திருக்காளத்தி - ஸ்ரீ காளஹஸ்தி

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

திருக்காளத்தி - ஸ்ரீ காளஹஸ்தி

இன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டததைச் சேர்ந்துள்ளது. மக்கள் வழக்கில் 'காளாஸ்திரி' என்று வழங்கப்படுகிறது. ரேணிகுண்டா - கூடூர் புகை வண்டி மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 A.e. தொலைவிலும், சென்னையிலிருந்து 110 A.e. தொலைவிலும் உள்ள சிறந்த தலம், திருப்பதி, ரேணிகுண்டாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்தும் காஞ்சியிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது. சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இங்கு இவ்ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்வடிம் மிகச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்புக்குச்சான்றான கண்ணப்பர் தொண்டாற்றி வீடுபேறு பெற்ற விழுமிய தலம். 'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி' எனச் சிறப்பிக்கப்படும் தலம். நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி' பாடியுள்ள பெருமை பெற்ற தலம். முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். கண்ணப்பரின் பக்தியை வியந்து ஸ்ரீ ஆதிசங்கரர், தம் சிவானந்தலஹரியில் பாடியுள்ளதை அனைவரும் அறிவர். அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ - காளம் - அத்தி -சிலந்தி - பாம்பு - யானை - ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம். மலையடிவாரத்தில் உள்ள அருமையான திருக்கோயில். மலை, கைலாசகிரி என்று வழங்கப்படுகிறது. பொன்முகலியைக் கடந்து நெடிதுயர்ந்த மலையடிவாரத்தில் உள்ள காளத்தியை அடைந்தபோது நம் நெஞ்சில் கண்ணப்பருக்கு எழுந்து உணர்வு மேலிடுகிறது.

இந்நிலப்பரப்பைத் தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும் வழியில் 'தொண்டைமான் நாடு' என்னும் பெயரில் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் 'தொண்டமநாடு' என்று அதை வழங்குகின்றனர்.

இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்று அழைக்கப் படுகிறது. பேருந்தில் செல்லும்போது சுவர்ணமுகி பொன்முகலிப் பாலத்தைக் கடந்து ஊருள் செல்லவேண்டும். நகராட்சி அந்தஸ்தில் உள்ள சிறிய ஊர் - வட்டத்தலைநகர். ஊருள் மிக உயர்ந்து கம்பீரமாகக் காளிகோபுரம் காட்சி தருகிறது. ஏழு நிலைகளுடன் பழமையாகத் திகழும் இக்கோபுரம் ஸ்ரீ கிருஷ்ண தேவாராயரால் A.H. 1516 - ல் கட்டப்பட்டது.

இதைக்கடந்து செல்லும் நாம் அடுத்து, கோயிலின் பிரதான வாயிலை அடைகிறோம். இக்கோபுரம் 'பிக்ஷசாலா கோபுரம்' என்றழைக்கப்படுகிறது. இதுவும் ஏனைய கோபுரங்களும் 12 ஆம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.

இக்கோபுரத்தில், துவார கணபதியும், தண்டபாணியும் இட்ம் மாறிக்காட்சி தரகின்றனர். வலப்பால் ஆலய அதிகாரியின் அலுவலகம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்நுழைந்ததும், வலப்பால் வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதி தனிக்கோயிலாக - சிறியதாகவுள்ளது.

இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது. விநாயகர் சந்நிதியும், பாலஞானாம்பாள் சந்நிதியும் உள்ளன. அடுத்துப் பஞ்சமுகேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. இடப்பால் பழைய அம்பாள் உருவம் நிறுத்தப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஆங்காங்குச் சிவலிங்கத் திருமேனிகள் பல உள்ளன.

