திருஇடைவாய்

திருமுறைத்தலங்கள்

திருஇடைவாய்

திருவிடைவாயில், இடவை

சோழநாட்டுத் தென்கரைத் தலம்.

தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரியிலிருந்து கூத்தா நல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் என்னும் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 A.e. சென்றால் இத்தலத்தையடையலாம்.

இஃது புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருமுறைத்தலம். மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் குடியிருந்ததாகவும், அதைத் தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய ஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

A.H. 1917ல் கண்டெடுக்கப்பட்ட இத்தலத்தை "ஐயடிகள் காடவர்கோன் தம்முடைய க்ஷேத்திரக்கோவையில் தென் இடைவாய்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இறைவன் - இடைவாய்நாதர், விடைவாயப்பர், புண்ணிய கோட்டீஸ்வரர்.


இறைவி - உமையம்மை, அபிராமி.


தீர்த்தம் - புண்ணியகோடி தீர்த்தம்.


சம்பந்தர் பாடல் பெற்றது.

சிறிய கோயில் கோபுர வாயிலைக் கடந்து சென்றால் நந்தி, பலிபீடம் உள்ளன.

பிராகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சந்திரன், சூரியன் சந்நிதிகள் உள்ளன. தலப்பதிகக் கல்வெட்டு உள்ளது.

கோஷ்டமூர்த்தங்காளக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, சந்நிதிகள் முறையாகவுள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது.


"மறியார் கரத்தெந்தையும் மாதுமையோடும்

பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர்

பொறிவாய் வரிவண்டு தன் பூம்பெடை புல்கி

வெறியார் மலரில் துயிலும்விடைவாயே" (சம்பந்தர்)


இப்பதிகம், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் பன்னிரு திருமுறைப் பதிப்பு நிதியிலிருந்து 1968ல் ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ குமரகுருபரன் சங்கம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள மூவர் தேவாரம் தலமுறை, (அடங்கன் முறை) நூலில் 1536ஆம் பக்கத்தில் புதிய பதிகம் என்று தலைப்பிட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது.


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. விடைவாயப்பர் புண்ணியகோடீஸ்வரர் திருக்கோயில்

திருவிடைவாயில் - கூத்தா நல்லூர் போஸ்ட்

தஞ்சை மாவட்டம். 614 101.



Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கேதீச்சரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கிளியன்னவூர்
Next