நாராயண ஸ்ம்ருதி

திருமுறைத்தலங்கள்

நாராயண ஸ்ம்ருதி

திருநாவுக்கரசர் அருளிய

திரு அங்கமாலை

திருச்சிற்றம்பலம்

தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து
தலையாலேபலி தேருந்தலைவனைத் - தலையேநீ வணங்காய்.

கண்காள் காண்மின்கறோ - கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசிநின்றாடும் பிரான் தன்னைக் - கண்காள் காண்மின்களோ.

செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்இறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும் - செவிகாள் கேண்மின்களோ.

மூக்கே c முரலாய் - முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை - மூக்கேநீ முரலாய்.


வாயே வாழ்த்துக்ண்டாய் - மதயானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை - வாயே வாழ்த்துகண்டாய்.

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை - நெஞ்சே c நினையாய்.

கைகாள் கூப்பித் தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் - கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யால் அட்டிப் போற்றிஎன் னாதஇவ் - ஆக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பளனென் - கறைக் கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் - கால்க ளாற்பயனென்.

உற்றார் ஆர்உளரோ - உயிர் கொண்டு போம் பொழுது
குற்றா லத்துறை கூத்தன்அல்லால் நமக் குற்றார் ஆர்உளரோ.

இறுமாந் திருப்பன் கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப் பட்டுச்
சிறுமான் ஏந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் (கு) - இறுமாந் திருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே - தேடிக் கண்டுகொண்டேன்.

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is யாத்ராஸ்தானம் - காஞ்சிபுரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவாசகம்
Next