காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -7

ந்த கல்லுரி பல வருடங்களாக நல்ல முறையில் வித்யா தானத்தை கல்வி சேவையினை செய்து வருகிறது. மாணவர்கட்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. படிப்பு சொல்லிக் கொடுத்தவர்களை தாய் தகப்பனாரைப் போன்றே கௌரவிக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் சொல்லுகிறது. படிப்பு என்பது கொடுக்க கொடுக்க வளருமே தவிர தேயாது. சொல்லிக் கொடுக்கக் கொடுக்க அனுபவம் ஏற்படும். நல்ல கல்வி அறிவு இருந்தால் தான் மனிதன் நல்ல வாழ்வு வாழ முடியும். இல்லை எனில் மிருகத்திற்கு சமம் என்று cF சாஸ்திரம் சொல்கிறது. படிப்பதற்கும் சொல்லிக் கொடுப்பதற்கும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று குரு ஸுஸ்நஷை. நமக்கு உள்ள பாண்டித்யத்தை அடுத்தவரின் பாணடித்யத்துடன் பண்டமாற்றம் செய்து கொள்வது ஒரு முறை. தற்சமயம் (Groupe Discussion ) போன்று சிந்தித்து நம்முடைய சக்தியினால் ஞானத்தை அடைவது பின்பு அனுபவம் மூலம் ஞானம் பெறுவது.

அசுவதி தேவதைகள் ஆரோக்கியத்தினை அளிப்பவர்கள். கிருஷ்ண பரமாத்மா சாந்தீபினி முனிவரிடம் பாடம் பயின்றார். ராமபிரான் விசுவாமித்திரரிடம் கற்றுக் கொண்டது குரு தானாக கற்றுக் கொடுத்தது. குருவிடம் சென்று படிப்பது என்ற முறை உண்டு. பல கோயில் கல்வெட்டுகளில் இருந்து பாடசாலைக்காக பல மானியங்கள் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. வாழ்க்கையை நான்கு பகுதியாக பிரித்துள்ளது. முதல் பகுதி மாணவ பகுதி. இரண்டாவது கிரஹஸ்த நிலை. மூனறாவது வானப்ரஸ்தம். நான்காவது ஞான மார்க்கமான சிந்தனை. முதல் பகுதியில் படிப்பு தான் முக்கியம். நமது தேசம் மிகவும் புண்ணியமானது. பல மகான்கள் வாழ்ந்து வழிகாட்டிய தேசம். உலகில் இன்று பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பிறப்பிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. தொழில், உத்தியோகம், கவுரவம், ஆத்ம திருப்தி என நான்கு காரணங்கட்காக கல்வி ஏற்பட்டுள்ளது. சிறந்த கல்வி ஸ்தாபனம் படிப்புடன் நல்ல குணங்களையும் தெய்வ பக்தியையும் மாணவர்களிடையே ஊட்டி வருகிறது. இங்குள்ள நீங்கள் யாவரும் நன்கு படித்து கிராமீய தெய்வீக «க்ஷத்திர சூழ்நிலையில் சுற்றுபுறத்தை நன்கு தெரிந்து கொண்டு சிற்பம், சங்கீதம், பாரம்பரியம், தெய்வீகம் ஆகியவற்றினை தெரிந்து கொண்டு, நேரம் கிடைக்கும் போது கோயில்களுக்குச் சென்று தல புராணங்களைத் தெரிந்து, கைத்தொழில் தெரிந்து, அதனையும் கடைபிடித்து இயந்திரங்களைப் நம்பி சோம்பேறிகளாக மாறாமல், மேலும் அதிக வளர்ச்சிக்கு மட்டுமே விஞ்ஞானத்தை உபயோகித்து, நாடு சக்தியுள்ளதாக, பலமுள்ளதாக ஆக்கி, கிராமத்தில் உள்ள கஷ்டங்களை புரிந்து எந்த வகையில் உதவ முடியுமோ அங்ஙனம் உதவி, படிப்பதை உத்தியோகத்திற்கு மட்டும் என்றில்லாமல் மேலும் படித்துக் கொண்டு ஈஸ்வர அனுக்கிரஹத்தினால் நல்ல குணமுள்ளவர்களாக விளங்க ஆசீர்வதிக்கிறோம்.

(25-07-96 மயிலாடுதுறை கிக்ஷிசிகல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 6
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 8
Next