அடுத்து வரும் வடக்குக் கோபுர வாயில் வழியாகத்தான் சுவாமி புறப்பாடு நிகழுமாம். சற்றுமுன் சென்றால் இடப்பால் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. பெயருக்கேற்ப, விநாயகர் 35' ஆழத்தில் உள்ளார். 20 படிகள் இறங்கிச்சென்று தரிசிக்க வேண்டும். விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தியாகும். எதிரில் சிவராத்திரி மண்டபம் உள்ளது. அடுத்து, மூலையில் 2 கால்களை வெளியே நிறுத்திச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் வலப்பால் சுவரோரமாகவுள்ளது. கவனித்தால்தான் இது தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால் இரண்டு கால் 'மண்டபம்' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது. அடுத்து உள்ளிருக்கும் மூலவருக்கு நேரகாச் சுவரில் சாளரம் அமைத்து அதற்கு வெளியில் பிரதிட்டிக்கப் பட்டிருக்குமூ நந்தியைக் காணலாம். இங்குத் தலையில் மத்தியில் மண் நிரப்பப்பட்டுள்ள சதுரமான பகுதி உள்ளது. கார்த்திகைத் தீபத்தன்று இங்குத்தான் 'சொக்கப்பானை' கொளுத்தப்படும். இம்மண்ணை வாரிவிட்டால் பெரும்பள்ளமாகத் தோன்றும். அதில் நடுவில் பனைமரத்தை நட்டுச் சுற்றிலும் சிறுசிறு கொம்புகளை நட்டு, அதைச் சுற்றிலும் ஓலைகளைச் சுற்றுவார்கள். இடித்த எள்ளைப் பிசைந்து அகல்போலாக்கி அதில் எண்ணெய், திரியிட்டு ஏற்றிப் பனை மரத்தின் உச்சியில் வைத்து, சொக்கப்பானையைக் கொளுத்துவார்கள். எல்லாம் எரிந்து, அகல் விளக்கும் எரிந்து போகும். அப்போது அதை எடுத்து அரைத்து அக்கரியை (ர¬க்ஷயாக) சுவாமிக்குக் கறுப்புப்பொட்டாக இடுவார்கள். இது இங்கு விசேஷமானது.

அடுத்துச் சென்றால் வலப்பால் உள்ள கோபுரம் 'திருமஞ்சனக் கோபுரம்' எனப்படும். இக்கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன்முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இப்படிக்கட்டில் இறங்கும்போதே முதற்படியின் இடப்பால் தேவகோட்டை மெ.அரு.தா. இராமநாதன் செட்டியாரின் உருவச்சிலை உள்ளது. A.H. 1912 - ஆம் ஆண்டிலேயே ஒன்பது லட்சம் ரூபாய் செலவு செய்து இத்திருக்கோயிலில் திருப்பணிகளைச் செய்து மகா கும்பாபிஷேகத்தைச் செய்த பெரும் புண்ணியசாலி அவர். கைகூப்பி வணங்கத்தக்க இவர், கைகூப்பி வணக்கம் சொல்லும் அமைப்பிலேயே காட்சி தருகின்றார். சிவாலயத் திருப்பணிகளில் 'நகரத்தார்' பங்கு எஞ்ஞான்றும் நன்றிப் பெருக்கோடு நினைத்துப் போற்றப்பட வேண்டுவதாயிற்றே

இக்கோபுரத்தின் எதிரில் நாற்கால் மண்டபத்தினையடுத்து 'அஷ்டோத்ரலிங்க' சந்நிதி உள்ளது. கோபுரத்தின் பக்கத்தில் 'பஞ்சசந்தி விநயாகர்' சந்நிதி. அடுத்துள்ள பெரிய மண்டபம் - நூற்றுக்கால் மண்டபம் A.H.

1516ல் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாகும். இதில் தற்போது வாகனங்கள் முதலியன வைக்கப்பட்டுள்ளன. எதிரில் உள்ள பதினாறுகால் மண்டபம் அச்சுதராயரால் கட்டப்பட்டதாகும்.

அவற்றைக் கடந்து சென்றால் ஆலய நுழைவு வாயில் எதிரில் இரு கொடிமரங்கள். ஒன்று கவசமிட்டது. மற்றொன்று அல்லால் ஆனது. 60 அடி உயரமுள்ள இது ஒரே கல்லால் ஆனது. பலிபீடமும் நந்தியும் உள்ளன.

