கட்டுரைகள் - ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே

ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே

கிருஷ்ண ஜெயந்திக்கு முறுக்கு, சீடை, அதிரசம், என்று விதவிதமாய் பக்ஷணம் பண்றோம். ஸ்ரீராமரும், மஹாவிஷ்னு அவதாரம்தானே அதுக்கு ஏன் நீ்ர் மோரும், பானகமும் மட்டும்னு ஏற்படுத்தி இருக்குனு ஒருத்தர் கேட்டார்.

ராமர் ராஜா பிள்ளை, நெனைச்சா லட்டுவும், மைசூர்பாக்கும் கூட பண்ணியிருக்கலாம். ஆனா பின்னாலே வனவாசம் பண்ணணும். அதோட சீதையைப் பிரிஞ்சு சோகத்திலே இருக்கற போது முறுக்கு தேங்குழலும் திங்கத்தோணுமா ? அதோட வானரப்படை அத்தனைக்கும் எத்தனை பக்ஷணம் பண்ணியாகணும்

அவர் ஸ்வாமியாச்சே! நெனைச்சா வராதான்னு நீங்க கேக்கலாம். தசரதர் பிள்ளையா வேஷம் போட்டுண்டு பூலோகத்துக்கு வந்திருக்கிறவர் ராமர். கடல் மாதிரி வீடு, கார் எல்லாமிருக்கிற நடிகனாயிருந்தாலும் பிச்சைக்கார வேஷம் போட்டா பிச்சையெடுத்துதான் ஆகணும்.நான் பணக்காரன் ,அதனாலே கப்பரையேந்த மாட்டேன்னா பார்க்கறவா சிரிப்பா.

கிருஷ்ணன் மாடு மேய்கிறவன் அவன் கூட நிறைய சினேகிதா எல்லோருக்கும் நொறுக்குதீனி வேணும். பண்ணிக் கொடுக்க யசோதாம்மா இருக்கா. அபூர்வமா பிறந்த பிள்ளை. முன்னாலயும் பின்னாலேயும் குழந்தை இல்லே. அதோட பூதனை சகடாசுரன், திருணாவர்த்தன்னு அசுரனை சம்ஹாரம் பண்ணணும் , யாதவா தெய்வம்ன்னு நெனைச்சு ஓதுங்கிடப்படாது. இப்படி பக்ஷணம் கேட்டு வெண்ணெய் திருடி அவாளை சகஜநிலைக் கொண்டு வரவேண்டிய கட்டாயம் இருந்தது கிருஷ்னனுக்கு.

ராமர் சமாசாரம் அப்படி இல்லே, ககொளுத்துகிற வெய்யில், அன்னக்கொடி கட்டி சாப்பாடு போடற ராஜா தசரதர். வெய்யில்லேபித்தம் தலைக்கேறாம இருக்க சுக்கு, அதோட காரம் தெரியாம இருக்க வெல்லம். இது தான் பானகத்தோட ரகசியம். நீர்மோர் குடலுக்கு குளிர்ச்சி. அதோட, கொழப்பும் ஏறாது, தாகமும் அடங்கும். காட்டிலே அலைகிற ராமனுக்கு நீர்மோரும், பானகமும்னு ஆச்சு.

ராமர் ஒரே ஒரே குறும்புதான் செய்தார். களிமண்ணை சின்னச் சின்னதா உருட்டி வெயில்லே காயவைப்பா. அதை உண்டை வில்லிலே அடிச்சா 'ண்ங்' னு தாக்கும்.

கைகேயி அம்மாவோட கூட வந்தவ மந்தரை.அவள் முதுகிலே சதை துருத்திண்டு நிக்கும். அதை குறி தவறாம அடிக்கிறதுலே குழந்தை ராமனுக்கு குஷி. ராவண சம்ஹாரத்தின் விதை அங்கே தான் விழறது. இல்லேன்னா மந்தரை மனசுலே பகை வளர்ந்திருக்குமா? கைகேயிக்கு அவதான் தப்புத்தப்பா போதனை பண்ணியிருப்பாளா? துஷ்ட நிக்ரஹம் பண்ணின ராமர் மந்தரை கிட்டே வம்பு பண்ணி இருப்பாரா?

அடுத்ததாக அவர் செய்த தப்பு மறைஞ்சு நின்று வாலி மேலே அம்பு விட்டது. சீதையை ராவணன் தூக்கிண்டு போயாச்சு. துணையில்லாம நெடுவழி போகக் கூடாதுங்கறதை லோகத்துக்குப் புரிய வைக்கணும். தசரதர் காலமாயாச்சு. அயோத்திக்குச் செய்தி அனுப்பினா பரதன் படையோடு வரமாட்டானா? வாலிகிட்டே போய் 'அக்குள்ளே இடுக்கிண்டு நாலு சமுத்திரத்துக்கும் போனியே, அந்த ராவணன் இந்த மாதிரி செய்தான்'னு சொன்னாப் போதாதா வாலியைப் பார்த்துமே ராவணன் சீதையை விட்டுடுவானே! ராமாவதாரம் பூபாரம் குறைக்க, ராவணாதிகளை சம்ஹாரம் பண்ண நடந்தது.

அதனாலேதான் சுக்ரீவன் கிட்டே போனார். தன்னோட பலத்துலே பாதி வாலிக்குப் போயிடுமேன்னுதான் மறைஞ்சு நின்னு அம்பு விட்டார். அதோட வாலி சுக்ரீவன் மனைவியை அபஹரிச்சுண்டவன். சுக்ரீவனை பேசவே விடாம அடிச்சுத்துரத்தினவன் வாலி. தப்பே செய்திருந்தாலும் எதிராளி நியாத்தையும் கேட்கணும். அப்புறம் மனசுக்கு ஏற்கலைன்னா சிக்ஷிக்கறது தர்மம். இப்படி வாலி பக்கம் நிறைய ஓட்டைகள். ஓட்டை குடத்திலே எவ்வளவு தண்ணிர் நிற்கும்?

வாலியை தாரை தடுக்கறா,' ராமன் வந்து உன் தம்பியோட சேர்ந்திருக்கான்'னு சொல்றா. ராமன் தம்பிக்காக


Previous page in    is கட்டுரைகள் - தமிழ்த் தொகை அழகு
Previous
Next page in   is  வியாஸ பூஜையும் சாதுர் மாச்யமும்
Next