காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -23

ர்மம் என்பது லோக «க்ஷமத்திற்காக ஏற்பட்டது. அதனை கடைபிடித்தால் நமக்கும் உலகத்திற்கும் நன்மை. மனிதப் பிறவியின் நோக்கம் ஞானத்தைப் பெறுவது என்றாலும் அதனைப் பெற சக்தி படிப்படியாகத்தான் வர வேண்டும். எல்லாரையும் ஞான வழியில் அழைத்து செல்ல பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. நமது தேசம் விடுதலையடைந்து ஐம்பது ஆண்டுகள் ஆயின. இந்த தேசம் சுதந்தரம் அடைந்த போது இதன் நோக்கம் இதன் கலாசாரத்த்தைக் காப்பது என்பதே. 1962ல் நம்முடைய தேசத்தின் கலாசாரத்தினை பாதுகாக்க என்பதற்காக ஒரு ஸதஸ் ஏற்பட்டது. வியாஸ முனிவர் முக்கியமானவராக கருதப்படுகிறார். எல்லோரும் பணத்தை பொருளை சம்பாதிக்கிறோம். புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும் எனக் கூறியவர் வியாஸர். cF சாஸ்திரங்களை பக்தி கிரதங்களை காட்டியருளியவர் வியாஸர். இந்த ஸமாஜம் நல்லதொரு செயல் செய்து வருகிறது. சிவ ஆகமத்தோடும், வைஷ்ணவ ஆகமத்தோடும், சில்ப சாஸ்திரம், உயர்ந்த கருத்தினை எளிய முறையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பொம்மலாட்டம் போன்ற கலைகளையும் ஊக்குவிப்பது இதன் நோக்கமாக இருக்கிறது. தற்சமயம் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி பேசினார்கள். பக்தியின் மூலமாக ஈஸ்வரனின் அனுக்கிரஹத்தைப் பெறுகிறோம். இதனால் கர்வம் விலகுகிறது. துவேஷம் விலகுகிறது. பக்தியை நமக்கு தெரிவிக்கக் கூடிய இடங்கள் தான் கோயில்கள். பழங்காலத்தில் மனிதர்களை நல்லவர்களாக மாற்றும் இடமாக இருந்து வந்தன. மனிதர்கள் நல்ல சிந்தனையாளராக, அடக்கம் பொறுமை, போன்ற நல்ல குணங்களுடன் உலகத்திற்கு உபயோகமுள்ளவராக நல்ல மனப்பக்குவம் உடையவர்களாக உருவாகத்தான் கோயில்கள் இருந்தன. கோயில் வழிபாட்டிற்கு முக்கியமானது ஆகமம். இரண்டு மூன்று ஆகமங்கள் தான் பிரசாரத்தில் உள்ளன. சிவ ஆகமங்கள் வெளிவரும் நிலையில் உள்ளன. பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து இதுவரையில் வெளிவராத ஆகமங்களை வெளியிட்டுள்ளனர். இதனைத் தெரிந்து கொள்பவர்கள் குறைந்து வருகிறார்கள் கோயில் நிர்பாணம் என்றால் வெளியில் உள்ளது மட்டும் அல்ல. ஆலயம் என்பது ஆத்மாக்கள் ஓடுங்கும் இடம். யோக பாதம், ஞான பாதம் என்று எல்லாம் உள்ளன. பூஜை செய்பவர்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை உயர வேண்டும் என்பதே ஆகமத்தின் நோக்கம். ஆகமத்தின் மூலம் சாத்வீகமாக சாஸ்திர முறைப் படி பூஜை முறை ஏற்படும் போது நமது பழைய கலாசாரம் காப்பாற்றப்படுகிற திருப்தி ஏற்படுகிறது. பழைய காலங்களில் விஷயங்களைத் தெரிந்து கொள்ள கடிகா ஸ்தானம் என்று அரசர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்திய காலத்தில் நமது கலாசார படிப்பு குறைந்து விட்டது. உதவி செய்பவர்களும் குறைந்து விட்டனர். ஸதஸ் நடந்து அதிக எண்ணிக்கையில் பிரதி நிதிகள் கலந்து கொள்வார்கள் என்ற நோக்கத்துடன் அந்த நாளில் பாடசாலையினை அமைத்தார்கள். 400க்கும் அதிகமான வித்யார்த்திகள் வெளி வந்துள்ளனர். பல இடங்களில் நல்ல முறையில் பூஜை செய்து வருகின்றனர். குருகுல வழியில் தயாராகியுள்ளனர். இதற்கு பெரியவர்களின் தீர்கக தரிசனம் தான் காரணம்.

குலபதி என்பது ஒரு மரியாதைச் சொல். நிறைய மாணவர்களை தயாரித்தவர் '' குல பதி '' என அழைக்கப்படுவார். இந்த முறையினை என்றும் முழுமையாக முறையாக செயல்படுத்த வேண்டும். நம்முடைய தேசம் பழைய கலாசாரத்தினை தொடர்ந்து பாதுகாத்து வர வேண்டும். இதனால் தேசத்திற்கு உறுதியும் மேன்யும் கிடைக்கும். தர்மத்தின் நோக்கம் தன்னலமானதோ குறுகிய நோக்கமானதோ அல்ல, '' லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து '' என்ற பிரார்த்தனை கோயில்களில் எங்கும் ஒன்றே தான். நல்ல சிந்தனையும், ஆரோக்கியமும் யாவருக்கும் கிட்ட வேண்டும் என்பது தான் பிரார்த்தனை. நீங்கள் பல விட்டுப் போன பாகங்களை நினைவு படுத்தி அடுத்தவர்கட்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஈஸ்வர உபதேசம் எல்லோரிடத்திலும் பதிந்து நல்ல சூழ்நிலை நிலவிட இறைவனைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறோம்.

(19-01-98 காஞ்சிபுரம் காமாக்ஷி சத்திரத்தில் நடந்த ஆகம ஸதஸ்ஸில் ஆற்றி உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 22
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 24
Next