அநேகதங்காபதம்

திருமுறைத்தலங்கள்

வடநாட்டுத் தலம்

அநேகதங்காபதம்

அம்பிகை தவஞ்செய்த இடம். ஹரித்வாரிலிருந்து கேதாரம் (கேதார்நாத்) செல்லும் வழியிலுள்ள 'கௌரிகுண்டம்' என்னும் இடமே இஃது என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள வெந்நீர் ஊற்றில் அவசியம் நீராட வேண்டும். சூரியனும் சந்திரனும் வழிபட்ட தலம்.

கேதார் நாத் யாத்திரையில் கௌரிகுண்டம் வரையில்தான் பேருந்துகள் செல்லும். அங்கிருந்தோ நடந்தோ, குதிரைமீதோ, நேடாலியிலோ, 14 A.e. கரடுமுரடான மலைப் பாதையில் ஏறிச் சென்று கேதார நாதரைத் தரிசித்துத் திரும்ப வேண்டும்.


இறைவன் - அருள்மன்னேஸ்வரர்.


இறைவி - மனோன்மணி


சம்பந்தர் பாடல் பெற்றது.

தென்கயிலாயமான திருக்காளத்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே தொழுது இத்தலத்தைப் பாடினார்.


"தந்தத்திந்தத் தடமென்றருவித் திரள்பாய்ந்து போய்ச்

சிந்தவெந்த கதிரோனொடு மாசறு திங்களா (ர்)

அந்தமில்ல அளவில்ல அனே கதங்காபத (ம்)

எந்தை வெந்த பொடி நீறணிவார்க்கு இடமாவதே". (சம்பந்தர்)


-"நீடுபவம்

தங்காதவனேக தங்கா பதஞ்சேர்ந்த

நங்காதலான நயப்புணர்வே." (அருட்பா)


 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is இந்திரநீல பருப்பதம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கேதாரம்
Next