

சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்

சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்

சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே". (திருமந்திரம் - 2853)

"சீவன் எனச்சிவ னென்னவே றில்லை

சீவ னார்சிவ னாரை அறிகிலர்

சீவ னார்சிவ னாரை அறிந்தபின்

சீவ னார்சிவ னாயிட்டிங் கிருப்பரே" (திருமந்திரம் - 2017)

முன்சொன்ன மகாவாக்கியங்களின் உட்பொருள் இந்த இரண்டு மந்திரங்களில் அடங்கியிருக்கின்றது. மகாவாக்கியத்தில் உள்ள த்வம் (c) என்கிற சொல் உயிரைக் குறிக்கும். உயிரானது இப்பொழுது உடம்பினில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் உடம்போடு உள்ள நிலை சகல நிலை என்று கூறப்படும். இந்தச் சகல நிலையில் உயிரானது உடம்புடனும், இந்திரியங்களுடனும், அந்தக் கரணங்களுடனும் கூடியுள்ளது. சகல நிலையில்தான் கன்மம், மாயை இரண்டும் சேர்ந்து உயிரை இயக்கி வைக்கின்றன. இந்த நிலையில்தான் உயிரானது வினைகளைச் சேர்க்கின்றது. சுட்டறிவின் அடிப்படையில் உயிர் உடலையும் அதன் கருவிகளையும் சார்ந்தவண்ணம் அவற்றின் இன்பதுன்பங்களுக்கு ஆளாகிறது.

இத்தகைய கருவிகளுடன் சேராமல் உயிரானது முடங்கிக்கிடக்கும் நிலை கேவல நிலையாகும். இந்த நிலையில் உயிருடன் ஆணவ மலம் மட்டுமே அநாதியாகச் சேர்ந்துள்ளது. இதைக் கேவல நிலை என்று குறிப்பிடுவர். இந்த நிலையில் உயிருடன் ஆணவ மலம் மட்டுமே அநாதியாகச் சேர்ந்துள்ளது. இதைக் கேவல நிலை என்று குறிப்பிடுவர். இந்த நிலையில் உயிரானது இச்சை, ஞானம், கிரியை போன்ற இயக்கங்களுக்கு ஆளாகாது தனியாக நிற்கும். ஆணவம் ஒன்றே சேர்ந்துள்ள இந்த நிலையை இருள் என்றும் அழைப்பர்.

அறியாமை வயப்பட்டு நிற்கும் உயிர் இறைவன் அருளால் சகல நிலையைப் பெறுகிறது. உயிரானது அறிவு விளக்கம் பெறுவதற்காக இந்த நிலை கடவுளால் ஏற்படுத்தப்பட்டது. இருள்சூழ்ந்த அறையில் நிற்கும் ஒருவனுக்கு கையில் ஒரு சிறிய விளக்குக் கிடைத்தால், அது அந்த இருளை முழுமையாக நீக்காவிட்டாலும் சிறிது வெளிச்சம் பட உதவி புரிவதுபோல் இந்தச் சகல நிலை உள்ளது.

சகல நிலையிலுள்ள உயிருக்கு அதன் பக்குவ நிலைக்கேற்ப, கர்மங்களின் வலிவு குறைய இறைவனுடைய அருட்சக்தி உயிரின்மீது பதியத் தொடங்கும். உயிர் குரு அருள் பெறும். உலக விஷயங்களின் போக்குவரத்தும் உயிரிடமிருந்து பிரியத் தொடங்கும். இறைவனுடைய அருள் உயிரின் வேகத்தைக் கெடுத்து கருவிகளுடைய வலுவைக் குறைத்து சிவஞானத்தைப் பெருக்கி உயிரைச் சுத்தப்படுத்தும். இதுவே உயிரினுடைய சுத்த நிலையுமாகும்.

இந்த நிலையில் உயிர் முப்பத்தாறு தத்துவங்களை நீக்கியுள்ளது என்று பெரியோர் கூறுவர். இந்த நிலையைச சீவதுரியம் என்றும் குறிப்பிடுவார்கள். மனிதனுக்கு நனவு, கனவு மற்றும் உறக்கம் என்கின்ற மூன்று நிலைகள் உண்டு என்பதை நாம் அறிவோம். அவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையைத் துரியம் என்று பெரியோர் வைத்துள்ளனர். இந்த நிலையில் நான் என்கின்ற மனோபாவம் காய்ந்து, தேய்ந்து, உடலுடைய தொடர்பை விட்டுவிடுகின்றது. இதைத் திருமூலர்பெருமான் "சீவதுரியத்துத் தொம்பதம்" என்கிறார்.

