திருமணம் "அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்" என்பது தமிழ்ப் பழமொழி பழமொழியின்படி ஒரு தாய், தந்தை இருவரும் இந்த உலகில் சராசரி ஒரு மனிதனைப் போல் வாழ்

திருமணம்

"அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்" என்பது தமிழ்ப் பழமொழி பழமொழியின்படி ஒரு தாய், தந்தை இருவரும் இந்த உலகில் சராசரி ஒரு மனிதனைப் போல் வாழ்க்கை நடத்தினாலும், அவர்களுடைய குழந்தைகளுக்குத் தெய்வம் போல் எல்லா வகையிலும் உதவி செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. தற்காலத்தில் இளந்தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதிலே அவர்களுடைய வாழ்க்கைக்குப் பொழுது போக்கு போலவும், சில இடங்களுக்குச் செல்லும் போது கௌரவமாக செல்வதற்கும், தம்பதிகளாக வாழ்கிறார்களே தவிர வாழ்க்கையின் உண்மையை அறிந்து கொண்டு வாழ்வதாக தெரியவில்லை. வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் உதவி செய்வதோடு கூட, மனதிலே அன்பை வளர்த்துக் கொள்வதற்கும், வாழ்க்கையிலே தியாகத்தை வளர்த்துக்கொள்வதற்கும், இளம் வயதிலே இன்பமாக இருப்பதற்கும் மாத்திரம் அல்லாமல், வாழ்நாள் முழுவதும் ஏன் மறுபிறவியிலும் கூட இன்பமாக வாழ்வதற்கும்தான் வாழ்க்கை. தற்கால நாகரீகத்தில் வெளிநாட்டு நாகரீகம் போல் இன்றைக்கு நமக்குப் பிடித்த கணவனோடு வாழலாம், அல்லது பிடித்த மனைவியோடு வாழலாம், பிடிக்காவிட்டாலும் சரி, அல்லது இதைக் காட்டிலும் மனத்திற்கு வேறு சந்தோஷத்தை அளிக்க கூடியவர்களாய் இருந்தாலும் சரி 'கண்டதே காட்சி' என்ற நிலையில் உலகாயத வாழ்க்கையோடு தொழிற்சாலையில் பணி புரிவது போல் வீட்டிலும் நடப்பது, ஒரு கடமைப் பணியென பணி செய்து வரக்கூடிய குடும்பங்களில் மன ஒற்றுமை குலைகிறது. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு மத அடிப்படையின் கீழ் அமைகிறது. ஒவ்வொரு மதத்திலும் கல்யாணம் செய்து கொள்ளும் தினத்தன்று தம்பதிகள் இன்னின்ன முறையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. நம்முடைய இந்து சமயத்தில் அக்னி சாக்ஷியாகவும், ஏழு அடி காலெடுத்து வைப்பதன் மூலமாகவும் கல்யாணம் நடைபெறுகிறது. தாலி கட்டுவது, மோதிரம் மாற்றிக் கொள்வது, மாலை மாற்றிக்கொள்வது, துண்டு மாற்றிக்கொள்வது, ரிஜிஸ்தர் செய்து கொள்வது போன்றவைகள் எல்லாம் கல்யாண சடங்குகளில் இருந்தாலும் சப்தபதியும் அக்னியில் பொறிபோட்டு ஹோமம் செய்வதும்தான் முக்கியமானவை. அக்னியில் எந்தப் பொருளைப் போட்டாலும் எல்லாம் எரிந்து போய் விடும். அக்னி சாக்ஷியாக நடை பெறும் எல்லா இடத்திலும், கல்யாணத்துக்கு முன்பாக நடந்திருந்த தெரிந்தோ, தெரியாமலோ செய்த எல்லாவித தவறுகளும், எரிக்கப்பட்டு, பொசுக்கப்பட்டு, விவாகம் புனிதச் சடங்காக ஆகிறது. கன்னிகாதானம் என்று விவாகத்தைச் சொல்லப் படுகிறது. இந்தக் காலத்தை ஓட்டி, வயதான பிறகு கல்யாணம் செய்தாலும் கல்யாணத்தை கன்னிகாதானம் என்று தான் சொல்லப்படுகிறது. ஒரு பொருளைத் தானம் கொடுக்கும்போது மனப்பூர்வமாக முழு மனதுடன், சந்தோஷத்துடன் கொடுப்பவர், திரும்பவும் பெறவதற்கு ஆசைப்படாமல், முயற்சி செய்யாமல் தானத்தைக் கொடுப்பதுதான் தானத்தின் விளக்கம். எந்த ஒரு பொருளை கொடுத்தாலும் இது நம்முடையது அல்ல, இது உன்னைச் சார்நதது என்று இரண்டு வகையிலும் சொல்லித் தான் கொடுக்க வேண்டும். கொடுத்த பொருளை திரும்பப் பெறுவது தானத்தின் விளக்கமல்ல, இதன்படி கல்யாணம் நடந்தது முதல் தம்பதிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிரிந்து போவது என்பதையோ, தாய் வீட்டிற்குத் திரும்பி வந்து விடுவதையோ அல்லது தன்னிச்சையாக, சுதந்திரமாக இருப்பதையோ இந்த சமயம் அனுமதிப்பதில்லை தானம் கொடுத்து பொருளைக் காப்பதற்காக அவ்வப்போது தானம் கொடுத்தவரைப் பணம் கேட்பதும் பொருள் கேட்பதும் சாஸ்தீரமுமல்ல, முறையுமல்ல. அத போல் கன்னிகாதானம் ஆகிக் கல்யாணமான பெண்ணிற்காக அந்தப் பொருளைக் ª £கண்ட வா, இந்தப் பொருளைக் ª £கண்டு வா என்று பெண்ணையோ, சம்பந்தியையோ பிள்ளை விட்டார் கேட்பதும் சாஸ்தீரமுமல்ல, முறையுமல்ல. தற்காலத்தில் வரதக்ஷிணை கொடுமையால் பல பெண்களுக்குக் கல்யாணம் ஆகாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. புனிதமான விவாகம் என்னும் சடங்கைப் பணத்தோடும், பொருளோடும் சம்பந்தப்படுத்தி அதனால் பெண்களைக் கஷ்டப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். அதே போல் தற்காலத்தில் பெண்கள் சம்பாதிக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு புருஷனுக்குப் பெண்கள் மீது சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதே போலத்தான் ஆண், பெண் இருவரும் இணைந்து பல இடங்களில் உத்யோகம் செய்வதனால் பெண்ணிற்கும், ஆணின் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. இப்படி பரஸ்பரம் இருவருக்கும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இதோடு கூட இருவரும் சம்பாதிப்பதனால் இருவருடைய பணத்தையும் வைத்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டிய தம்பதிகள், இந்தப் பணத்தினாலேயே பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு கஷ்டமும் படுகிறார்கள். இதனால் வாழ்க்கையில் குழந்தைகளைக் கவனிப்பது, பெற்றோர்களைக் கவனிப்பது கூடக் குறைந்து போய் விடுகிறது. ஆகவே கட்டுப்பாடற்ற வாழ்க்கை பல குடும்பங்களிடையே வளர்ந்து வருகின்றது. தற்காலச் சூழ்நிலையில் இவையெல்லாம் தவிர்க்க முடியாத நிலையில் இருந்தாலும் பரஸ்பரம் நம்பிக்கையோடும், தார்மீகச் சிந்தனையோடும், ஈஸ்வர பக்தியோடும்.. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டால் தற்காலச் சூழ்நிலையில் கூட சமாளித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். மற்ற மதத்தினர் போல் நம்முடைய விவாகம், நம்முடைய குழந்தைகள் இவைகள் எல்லாம் வெறும் மனச் சந்துஷ்டிக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. நல் தம்பதிகளாக நாமும் இருந்து, நல்ல குழந்தைகளைப் பெற வேண்டும். நம்முடைய முன்னோர்களும், நம்முடைய தேவதைகளுக்கும், நம்முடைய ரிஷிகளுக்கும் பலவிதமான பூஜைகளும், இறந்த பிற்பாடு ஆண்டு தோறும் செய்ய வேண்டிய சில கர்மாக்களும், கடமைகளும் நமக்கெல்லாம் இருக்கின்றன. மற்ற மதத்தினருக்கு இதுபோன்று கடமைகள் ஒன்றும் கிடையாது. ஆகவே மனிதர்களாக, தம்பதிகளாக நாம் வாழ்ந்தாலும், நம்முடைய குழந்தைகளுக்குத் தெய்வீக அருள் கிடைப்பதற்கும், தெய்வீகத் தன்மை பெறுவதற்கும் நம்மைப் பார்த்து மற்றவர்கள் நல்லெண்ணத்துடன் வெறும் "போகப்" பொருளாகப் பார்க்காமல் தெய்வீகத் தன்மையோடு பார்ப்பதற்கும் உகந்தவர்களாக, ம்முடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். உடல்,மனித வடிவு, உள்ளம், செயல் எல்லாம் தெய்வீக, ஆன்மீகத் தொடர்புடையது என்ற உணர்வோடு ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்து சமயத்தில் வரதக்ஷிணை கொடுக்கும், வாங்கும் பழக்கம் என்பது கிடையாது. இதற்கு சாஸ்திர ஆதாரமும் கிடையாது. மத்தியில் வந்த ஒரு தவறான பழக்கம். அதே போல் இப்பொழுது நடத்துவது போல் விவாகரத்து என்பதும் இந்து சமயத்தில் சாஸ்திர முறைப்படி கிடையாது. உடைகளை மாற்றுவது போல், உத்தியோகத்தை மாற்றுவது போல், வாழ்க்கையை அடிக்கடி வெளிநாட்டு நாகரீகம் போல் மாற்றிக் கொள்வதற்கு இந்து சமயத்தில் அனுமதி கிடையாது. கணவனுக்காகவே மனைவி - மனைவிக்காகவே கணவன். வியாதியினாலோ, தவிர்க்க முடியாத காரணத்தினாலேயோ குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளாக இருக்க முடியாத சூழ்நிலை இருந்தாலும், விவாகரத்து என்பது கிடையாது. தனித்து இருக்கலாம். வாழ்நாள்முழுவதும் கணவன், கணவன்தான், மனைவி மனைவிதான். அதுதான் இந்து சமயத்தில் தனிச்சிறப்பு. இதை வைத்துத்தான் தாய் தந்தையர்களை பார்த்து "அன்னையும் பிதாவும், முன்னெறி தெய்வம்" என்றெல்லாம் கூறப்பட்டது.