ஆயுர் வேதம் சர்க்கரை வியாதி நவம்பவர் 14ஆம் தேதி 2003 அன்று சர்க்கரை வியாதி தினமாக உலகெங்கும் அறியப்படுகிறது கடந்த ஞாயிற்றுக்கிழமை 'The Hindu' பத்திரிக்கை சர்க

ஆயுர் வேதம்

சர்க்கரை வியாதி

நவம்பவர் 14ஆம் தேதி 2003 அன்று சர்க்கரை வியாதி தினமாக உலகெங்கும் அறியப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 'The Hindu' பத்திரிக்கை சர்க்கரை வியாதியை பற்றி மருத்துவர் குழு ஒன்று சமர்ப்பித்துள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளது. Fredrick basting Who மற்றும் Charles Best என்ற விஞ்ஞானிகள் நவம்பர் 14ம்தேதி பிறந்தவர்கள். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் Insulin -ஐ 1921ம் வருடம் கண்டுபிடித்தவர்கள் அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நவம்பர் 14ம் தேதியை சர்க்கரை வியாதி விழிப்புணர்வு தினமாக அறிப்படுகிறது. இவ்வருடம் "Diabates and kidney disease என்ற கருத்தையும் "Diabetes could cost your Kidneys. Act now" என்ற தலைப்பும் அவர்கள் வைத்துள்ளனர் நவீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை வியாதியைப் பற்றி எழுதும் கட்டுரைகளை காணும்போது நமது பாரம்பர்ய ஆயுர்வதே மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஏன் மக்களிடைய பரப்புவுதற்கு அவர்களுக்கு சமமாக எழுத முன்வருவதில்லை என்று வியப்பாக உள்ளது!' சர்க்கரை வியாதி என்று ஒரு அத்யாயம் தனியாக ஆயுர்வேதம் எடுத்துறைக்காவிட்டாலும் ஆங்கில மருத்துவம் எடுத்துரைக்கும் சர்ககரை வியாதியின் காரணம், நோயின் தன்மை, உபத்திரவங்கள், கார்ய காரண பந்தம், நோயை கட்டுப்பாட்டில் வைக்க ஆராய்ச்சியாளர்கள் கூறும் அறிவுரைகள் போன்றவை 'பிரமேஹம்' என்ற நோயுடன் ஒத்து வருவதால் அந்நோய்பற்றிய விழிப்புணர்வு கட்டுரை வடிவத்தில் வழங்கப்படுமேயானால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆயுர்வேதத்தின் மூலமாகவும் மருந்து தர இயலும் என்று தெரிய வரும்.

சிறுநீர் மிதமிஞ்சி அல்லது கோளாறடைந்து வெளியாகும் வியாதி பிரமேஹமாகும். நவீன மருத்துவர்கள் கூறும் காரணங்கள். பிரமேஹத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அமைந்துள்ளன. அதாவது மித மிஞ்சி தூங்குதல், தயிர், அருவருக்கத்தக்க ஈன மிருகங்களுடையவும், நீர்பாங்கான பிரதேசத்திலுண்டாகும் மிருகங்களுடையவும் மாம்ஸங்கள். பால், புதிதான தானியங்களாலாகிய அன்னபானங்கள், சர்க்கரை, கற்கண்டு, வெல்லம் சேர்ந்த பண்டங்கள் ஆகிய இவ்வித உணவுகளை உண்பதும், மற்றும் கபத்தை அதிகரிக்கக்கூடிய ஸகல பதார்த்தங்களும், செய்கைகளும் பிரமேஹத்திற்கு காரணமாம் என்று ஆயுர்வேதம், ஏக தேசம் இதே கருத்துக்களை இக்கால நவீன ஆராய்ச்சியாளர்களும் சர்க்கரை வியாதிக்கு காரணமாய் கூறுகின்றனர்.

சிறுநீர் பையான 'Urinary bladder' என்ற அங்கத்தை பிரமேஹம் மிக்கவாறும் பாதிக்கிறது, இந்தப் பையை 'வஸ்தி' என்று ஆயுர்வேதம், வாயு, பித்த கபங்களை ஆங்கில மருத்துவம் சம்மதிக்கவில்லை யென்றாலும் ஆயுர்வதேம் கபத்தினால் பத்து, பித்தத்தினால் ஆறு, வாதத்தினால் நான்கு வகைகளாக பிரமேஹம் வருவதாக கூறுகிறது.

