திருவிடைமருதூர்

திருவிசைப்பா

திருவிடைமருதூர்

(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.)

பாடல்

"இந்திர லோக முழுவதும் பணிகேட்டு

இணையடி தொழுதெழத் தாம்போய்

ஐந்தலை நாகம் மேகலை அரையா

அகந்தொறும் பலிதிரி அடிகள்

தந்திரி வீணை கீதமும் பாடச்

சாதி கின்னரங் கலந்தொலிப்ப

மந்திரகீதந் தீங்குழல் எங்கும்

மருவிடம் திருவிடைமருதே."

கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக்

கலந்தமண் ணிடைக் கிடந்தாங்கு

நலம் கலந்து அடியேன் சிந்தையுட் புகுந்த

நம்பனே ! வம்பனே னுடைய

புலங்கலந்தவனே ! என்று நின்றுருகிப்

புலம்புவார் அவம்புகார், அருவி

மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையாள்

மருவிடம் திருவிடை மருதே". (கருவூர்த்தேவர்)

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is தஞ்சை இராஜராஜேச்சரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருவாரூர்
Next