உயிரினது ஆன்மி முன்னேற்றம் இத்துடன் நிற்கவில்லை விளக்கின் சுடரைத் தூண்டினால் வெளிச்சம் அதிகப்படும். இறைவனுடைய அருளால் ஆன்மாவின் தன்மை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும். உடலைச் சேர்நத் கருவிகள், கரணங்கள், தங்கள் இயக்கத்தில் இறைவனுக்கே உரிமைப்பட்டுவிடுகின்றன. உயிர் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும். ஆனால், திருமூலர் கூறுவதுபோல "தானே புலனைந்தும் தன்வசம் ஆயிடும்;தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்;தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்" (திருமந்திரம் - 140) சீவகரணங்கள் சிவகரணங்களாக மாறிய நிலை பரதுரியம் எனப்படும். இந்த நிலையைத் திருமூலர் தற்பதம் என்று குறிப்பிடுகின்றார்.

அடுத்துச் சீவனார் சிவனாராக இட்டிருக்கும் உணர்வு. இது ஆன்மிகத்தின் மேலான படி. உயிர் இந்தப் படியை அடையும்பொழுது அஸிபதம் இயக்கத்திற்கு வருகிறது. அப்பொழுது இறைவன் சீவ, சிவ பேதமில்லாமல் கலந்து நிற்பான். இறைவன் திருவருளால் மல வாசனைகள் நீங்கி உயிர் உயர்நிலையை அடையும் அறியாமை, அறிவு என்கின்ற படிகளைக் கடந்து, அருள் பெற்று சிவத்தை உணர்வற உணர்வதற்குப் பொருந்திய நிலை இது. சீவன் அப்போது சிவமாய் ஒன்றி நிற்கும். இந்த உணர்வே தத்துவமசி மகா வாக்கியத்தின் இயல்பாகும் என்பது திருமூலரின் அருள்வாக்காகும்.

"சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்

தாவு பரதுரி யத்தினில் தற்பதம்

மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத

மோவி விடுந்தத் துவமசி உண்மையே". (திருமந்திரம் - 2568)

உயிர் தத்தவங்களுடன், புறக்கருவிகள், உட்கருவிகள் ஆகியவற்றுடன் சேர்ந்து நிற்கும்பொழுது உயிரின் நிலைமை அறியாமையாகும். அப்பொழுது தொம்பகத்தின் எல்லை தொடங்குகின்றது. உயிரின் உள்நின்று அவற்றை ஆட்டுவிப்பவன். இறைவனே. இறைவன் எங்கும் பரவி இருக்கின்றான். அதை உணர்ந்த உயிர் தொம்பத எல்லையை விட்டுத் தத்பத எல்லைக்கு வருகிறது. பின்னர் இறையருளால் தன்னை இறைவனுக்கு ஒப்படைக்கின்றது. இதை ஒன்றும் நெறி அனுபவம் எனலாம். இறைவனும் திரு அருளும் ஒன்றுதான். அவை வேறு அல்ல. உயிரின் சிந்தையில் திருவருள் நிறைந்து நிற்கும் பொழுது அந்த உயிரின் செயல்கள் சிவச்செயல்களாகின்றன. இதனை மணிவாசகப் பெருமான் "சித்தம சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்" என்று குறிப்பிடுகின்றார். இதுவே தித்திக்கும் சிவபதமாகும். இந்த இன்பம் உள்ளத்திலே பதிந்த இறைக் கலப்பு அளித்த இன்பமாகும். மணிவாசகர் இதனை "ஊனாய், உயிராய், உணர்வாய் என் உட்கலந்து" என்று கூறுகின்றார். எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள் இந்த உயிரிலும் உயிரோடு உயிராகக் கலந்து நிற்கின்ற ஒரு பெருமையை உயிர் அனுபவிக்கின்றது. "தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி அன்பே" என்று வள்ளலார் உள்ளம் உருகக் கதறுகின்றார்.

"மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத்

தன்வாய அந்தக் கரணம் அகிலமும்

எவ்வா யுயிரும் இறையாட்ட ஆடலாற்

கைவாயி லாநிறை எங்குமெய் கண்டதே". (திருமந்திரம் - 2586)