'விருக்கம்' என்று கூறப்படும் Kidney மற்றும் 'வஸ்தி' "Bladder" என்கிற மூத்திரைப்பையுடன் இணைக்க 'URETER' என்ற குழாய்கள் உதவுகின்றன. சிறுநீர் Kidney -ல்தான் உற்பத்தியாவதால் அது மூத்திரப்பையையும் பிரமேஹத்தில் கேடு விளைவிக்கிறது. 'Diabetic Nephropathy' என்பது கடுமையான ரத்தநாளங்களில் ஏற்படும் கோளாறினால் பல ஆண்டுகளாக இருந்துவரும் சர்க்கரை வியாதியால் மெதுவாக சிறுநீரகங்களின் செயல்களில் தொய்வு ஏற்பட்டு அவ்வுறுப்பு பழுதடைவதால் இருதய நாளங்களில் அதன் பாதிப்புகள் உணருவுதால் மரணம் ஏற்படுகிறது. நவீன மருத்தவர்களின் கூற்று முதல் நிலையில், அதிக அளவில் சிறுநீர் வெளியாகிறது. ஆனால் albumin அல்லது Protein வெளியாவதில்லை. இரண்டாவது நிலையில், மிகச் சிறிய அளவில் Protein (or) albumin வெளியாகிறது. இதற்கு 'micro albuminuria' என்று பெயர். மூன்றாவது நிலையில் அதிக அளவில் வெளியேறுவதால் macroproteinuria என்று பெயர். Protein சிறுநீரில் அதிகம் வெளியேறுவதால் உடலில் வீக்கம் மற்றும் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. ரத்தத்தில் Protein அளவு குறைவதால் இவ்வாறு உண்டாகிறது. நான்காவது நிலையில் ரத்தத்திலுள்ள விஷங்களை சிறுநீரகங்களால் வெளியேற்ற முடியாமல் போவதால் Urea மற்றும் Creatinine அளவு அதிகரிக்கின்றது. இதற்கு 'Chronic Renel Failure' என்று அழைக்கின்றனர். ஐந்தாவது நிலையில் சிறுநீர் குறைந்த அளவில்தான் வெளியேறும் Serum Creatinine அளவு பெரிய அளவில் அதிகரிப்பதால் மாற்று சிறு நீரக அறுவை சிகித்ஸை வரை வந்துவிடுகிறது.

சிறுநீரில் கபத்தின் தோஷ ஆதிக்கத்தினால் கீழ்காணும் வகையில் நிறங்கள் தோன்றும் என்று ஆயுர்வேதம்.

1. உதக மேஹம் - இதில் மூத்திரம் தெளிவாகவும், அளவில் அதிகமாகவும், குளிர்ச்சியாகவும், எவ்வித நாற்றமில்லாததாகவும் ஆகவே தண்ணீர் போன்றதாயும், சில சமயம் சிறிது கலக்கமாகவும், சொற்பம் பிசுபிசுப்பாகவும் இறங்கும் சிகித்ஸை - தத்ர உதகமேஹினம் பாரிஜாத கஷாயம் பாயயேத் என்று ஸுஸ்ருதர் உதகமேஹத்தில் பாரிஜாத கஷாயம் குடிக்கவும்.

கடுக்காய், சிறுகுமிழ், கோரைக்கிழங்கு, வெள்ளைப்பாச்சோத்தி கஷாயமாகக் காய்ச்சி, தேன் கலந்து பருகவும் என்று சரகர்.

2. இக்ஷீமேஹம் - இதில் இறங்கும் நீர் கருப்பஞ்சாறு போன்ற நிறத்திலிருக்கும்.

சிகித்ஸை - வைஜயந்தி (கடுக்கா) கஷாயம் பருகுமாறு ஸுஸ்ருதர்.

வட்டத்திருப்பி, வாயுவிடங்கம், மருதமரப்பட்டை, கருங்காலிப் பட்டை கஷாயம் தேனுடன் பருகவும் என்று சரகர்.

3.ஸாந்த்ர மேஹம் - இதில் சிறுநீர் பழக பழக ஒருவாறு இறுகிக் கொள்ளும்.

சிகித்ஸை - சப்தபர்ணா (ஏழிலைப்பாலை) கஷாயம் பருக - ஸ¨ஸ்ருதர்.

மஞ்சள், மரமஞ்சள், தகரவிதை, வாயுவிடங்கம் கஷாயம் தேனுடன் பருகவும் சரகர்.

4.பிஷ்டமேஹம் - இதில் சிறுநீர் நீரில் மாகரைத்தாற் போலவும், அதிக அளவாகவும் வெளியாகும், அப்போது ஒருவாறு மயிர்சிலிர்க்கையுண்டாகும்.