பிரதான கோபுரம் 'தட்சிண கோபுரம்' எனப்படும் 11- ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தெற்கு நோக்கிய இக்கோபுர வாயிலில் நுழைந்தால் தமக்கு நேரே தட்சிணாமூர்த்தி தரிசனம். இடப்பால் மண்டபம், வலமாக அதிலேறி முதலில் 'சங்கற்ப கணபதி'யைத் தரிசிக்கலாம். அடுத்து நால்வர் சந்நிதி. அடுத்து ஓரிரு பாதுகாப்பறைகள். வலமாக வரும் போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.

அடுத்துள்ள தீர்த்தக் கிணறு 'சரஸ்வதி தீர்த்தம்' எனப்படுகிறது. இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு இத்தீர்த்தத்தைக் கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே எடுத்தும் தருகின்றனர். இடப்பால் 'செங்கல்வராயன்' (ஆறுமுகர்) சந்நிதி - வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

அடுத்துள்ள உற்சவ அலங்கார மண்டபத்தில் காளத்தீஸ்வரர், ஞானப் பூங்கோதை, கண்ணப்பர், ஆறுமுகர், வள்ளி, தெய்வயானை, பரத்வாஜ மகரிஷி, பிட்சாடனர், அஸ்திரேதவர், விநயாகர், தொண்டைமான் அரசன், சிலந்தி, யானை, பாம்பு முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன.

அடுத்துச் சென்றால் சுந்தர கணபதி, மோட்ச கணபதி, பால கணபதி ஆகிய மூவரின் தரிசனம். வலமாக வந்து மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

வெண்பாக்கம் வழிபட்ட சம்பந்தர் காளத்தியை அடைந்து பாடிப் பரவினார். இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலியவைகளைப் பாடித் தொழுதார். ஆலங்காடு பணிந்த அப்பர காளத்தி வந்து தொழுது வடகயிலை நினைவுவர, கயிலைக்கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார். திருவல்லம் தொழுத சுந்தரர் காளத்தி வந்து

இறைவனடி துதித்து, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.


இறைவன் - ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்


இறைவி - ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை


தலமரம் - மகிழம்.


தீர்த்தம் - ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு


இத்தலம் மூவர் பாடல் பெற்றது.

உள்நுழையும்போது கவசமிட்ட கொடிமரமும் முன்னால் பலிபீடமும் உள்ளன. எதிரில் சுவரில் சாளரம் உள்ளது. தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன. கடந்து சென்று காளத்தி நாதனைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க வேண்டும்.

மூலவர், சுயம்பு தீண்டாத்திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பின்னால் கட்டப்பட்டது.

சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தப்பட்டுள்ளது. இக்கவசத்தைச் சார்த்தும்போதும் எடுக்கும்போது கூட சுவாமி மீது கரம் படக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கவசத்தை எடுத்துப் பார்த்தால் இத்திருமேனியின் அற்புதமான அமைப்பைத் தரிசிக்கலாம்.

சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும்,

மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி - சதுர ஆவுடையார்.

காளத்தியானைக் கண்ணுளானாகக் கண்டு தொழ - எத்தனை நேரம் தொழுதாலும் தெவிட்டாத தரிசனம். இச் சந்நிதியில் கிடைக்கும் சாந்திக்கு ஈடேது. விட்டுப் பிரிய மனமில்லை. நமக்கே இந்நிலை என்றால் கண்ணப்பர்க்கு வாய்த்தது எப்படியிருக்கும்?

சந்நிதியில் மூலவர் பக்கத்தில் மனோன்மணி சக்தியின் திருமேனி உள்ளது. கீழே ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் போக மூர்த்தத் திருமேனி உள்ளது. சுகாசன அமைப்பில் உள்ள இம் மூர்த்தம் மான மழு ஏந்தி அபயஹஸ்த, சிம்மகர்ண முத்திரைகளுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் அழகுற விளங்குகிறது. மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் எப்போதும் அசைந்து கொண்டு, வாயுத்தலம் இஃது என்பதை நிதர்சனமாகக் காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு தொழுவோம். சந்நிதியில் சிலைக்கை வேடர் பெருமானாகிய கண்ணப்பரின் மூலத் திருமேனி உள்ளது. 'கும்பிட்ட பயன் காண்பார்போலச் சிலைக்கை வேடர் பெருமானைக் கை தொழுதார்' ஞானசம்பந்தர் என்பதை எண்ணி நாமும்

கண்ணப்பர் கழல் பணிகின்றோம்.

