அகத்தியான்பள்ளி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருக்கோடி

கோடிக்கரை, கோடியக்கரை, குழகர் கோயில்


சோழநாட்டு (தென்கரை) த் தலம்

வேதாரண்யத்திலிருந்து கோடிக்கரைக்குப் பேருந்துச் செல்கிறது. சாலையின் இருபுறமும் உப்பளங்கள், மரங்கள் காட்சி தருகின்றன. கோடிக்கரை காட்டுப் பகுதியில் உள்ளது. வேதாரண்யத்திலிருந்து பேருந்தில் வருவோர் குழகர் கோயில் எனக்கேட்டுக் கோயிலருகில் இறங்கவேண்டும். சிறிய ஊர், (இதற்கு 1 1/2 கி.மீல்

கோடிக்கரை தீர்த்தமும் (கடல்) ருத்தரகோடி தீர்த்தமும் உள்ளன.)

கோயில் - அமைதியான சூழல், நகரத்தார் திருப்பனி.


இறைவன் - அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்.


இறைவி - அஞ்சனாக்ஷி.


தலமரம் - குராமரம்.


தீர்த்தம் - அக்னி தீர்த்தம் (கடல்) அமுதகிணறு (கோயிலுள் உள்ளது) .


சுந்தரர் பாடல் பெற்றது.

திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதகலசத்தை வாயு, தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்மாயிற்று என்பது வரலாறு. அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற பதி. சுவேதமுனிவரின் மகன் பிரமன், சித்தர்கள், நாரதர், இந்திரன், குழகமுனிவர்

ஆகியோர் வழிபட்ட தலம்.

உயர்ந்தோங்கிய ராஜகோபுரம், கொடிமரமில்லை. பிராகாரத்தில் அமிர்த விநாயகர், முருகன் சந்நிதிகள் தனித்தனிக் கோயிலாய் உள்ளன. இங்குள்ள முருகப்பெருமான் சிறப்பான மூர்த்தி - ஒருமுகம், ஆறுகரங்கள், ஒருகரத்தில் அமுதகலசம், மற்றகரங்களில் நீலோற்பலம், பத்மம், அபயர், வச்சிரம், வேல் முதலியவை ஏந்திய அழகிய திருக்கோலம், மயில் வடக்கு நோக்குகிறது. இத்லம் கோளிலித் தலமாதலின் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் (காட்டுப் பகுதியாதலின்) காடுகிழாள்' கோயிலும், அடுத்து தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதியும் உள்ளன.

மகாமண்டபத்தில் குழகமுனிவர் உருவமுள்ளது. மூலவர் - அழகிய திருமேனி - சதுரபீடம். இங்கிருந்து 1 1/2 கி.மீல் ஆதிசேது எனப்படும் கோடியக்கரை உள்ளது. கடல் தீர்த்தம். தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் நீராடுதல் விசேஷம் - கடற்கரையிலுள்ள சித்தர்கட்டம் (சித்தர் கோயில்) சிறப்பான இடம். சித்தர்கள் பலர் இங்கு வாழ்வதாக இன்னமும் நம்புகின்றனர். (குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு - கடல் உள்ள இடம் கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது) , சேரமான் பெருமாள் நாயனாருடன் வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு. தற்போது வீடுகள் உள்ளன.


"கடிதாய்க் கடற்காற்று வந்து எற்றக்கரைமேல்

குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ

கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்

அடிகேள் உமக்கு ஆர்துணையாக இருந்தீரே". (சுந்தரர்)


-"தொன்னெறியோர்

நாடிக்குழக நலமருள் என்று ஏத்துகின்ற

கோடிக் குழகரருட் கோலமே". (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில்

கோடியக்காடு - அஞ்சல் - 614 821.

(வழி) வேதாரண்யம் - S.O.

வேதாரண்யம் வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.


















Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருமறைக்காடு
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கோடி
Next