சிகித்ஸை - மஞ்சள். மரமஞ்சள். கஷாயம் என்று ஸுஸ்ருதர்

மரமஞ்சள், வாயுவிடங்கம், கருங்காலி, வெண்கருங்காலி கஷாயம் தேனுடன் பருகவும் என்று சரகர்.

6.சுக்ரமேஹம் - இதில் சிறுநீர் சுக்ரதாதுவைப் போன்றதாகவாவது, சுக்ரம் கலந்தாவது வெளியாகும்.

கிசித்ஸை - ககுபம் சந்தன கஷாயம் - ஸுஸ்ருதர்.

தேவதாரு, கோஷ்டம், அகில், சந்தனக்கட்டை கஷாயம் தேனுடன் பருக -சரகர்.

7.ஸிகதாமேஹம் - இதில் கடினமாகவும் மிக ஸ¨க்ஷ்மமாகவுள்ள சிறு மணல்களைப் போன்ற வஸ்துக்கள் சிறுநீருடன் வெளியாகும்.

சிகித்ஸை - சித்ரக்கஷாயம் (கொடிவேலி வேர்க்கஷாயம்) என்று ஸுஸ்ருதர்.

மஞ்சள், முன்னை, திரிபலை, வட்டத்திருப்பி, கஷாயம் தேனுடன் என்று சரகர்.

8.சீதமேஹம் - இதில் சிறுநீர் அதிக அளவாகவும் , இனிப்பாகவும், மிக குளிர்ந்ததாகவும் இருக்கும்.

சிகித்ஸை வட்டத்திருப்பி , பெருங்குறும்பை, நெரிஞ்சில் கஷாயம், தேனுடன் என்று சரகர். திரிபலா. சரக்கொன்னை, கருந்திராட்சை கஷாயம் என்று ஸுஸ்ருதர்.

9.சநைர் மேஹம் - இதில் சிறுநீர் சொற்பமாகவும், அடிக்கடி மெதுவாகும் வெளியாகும்.

சிக்த்ஸை - கருங்காலிப்பட்டை கஷாயம் என்று ஸுஸ்ரதர், குரோசானி, ஓமம், விளாமிச்சைவேர், கடுக்காய், சீந்தில் கொடி கஷாயம் தேனுடன் என்று சரகர்.

10.லாலா மேஹம் இதில் சிறுநீர் குழந்தைகளுடைய ஜொள்ளு நீர் போல நூல் நூலாகவும் பசையுள்ளதாகவும் இருக்கும்.

சிகித்ஸை - வட்டத்திருப்பி, அகில், மஞ்சள் கஷாயம் என்று ஸுஸ்ருதர்.

செவ்வியம், கடுக்காய், கொடிவேலி, ஏழிலம்பாலைப்பட்டை கஷாயம் தேனுடன் என்று சரகர்.

ஸ்பரிசத்திலும் வீர்யத்திலும் உஷ்ணமாயுள்ள பதார்த்தாதிகளால் மிகப் பிரகோபித்த பித்த தோஷம் மேதஸ் முதலிய தாதுக்களையே மிகவும் தூஷிப்பது. பித்து சம்பந்தமான ஆறு வகையிலான சிறுநீர் போக்கை ஏற்படுத்துகின்றன.

1.க்ஷ£ரமேஹம் இந்த மேஹத்தில் சிறுநீரானது வாஸனை நிறம் - சுவை - பரிசம் அனைத்திலும் க்ஷ£ரம் போன்று வெளியாகும்.

சிகித்ஸை - திரிபலா கஷாயம் - ஸுஸ்ருதர்.

2.நீலமேஹம் - சிறுநீர் இந்த மேஹத்தில் நீலநிறமாயிருக்கும்.

சிகித்ஸை - அரசமரப்பட்டை கஷாயம் - ஸுஸ்ருதர்.

3.காலமேஹம் அஞ்ஜனம் போல் நீர் கறுப்பாயிருந்தால் காலமேஹம் என கூறப்படுகிறது.

சிகித்ஸை - நியக்ரோதாதி கஷாயம் - ஸுஸ்ருதர்.

4.ஹாரித்ரமேஹம் - மூத்திரம் காரமாகவும், எரிச்சலை உண்டு பண்ணுவதாகவும், மஞ்சள் நிறமுமாயிருந்தால் அது ஹாரித்ர மேஹம் எனப்படும்.

சிகித்ஸை - அரசமரப்பட்டை கஷாயம் - ஸுஸ்ருதர்.