மூலவருக்கு எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன.

கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம், பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு தரிசிப்போர்க்கு அத்தீர்த்தத்தையே தருகின்றனர். நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து எடுத்துத் தருகின்றனர்.

மூலவருக்குக் கங்கை நீரைத் தவிர வேறெதுவும் மேலே படக் கூடாது பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. சுவாமிக்கு மேலே தாராபாத்திரம் உள்ளது.

கருவறை அகழியமைப்புடையது. கோஷ்ட மூர்த்திகளாக கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

சர்பப் (பாம்பு) தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம் இராகுகால சாந்திகள் செய்தல் முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகின்றது. இக் கோயிலில் உச்சிக்காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை. காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

நாடொறும் நான்கு கால பூஜைகள், பரத்வாஜ, மகரிஷி இங்குத்

தவஞ்செய்து பேறு பெற்றாராதலின் அக்கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே இங்குப் பூஜைகளைச் செய்து வருகின்றார்கள்.

இத்தலத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பு, இங்கு அர்த்தசாமப் பூஜை கிடையாது. சாயரட்சை பூஜையுடன் முடிவு. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை, பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விடுவார்கள்.

மன நிறைவான தரிசனத்துடன் வெளியே வந்து பிராகார வலமாக வரும்போது வலப்பால் சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. இடப்பால் படிகளேறிச் சென்று வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியரைத் தரிசிக்கலாம். எதிரில் உள்ள தூணில் ஐயப்ப சுவாமி ஒரு காலில் யோக பட்டத்துடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். காசி இராமேஸ்வரலிங்க மூர்த்தங்கள் உள்ளன.

பக்கத்தில் வில் ஏந்திய கண்ணப்பர் திருவுருவம் கம்பீரமாகத் தரிசனம் தருகிறது. வரிசையாக வல்லபை கணபதி, லட்சுமி கணபதி சக்தி கணபதிகள் உள்ளனர். கிருஷ்ணதேவராயரும் அவருடைய மனைவியாரும் பிரதிஷ்டை செய்ததாக லிங்கங்கள் உள்ளன. இவ்வாறே அடுத்தடுத்து, பெரியதும் சிறியதுமாகவும், சீதை லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள் முதலியோர்கள் பிரதிஷ்டை செய்ததாகவும் பல சிவலிங்கங்கள் உள்ளன.

இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனி பகவான் மட்டும் உள்ளார்.

கனகதுர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நடராச சபையில் இரண்டு திருமேனிகளும், இரண்டு சிவகாமித் திருமேனிகளும் உள்ளன. அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் அழகுற உள்ளன.

இத்திருக்கோயிலுடன் தொடர்புடைய திரௌபதியம்மன் கோயிலுக்குரிய

பாண்டவர் திருமேனிகள், பாதுகாப்பாக இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளன. கால பைரவர் சந்நிதி விசேஷமானது. சப்தமாதாக்கள்

உள்ளனர்.

அம்பாள் - ஞானப்பூங்கோதையின் சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான கருவறை, கோஷ்ட மூர்த்தங்கள் எவையுமில்லை. அம்பாள் நின்ற திருக்கோலம் - இரு திருக்கரங்கள்.

திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்தமேரு' உள்ளது. அம்பாள் இடுப்பில் ஒட்டியாணத்தில் 'கேது' உருவமுள்ளது. எதிரில் சிம்மம் உளது. சந்நிதிக்கு வெளியில் பிராகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசிச் சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.

அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில்

வெள்ளிக்கிழமைதோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

அடுத்து வலமாக வரும்போது சித்திரகுப்தர், இயமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன. எதிரில் சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின் போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர். அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்று கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.

இதற்குப் பக்கத்தில் அருமையான பெரிய ஸ்படிகலிங்கம் உள்ளது. இது ஸ்ரீ ஆதி சங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.

பக்கத்தில் சிலந்தி, யானை, பாம்பு, கண்ணப்பர் முதலிய திருவுருவங்கள் உள்ளன. இதன் பக்கத்தில் மாடிப்படிகள் உள்ளன. மேலேறிச் சென்றால் கண்ணப்பரைத் தரிசிக்கலாம். எல்லோருக்கும் இது அநுமதியில்லையாதலால் பூட்டப்பட்டுள்ளது.

பிராகார வலத்தை முடித்துப் பழைய படியே தட்சிணாமூர்த்தியை வந்து தொழுது வெளியேறுகிறதாம். வரும்போது இடப்பால் 'மிருத்யுஞ்சலிங்க' சந்நிதி உள்ளது. வெளியில் வலப்பால் தலமரம், மகிழ மரம் உள்ளது.

காளியைத் தொழுதவாறே எதிரில் உள்ள கோபுரத்தைத் தாண்டி வெளியேறி, இடப்பக்கம் திரும்பி கைலாசகிரிக்குச் செல்வேண்டும். இதை மக்கள் கண்ணப்பர் மலை என்றழைக்கின்றனர். ஏறிச் செல்ல நல்ல படிகள் உள்ளன. அதிக உயரமில்லை. மேலேறிச் சென்றால் சிறிய சிவலிங்ச் சந்நிதியைத் தரிசிக்கலாம். கண்ணப்பர் சந்நிதி உள்ளது. வில்லேந்தி நிற்கும் திருக்கோலம். மலைக்கிளுவை மரங்கள் இரண்டு சுவாமிக்கு முன்னால் மலையில் உள்ளன.

இம்மலையிலிருந்து பார்த்தால் ஊரின்தோற்றம் நன்கு தெரிகிறது. அவ்வாறு

பார்க்கும்போது நேரே தெரிவது துர்க்கை மலைக்கோயில் வலப்பால் தெரிவது முருகன் மலைக்கோயில்.

இம்மலை 'கைலாசகிரி' எனப்படுகிறது. கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25 A.e. பரப்புடையது. இம்மலையில் காட்டில் பல இடங்களிலும் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பரின் திருவுருவங்களும் உள்ளன. மலைப்படிகளேறும் போதே திரும்பிப் பார்த்தால் 2 A.e. தொலைவில் 'பரத்வாஜதீர்த்தம்' - குளம் நன்கு தெரியும். கரையில் அம்மகரிஷி தவம்புரிந்த கோயில் உள்ளது. சிவலிங்கத்திருமேனியும், பரத்வாஜ மகரிஷியின் திருவுருவமும் கோயிலில் உள்ளன. (இவ்விடத்தை லோபாய் தீர்த்தம் என்று வழங்குகின்றனர்) . இன்னும் சற்று தூரத்தில் மலையடி வாரத்தில் நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. ஓரிடத்தில் மயூரி தீர்த்தமொன்றும் உள்ளது. 16 A.e. தொலைவில் உள்ள ஒரு சோலையில் சஹஸ்ரராமலிங்கம் என்னும் கோயிலும் உள்ளது. இங்ஙனம் பெயருக்கேற்ப கைலாசகிரி பல கோயில்களையும் தீர்த்தங்களையும் பெற்றுத்திகழ்கிறது.

பொங்கல் விழாவில் ஒரு நாளிலும் பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இருநாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார். அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலை தொடங்கி மறுநாள் முடிவுறுமாம். சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடத் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்திலும் உள்ளது.

தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முத்தி எனப்படுகிறது. "ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி" என்கின்றனர். இங்கு நதி - நதி - பர்வதம் என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி - பொன் முகலியாற்றைக் குறிக்கும். GF - அழியாச் செல்வமான இறைவியும் இறைவனும். பர்வதம் - கைலாசகிரி, இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனச் சொல்லப்படுகிறது. பொன்முகலி உத்திரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது பண்டை விசேஷமாகும். பண்டை நாளில் ரிஷிகள் பொன்முகலியில் நீராடி கிழக்கு நோக்கித் தரிசிக்க அவர்கட்டுக காட்சி தரவே சுவாமி மேற்கு நோக்கினார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

ஒரு முக்கிய குறிப்பு. அம்பாள் கருவறையை வலம் வரும்போது இடப்பால் 'மிருத்யுஞ்சலிங்க' சந்நிதி உள்ளது. வெளியில் வலப்பால் தலமரம், மகிழ மரம் உள்ளது. காளியைத் தொழுதவாறே எதிரில் உள்ள கோபுரத்தைத் தாண்டி வெளியேறி, இடப்பக்கம் திரும்பி கைலாசகிரிக்குச் செல்லவேண்டும். இதை மக்கள் கண்ணப்பர் மலை என்றழைக்கின்றனர். ஏறிச் செல்ல நல்ல படிகள் உள்ளன. அதிக உயரமில்லை. மேலேறிச் சென்றால் சிறிய சிவலிங்கச் சந்நிதியைத் தரிசிக்கலாம். கண்ணப்பர் சந்நிதி உள்ளது. வில்லேந்தி நிற்கும் திருக்கோலம். மலைக்கிளுவை மரங்கள் இரண்டு சுவாமிக்கு முன்னால் மலையில் உள்ளன.

இம்மலையிலிருந்து பார்த்தால் ஊரின்தோற்றம் நன்கு தெரிகிறது. அவ்வாறு பார்க்கும்போது நேரே தெரிவது துர்க்கை மலைக்கோயில் வலப்பால் தெரிவது முருகன் மலைக்கோயில்.

இம்மலை 'கைலாசகிரி' எனப்படுகிறது. கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25 A.e. பரப்புடையது. இம்மலையில் காட்டில் பல இடங்களிலும் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பரின் திருவுருவங்களும் உள்ளன. மலைப்படிகளேறும்போதே திரும்பிப் பார்த்தால் 2 A.e. தொலைவில் 'பரத்வாஜதீர்த்தம்' - குளம் நன்கு தெரியும். கரையில் அம்மகரிஷி தவம்புரிந்த கோயில் உள்ளது. சிவலிங்கத்திருமேனியும், பரத்வாஜ மகரிஷியின் திருவுருவமும் கோயிலில் உள்ளன. (இவ்விடத்தை லோபாய் தீர்த்தம் என்று வழங்குகின்றனர்) . இன்னும் சற்று தூரத்தில் மலையடிவாரத்தில் நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. ஓரிடத்தில் மயூரி தீர்த்மொன்றும் உள்ளது. 16 A.e. தொலைவில் உள்ள ஒரு சோலையில் சஹஸ்ரராமலிங்கம் என்னும் கோயிலும் உள்ளது. இங்ஙனம் பெயருக்கேறப் கைலாசகிரி பல கோயில்களையும் தீர்த்தங்களையும் பெற்றுத்திகழ்கிறது.

பொங்கல் விழாவில் ஒரு நாளிலும் பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இருநாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார். அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்கக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலை தொடங்கி மறுநாள் முடிவுறுமம். சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்திலும் உள்ளது.

தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முத்தி எனப்படுகிறது. "ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி" என்கின்றனர். இங்கு நதி - GF - பர்வதம் என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி - பொன் முகலியாற்றைக் குறிக்கும். GF - அழியாச் செல்வமான இறைவியும் இறைவனும். பர்வதம் - கைலாசகிரி, இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனச் சொல்லப்படுகிறது. பொன்முகலி உத்தரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாகும். பண்டை நாளில் ரிஷிகள் பொன்முகலியில் நீராடி கிழக்கு நோக்கித் தரிசிக்க அவர்கட்கு காட்சி தரவே சுவாமி மேற்கு நோக்கினார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