மகாவாக்கியத்தின் உட்பொருளை மேலும் சற்று நெருங்கிப் புரிந்து கொள்ள முயலலாம். "c அதுவாகின்றாய்" என்றால் பரம்பாருள் ஒன்றே. உயிர் என்பது இல்லை, எல்லாமே கற்பனை என்கின்ற உணர்வு பிறந்து, பரம்பொருளைத் தவிர வேறொன்றுமில்லை என்று பாவித்துக் கொள்ளுதல் மகாவாக்கியத்திற்கு ஒருவிதப் பொருளைக் கொடுப்பதாகும். அதேநேரத்தில் உயிர் என்று ஒன்று இருந்தால்தான் அந்தப் பாவனை செய்ய முடியுமல்லவா!ஆனால், அந்த உயிர் உடலைப் பற்றிய அறிவில் மூழ்கியிருக்கும்போது, உடலையும், இறைவனைப் பற்றிய அறிவில் மூழ்கியிருக்கும்போது இறைவனையும் சாரும் என்கிற உண்மையை நாம் கண்கூடாக அனுபவிக்கின்றோமே!உயிருக்கு உடலைப் பற்றும் வரை தன்னைப் பற்றிய அறிவு தோனறர்து என்பதையும், உடல் மீது உள்ள பற்றை அறுத்தால் உள்ளத்திலே இறை அனுபவம் தோன்றும் என்பதையும் நாம் அறிகின்றோம். இந்த அறிவே தத்துவமஸி மகாவாக்கியத்தின் உட்பொருளுக்கு அடிப்படையாகும். உலகம் தான் அல்ல என்கின்ற அறிவைப் பெற்று உயிர் உலகத்தை ஒதுக்கியதுமே இறைவன் திருவடியே தஞ்சமென்று அதனை அணையும். "அந்நியம் இன்மையின் அரன்கழல் செலுமே" என்று சிவஞானபோதம் கூறுகிறது. சிவம் எங்கும் வியாபித்துள்ளது. உயிர் சிவனை அடைகிறது என்றால் உயிரில் சிவம் இல்லை என்று பொருள்படும். அது குறையாகும். ஆகவே, இறைவன், எவ்வாறு உடம்பில் உயிர் கலந்துள்ளதோ, அவ்வாறே உயிரிலும் கலந்து நிற்பான். முழுமையான அறிவை உயிர் பெறும்பொழுது உயிர் சிவத்துடன் கலந்து நிற்கின்ற தன்மையை உணருகின்றது. இதுவே சிவஞானமாகும். "சிவன் எம்பெருமான் என்மனம் ஒன்றுவித்தானே" என்பார் திருமூலர். பிறப்பிலிருந்து விடுபட விரும்புவோர்க்கு உயிர் போன்றது சிவஞானமாகும். அவர்களுக்கு உயிர் போன்றது சிவமேயாகும். அவர்கள் ஒடுங்கும் இடம் பிரணவம் ஆகும். சிவமே அவர்களது அறிவுக்கு அறிவாய் விளங்குவன.

"உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே

உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே

உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்

உய்யவல் லாரறி வுள்ளறி வாமே". (திருமந்திரம் - 2822)

இறைவனுடைய திருவருளால் சீவன் தன் நிலை பற்றி அறிவு பெற்றுச்சிவத்தில் அழுந்தி நிற்பதே மகாவாக்கியத்தின் உட்பொருளாகும் என்று திருமூலர் பெருமான் அருளிச் செய்கின்றார். மெய்யுணர்வு உயிருடன் பொருந்தி நிற்கும்பொழுது சிவன் அதனுள் விளங்கித் தோன்றுவான் என்கிறார். "மெய்யுணர்வு வைத்தபடியே அடைந்து நின்றானே" (திருமந்திரம்)

சீவன் சிவனாதல் உள்ளத்தில் எழும்பும் ஒரு உணர்வு நிலையாகும். அந்த நிலையில் உயிர் சிவம் என்னும் நினைப்பில் அடங்கிக் கிடக்கும். இறைவன் வந்து ஆட்கொள்ள உயிர் தன்னை அடிமையாக்கிக் கொள்ளும். "எம்மை ஆட்கொண்ட இறை" என்கிறார் காரைக்கால் அம்மையார். "அவர்க்கே எழுபிறப்பும்" என்பதும் அவருடைய திருவாக்காகும். தானே தவம் செய்து நெஞ்சத்தில் இறையுணர்வை நிரப்பிக் கொண்டதால் அந்த ஒரு பேற்றினைத்தான் பெற்றதாக அம்மையார் கூறும் திருவாக்கு "யானே தவம் உடையேன், என்நெஞ்சே நன்னெஞ்சம்" என்பதாகும். அப்பொழுது நான் என்றும், தான் என்றும் தேட வேண்டியதில்லை. நாட வேண்டியதில்லை. நான் என்ற ஞான முதல்வன் இந்த வேற்றுமை உணர்வு வேண்டாம் என்கின்ற உண்மையைச் சீவனுக்கு உணர்த்தி விடுகின்றான். சீவன் தான் என்ற நினைப்பை ஒழிக்கின்றது. அந்த நினைப்பை ஒழித்தது பற்றிய நினைப்புக்கூட உயிருக்கு வருவதில்லை. அத்தகைய இறைக்கலப்பை "கடவுளும் நானும் ஒன்றானேன்" என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நாமும் அந்த நிலையை அடைவோமாக!

"நானென்றும் தானென்றும நாடினேன் நாடலும்

நானென்றும் தானென்றும் இரண்டில்லை யென்பது

நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

நானென்று நானும் நினைப்பொழிந் தேனே". (திருமந்திரம் - 2820)