தடுக்கவேண்டாம் பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என

தடுக்கவேண்டாம்

பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.

1.ருசியின்மை 2. உடல்நடுக்கம்

3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு

4. வாயுவினால் வயிறு பெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

ஜீரகத்தை லேசாக வறுத்து (5 கிராம் அளவில்) கால் லிட்டர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, வெதுவெதுப்பாக சிறிய அளவில் அடிக்கடி பருக வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் தான் வந்திரம் குளிகை, வாயுகுளிகை என்று மாத்திரைகள் விற்கப்படுகின்றன, தான்வந்திரம் குளிகையை மேல் குறிப்பிட்ட ஜீரக ஜலத்துடன் 1 மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ் அதாவது 25IL, 1 வாயு குளிகையுடன் காலை, இரவு -ஆஹாரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருந்தை நாடாமல் இருக்க வேண்டுமாயின் ஏப்பத்தை தடுக்காமல் அதிக சத்தமில்லாமல் மெதுவாக விட்டு விடுவதே நல்லது.

சகுணத்திற்கு பயந்து சிலர் தும்மலை அடக்குகின்றனர். வீட்டிலிருந்து ஒருவர் வெளியே கிளம்புகிறார். வேறு நபர் யாரேனும் தும்மி விட்டால் 'வெளியே கிளம்பும் போது தும்முகிறாயே' என்று கிளம்புபவர் கடிந்து கொள்கிறார். வெளியே கிளம்பும்போது தும்முவது நல்ல சகுனம் அல்ல என்பதற்கான காரணம் நமக்குத் தெரியவில்லை என்றாலும் தும்மல் வந்தால் தும்மி விடுவதே சிறந்தது. தும்மலை அடுக்கும் பழக்கத்தை கொண்டவருக்கு கீழ்காணும் உபத்ரவங்கள்தோன்றக்கூடும்.

1. தலைவலி, 2. புலன்களுக்கு பலம் குன்றுதல், 3. கழுத்துப் பிடிப்பு, 4. மகம், வாய் ஒரு பக்கமாய் கோணிவிடுதல்

மூலிகை புகையை மூக்கு அல்லது வாய்வழியாக இழுத்து வாய்வழியாகவே விடுதல், கண்ணில்மை எழுதுதல், மூலிகை பொடியை முகர்தல், மூக்கினுள் மருந்து விடுதல், சூர்யனை பார்த்தல் போன்ற சிகித்ஸைகளை ஒரு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை மற்றும் நேர்ப்பார்வையில் செய்துகொண்டால் தும்மலை அடக்குவதால் ஏற்படும் பிணிகள் நீங்கிவிடும்.

இன்று தண்ணீர் குடிக்கவே பயமாக உள்ளது. அந்த அளவுக்கு தண்ணீர் கெட்டு விட்டது. சில சமயங்களில் இரவில் தண்ணீர் லாரியில் வரும் ஜலத்தை மறுநாள் காலை பார்த்தால் தலை சுற்றும் மஞ்சள் நிறம், ரசாயன மணம் போன்றவைகளால் தண்ணீரை குடிக்கக் கூடமுடியவில்லை தண்ணீர்தாகம் எடுக்கும் போது அதை அடக்குவதை பழக்கமாகக் கொண்டவர்களுக்கு கீழ்காணும் உபாதைகள் தோன்றும்.

1. நாவறட்சி, 2. உடல் தளர்ச்சி, 3. காது களோமல், செவிடு ஆகுதல் 4. தலைச்சுற்றல், 5. விஷயங்களில் குழப்பம், 6. ஹ்ருதய ரோகங்கள்.

'தண்ணீரை குடிக்க முடியாத அளவுக்கு கெட்டுவிட்டது அதனால் தண்ணீர் தாகத்தை அடக்கினேன், மேலுள்ள உபாதைகளால் வாடுகிறேன்' என்று ஒருவர் கூறினால் வேறு வழியில்லை, தண்ணீரை நன்கு காய்ச்சி, வடிகட்டி அதன்பிறகு தான் அருந்த வேண்டும்' என்று மருத்துவர் உபதேசம். வடிகட்டி ஆறிய பிறகு பானையில் ஊற்றி சிறிது வெட்டிவேர், விளாமிச்சை வேர் போன்றவை பானையில் போட்டு தண்ணீரில் ஊற விடவேண்டும். நன்கு குளிர்ந்த இந்த மூலிகை பானைத் தண்ணீர் குடிப்பதற்கு அமிருதம் போலவும், உடல் சூட்டை தணித்து தண்ணீர் தாகத்தையும் அதன் மூலமாக மேல் குறீப்பிட்ட நோய்கள் நீங்கவும் உதவுகின்றது.

மேலும் விபரங்களுக்கும் சந்தேக நிவர்த்திக்கும் தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net