ஒரு முக்கிய குறிப்பு. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

கைலாசகிரியில் சற்று சுற்றினாற்போல் கற்களின் மீது ஏறிச் சென்றால் ஒரு சிறிய கோயில் உள்ளது. ஒரு கால் மடக்கி ஓரு காலூன்றியவாறு உள்ள ஒரு உருவம் அதில் உள்ளது. இதை ஒரு சிலர் நக்கீரர் என்கின்றனர். ஊர் மக்கள் தெலுங்கில் சித்தலையா (அதாவது சித்தி பெற்றவர்) என்றழைக்கப்படுகின்றனர். நக்கீரர் இம் மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்ற வரலாறும், இத்தலத்தின் மீது கயிலைபாதி நூலைப் பாடியுள்ளதும் நாம் அறிந்தவையே. எனினும் இவ்வுருவம் பற்றி ஏதும் நிச்சயிக்க முடியவில்லை, கோயிலிலிருந்து மலைக்குச் செல்லும் வழிக்கு நேராக உள்ள வீதியில் சென்றால் சற்றுத் தொலைவில் மிக அற்புதமான பஞ்சமுககேஸ்வரர் கோயிலையும், மலைக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அருமையான புடை சிற்பங்களையும் தரிசித்து, கண்டு மகிழலாம். காளத்தி செல்வோர் இவற்றைத் தவறாது சென்று தரிசிக்க வேண்டும்.

சிவலிங்கத்தின் நாற்புறங்களிலும் அமைந்துள்ள முகங்களின் சிற்ப வேலைப்பாடு கண்டு தரிசிக்கத் தக்கது, மேற்புறம் சிவலிங்கமே இதையும் சேர்த்துத்தான் பஞ்சமுகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறது. இவ்விடத்தை உணர்த்தி, வெளிப்படுத்தியவர்கள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பரமாசார்ய சுவாமிகளே யாவார்கள். இவர்களே 1966ல் இதற்குக் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். புடைச்சிற்பங்கள் கண்ணுக்குப் பெருவிருந்து. பஞ்சமுகேஸ்வரர், பார்வதி திருமணம், முருகன், நர்த்தன கணபதி, ஆலிங்கனஈசன், நந்தி, சிலந்தி, யானை, பாம்பு முதலியவை வழிபடும் காட்சி, வியாக்ரபாதர், பதஞ்சலி, நடராஜர், வேடன், பிட்சாடனர், இராவணன், தட்சிணாமூர்த்தி, ஏகபாதர், மச்சாவதாரம் முதலிய உருவங்கள் புடை சிற்பங்களாக மலைப்பாறையில் கீழும் மேலும் செதுக்கப்பட்டுள்ளன.

சிவராத்திரியையட்டிப் பத்து நாட்களுக்கு இத்தலத்தில் பெருவிழா நடைபெறுகிறது.வயதான காலத்தில் ஆதரவின்றித் தவிக்கும் முதியவர்களை ஆதரித்துக் காக்கும் நோக்குடன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் அவர்களால் இத்தலத்தில் 'விருத்தாசிரமம்' நடத்தப்பட்டு வருகிறது. இந்நற்பணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தம்முடைய இடத்தை தந்து உதவியுள்ளது.

இத்தலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சத்திரமும் கல்யாண மண்டபமும் உள்ளன. தேவஸ்தான 'விருந்தினர்விடுதியும்' உள்ளது. தெலுங்கு கவிஞரான 'தூர்ஜாட்டி' என்பவர் இத்தலத்தைப் புகழ்ந்து 'ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர மகாத்மியம்' என்ற பெயரில் கவிதை வடிவில் நூலொன்றை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார்.

வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர் ஞானப் பிரகாசர் வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உரியன.