5.மாஞ்ஜிஷ்ட மேஹம் - மஞ்ஜிஷ்டி யென்னும் சரக்கு கலந்த தண்ணீரைப் போன்றதும், ஒருவித துர்நாற்றமுள்ளதுமாய் சிறுநீர் வெளியாகும்.

சிகித்ஸை - மஞ்சிட்டை சந்தனம் கஷாயம் - ஸுஸ்ருதர்.

6.இரக்த மேஹம் - சிறுநீர் ஒருவித சவர் நாற்றமும் உஷ்ணமும். உப்புச்சுவையும். இரத்தநிறமாகவுமிருந்தால் அதை இரத்த மேஹம் என்பர்.

சிகித்ஸை - சீந்தில் கொடி, குமிழ், பேரீச்சம் கஷாயம் - ஸுஸ்ருதர், சரகர் இவ்வகை சிறுநீரில் கிழ்காணும் மருந்து சரக்குகளை பொதுவாகக் கூறுகிறார்.

1.விளாமிச்சைவேர் கோரைக்கிழங்கு, நெல்லிமுள்ளி, கடுக்காய்

2. பேய்ப்புடல், வேப்பம்பட்டை, நெல்லி, சீந்தில்கொடி

3. ஞாழல்பட்டை, செந்தாமரை, கருநெய்தல் கிழங்கு, பூவரசம்பூ முதலியன கஷாயம் காய்ச்சி தேனுடன் பருக.

வாததோஷ மேலீட்டால் நான்கு வகை பிரமேஹங்கள் -

1.வஸா மேஹம் - இதில் சிறுநீரானது கொழுப்பு நீரோடு கலந்தாவது வஸையாகவேயாவது அடிக்கடியும் வெளியாகும் சிகித்ஸைப் பெருவாகை கஷாயம் - ஸுஸ்ருதர்

2.மஜ்ஜா மேஹம் உள்ளவன் மஜ்ஜையென்னும் தாதுவைப்போன்ற அல்லது மஜ்ஜையோடு கூடிய நீரை அடிக்கடியும் வெளியிடுவான்.

சிகித்ஸை - கொட்டம். குடகப்பாலை , வட்டத்திருப்பி. பெருங்காயம். கடுகு ரோஹிணி ஆகியவற்றை விழுது போல் அரைத்து சீந்தில்கொடி. கொடிவேலி மருந்திட்டு காய்ச்சிய கஷாயத்தில் கலக்கி குடிக்கவும் என்று ஸுஸ்ருதர்.

3.ªக்ஷளத்ர மேஹம் - மூத்திரம் சிறிது துவர்ப்பும் இனிப்புமாய் வறண்ட குணமும் உள்ளதாயிருந்தால் அதை ªக்ஷளத்ரமேஹம் என்பர்.

சிகித்ஸை - கருங்காலிப்பட்டை, பாக்குக் கொட்டை கஷாயம் குடித்தல் நலம் தரும் என்று ஸுஸ்ருதர்.

4.ஹஸ்திமேஹம் - மதங்கொண்ட யானைக்கு வருவதுபோல் எப்பேபொழுதும் நிண நீரோடு அதிக வேகமில்லாமல் சீறுநீர் வெளியானால் அது ஹஸ்தி மேஹம் எனப்படுகிறது.

சிகித்ஸை - பனிச்சை, விளாங்காய், வாகை, பலாசம், பெருங்குரும்பை, சிறுகாஞ்சுரி கஷாயம் என்று ஸுஸ்ருதர்.

பிரஹேமத்தில் இதுபோல் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள் குறப்பிட்ட மூலிகை மருந்துகள் மூலம் குணமாவதால் இரண்டு விஷயங்கள் இதன் மூலம் தெளிவாகின்றன, அதாவது சிறு நீர் சுத்தியினால் அதன் உற்பத்தி கேந்திரமாகிற சிறுநீரகங்கள் பலம் பெறுகின்றன. இரண்டாவதாக வாத - பித்த -கப தோஷங்களின் சீற்றமானது குறைகிறது. அதனால் பிரமேஹத்தை கட்டுப்பாட்டில் வைக்கமுடிகிறது.

நவீன மருத்துவர்கள் கூறுவது யாதெனில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு. பழுதடைந்த சிறுநீரகங்களை குணப்படுத்த முயல்கின்றனர். ஆயுர்வதேம் சிறுநீரில் உள்ள கேடு நீங்கும்போது அதன் வழியாகவே சீற்றமடைந்து தோஷத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்கிறது.

மேலும் விபரங்களுக்கும் சந்தேக நிவர்த்திக்கும் தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net