சேறைக் கவிராயர் உலா ஒன்றும் பாடியுள்ளார். விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் 'தென்கயிலாயமுடையார்' திருக்காளத்தி உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகின்றனர். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு 'காளத்தி உடையான் மரக்கால்' என்ற அளவு கருவி இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

சந்தமா ரகிலொடு சாதி தேக்கம்மரம்

உந்துமா முகலியின் கரையினில் உமையடும்

மந்தமார் பொழில்வளர் மல்கு வண்காளத்தி

எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே

வானவர்கள் தானவர்கள் வாதைபட

வந்ததொரு மாகடல்விடம்

தானமுது செய்தருள் புரிந்தசிவன்

மேவுமலை தன்னைவினவில்

ஏனமிள மானினொடு கிள்ளிதினை

கொள்ளவெழிலார் கவணினால்

கானவர்த மாமகளிர் கனகமணி

விலகு காளத்திமலையே.

(சம்பந்தர்)

"உண்ணாவரு நஞ்சம் உண்டான்கண்

ஊழித்தீ யன்னான்காண் உகப்பர்காணப்

பண்ணாரப் பல்லியும் பாடினான்காண்

பயின்றநால் வேதத்தின் பண்பினான்காண்

அண்ணாமலை யான்காண் அடியார் ஈட்டம்

அடியிணைகள் தொழுதேத்த அருளுவான்காண்

கண்ணாரக்காண் பார்க்கோர் காட்சியான்காண்

காளத்தியான் அவன் என்கண்ணுளானே"

(அப்பர்)

செண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே

வண்டாருங் குழலாள் உமைபாக மகிழ்ந்தவனே

கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய்

அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே"

(சுந்தர்)

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள்போல் விளங்க

செருப்புற்ற சீரடிவாய் கலசம் ஊனமுதம்

விருப்புற்ற வேடனார் சேடரிய மெய்குளிர்ந்தங்கு

அருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ.

(திருவாசகம்)

சுவாமி துதி

நீர்கொண்ட பொலம்பூங்கொன்றை

நெடுஞ்சடை வனத்துடுத்த

சீர்கொண்ட புலித்தோற (கு) அஞ்சிச்

சென்று புக்குஒளிப் பத்தாவு (ம்)

ஏர்கொண்டவுழையினங்கன்

றிலங்கிய திருக்கரத்துக்

கார்கொண்ட பொழிற்காளத்திக்

கடவுளை மனத்துள் வைப்போம்.

அம்பிகை துதி

பூமகள் இறைஞ்ச நெற்றிப் புதுமணித் திலகம் தோய்த்து

தாமரை நகுமுகத்தோர் தான் பெறப் பணிகளங்க

மாமதிப்புரையு மங்கேழ் வயக்குதிர் மலர்த்தாள் குன்றக்

கோமகளரும் ஞானப்பூங்கோதையை வணக்கம் செய்வோம்.

கயிலை பாதி காளத்தி பாதி

அறியாமலேனம் அறிந்தேனும் செய்த

செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று

நன்முகில்சேர் காளத்திநாதன் அடிபணிந்து

பொன்முகலி யாடுதலும் போம்.

(நக்கீரர்)

கண்ணப்பதேவர் திருமறம்

தந்தையாந்தாய் தந்தை நாகனாந் தன் புறப்புப்

பொத்தப்பி நாட்டு உடுப்பூர் வேடுவனாந்தி திக்கும்

திண்ணப்பனாம் சிறுபேர் பெய்தவத் தாற்காளத்திக்

கண்ணப்பனாய் நின்றான் காண்.

திருப்புகழ்

சிரத்தானத்தில் பணியாதே - செகத்தோர் பற்றைக் குறியாதே

வருத்தாமற்றொப்பில்தான- மலர்த்தாள் வைத்தெந்தனை ஆள்வாய்

நிருத்தா கர்த்தா துவநேசா - நினைந்தார் சித்தத்துறைவோனே

திருத்தாள் முத்தர்க்கருள்வோனே - திருக்காளத்திப்பெருமாளே.

-எள்ளலுறுங்

கோளத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய்திருக்

காளத்தி ஞானக் களஞ்சியமே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி. காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்

காளஹஸ்தி - அஞ்சல் - 517 644

சித்தூர் மாவட்டம் - ஆந்திர மாநிலம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருக்கள்ளில் - திருக்கள்ளம், திருக்கண்டலம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவொற்றியூர் (சென்னை)
Next