காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -18

கா ர்த்திகை மாதம் ஸ¨ப்ரமணியருக்கு விசேஷம். திங்கட்கிழமை மிகவும் விசேஷம். பன்னிரெண்டு ஜ்யோதிர் லிங்கத்தில் ஒன்றான மஹாகாளேஸ்வரர் ஸ்தலமான உஜ்ஜயின் சென்று கொண்டிருக்கிறோம். உஜ்ஜெயினின் பெருமை மிகவும் பழையானது. இறை பக்தி நோக்கிலே அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. சாதாரண ஒரு நபர் மரத்தின் கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்டி பின் தேவியின் அருளால் சிறந்த கவியான காளிதாஸனின் இடம். மனித பிறவி மிகவும் கடினம். நமது எண்ணத்தில் ஏற்படுவது அல்ல இந்த பிறவி. பகவானின் அருளாலும் நமது முன்னோர்களின் புண்ணியத்தாலும் நம்முடைய முற் பிறவியின் செயல்களாலும் இந்த மனித பிறவி கிடைக்கிறது. இந்த மனித பிறவியின் நோக்கம் என்ன. நம்மை படைத்த இறைவனுக்குத் தொண்டு செய்வதே. தர்ம சாஸ்திரங்கள், புராணம், இதிஹாஸம் போன்றவை பல உள்ளன. தாய் தந்தையரை மதித்துப் போற்றுதல், ஆசிரியரை வணங்கி மதித்தல், போன்றவை பல உள்ளன. தற்காலத்தில் சுதந்தரம் உள்ளது. நமது சுதந்தரம் உணவில் இருந்தே ஆரம்பமாகிறது.இந்த உணவும் தர்ம வழியில் இருக்க வேண்டும். பகவத் கீதையில் பல சொல்லப்பட்டுள்ளது. அதில் உணவும் எங்ஙனம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உணவிலிருந்து ஞானம் வரை கூறப்பட்டுள்ளது. இந்த உயர் நிலையான ஞான நிலையினை அடைய பலவகையான வழிகள் உள்ளன. நமது ஒவ்வொரு அங்கமும் செய்ய வேண்டிய செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. மனதின் அமைதி நிலை சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் பார்வையிலேயே அவனின் மன அமைதியினை தெரிந்து கொள்ள முடியும். இந்த நிலைக்கு மிகவும் பயிறசி தேவை. கடைப்பிடிப்பதும் மிகவும் முக்கியம். ஆஹார சுத்தௌ ஸத்வ சுத்தி என்று சொல்லப்பட்டுள்ளது.&ஸீதீsஜீ;

பரோபகாரம் என்றால் என்ன?தேயம் தீன ஜனாயச வித்தம்என்று ஆதிசங்கரர் கூறியுள்ளார். ஏழைக்கட்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார். இதன் படி தானம் அளிக்க வேண்டும். அகங்காரம் இன்றி, கர்வம் இன்றி, சிரத்தையுடன் அளிக்க வேண்டும். மனதில் அமைதி ஏற்படுவதற்கு அளிப்பதை இதம் ந மம என்ற பாவத்துடன் அளிக்க வேண்டும். மூன்று சொல்லப்பட்டுள்ளது. பக்தி, தர்மம், ஞானம், பக்தியில் சரணாகதி முக்கியம். அலைபாயாமல் நம்பிக்கையுடன் தினமும் செய்ய வேண்டும். நம்முடைய ஸ்வபாவபடி தான் நமது அடுத்த பிறவி கிட்டும் என கூறப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் '' நாராயணா '' என்று சொல்ல மறு பிறவி கிடைக்காது. இதற்கு முதலில் இருந்தே பயிற்சி செய்து கொள்ளவேண்டும்.பஜ, யஜ, த்யஜபகவானிடம் பக்தியுடன் இரு. அகங்காரம் இன்றி இரு. நம்முடைய செல்வம் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் நன்மையும் தீமையும் ஏற்படுகிறது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு செயல். அவர்களை நாம் பூஜித்தால் அவர்கள் நமக்கு உதவுவர். பரஸ்பரம் பர்வயந்த : ச்ரேயம் பரம் ப்ராப்னுயாத் இது கீதை. இதனால் தான் கோயில்களில் கும்பாபிஷேகம் முதலியவை செய்யப்படுகின்றன. இவை யாவும் சில காலத்திற்குத்தான். இது எப்போது எந்த த்யாகத்தால் நிரந்தரமாகிறது. பகவத் கீதை கிருஷ்ண பகவானின் குருவின் இடம் உஜ்ஜெயின் ஜ்யோதிர் லிங்கத்தில் மஹாகாளேஸ்வரர் இங்கு தான் உள்ளார். ஐம்பத்தொரு சக்தி பீடத்திலும் உஜ்ஜெயின் இங்ஙனம் பல விதத்திலும் சிறந்தது.

நாம் செய்யும் காரியங்களுக்கு பயன் உண்டு. இதில் சுய நலம் உண்டு. ஆனால் பகவானின் செயலில் அவருக்கு எந்த விதமான பயனும் இல்லை. உலகம் உயர்வது ஒன்று தான் பயன். தேவர்கட்கு சில சமயம் கஷ்டம் ஏற்பட்டது. மகான்களுக்கு தீமை செய்ய கஷ்டம் வருகிறது. தேவேந்திரன் துர்வாஸர் அளித்த பகவத் பிரஸாதத்தை அவமதித்தான். நமக்குக் கிடைத்ததை அடுத்தவர்ககு அளிக்க வேண்டும். அமிர்தம் உண்ணாத வரையில் பலம் கிடையாது என்ற சாபம் கிட்டியது. கௌஸ்துபம், உச்சைஸ்வரஸ் விஷம் யாவும் பாற்கடலில் இருந்து வந்தன. நல்லதைப் பெற யாவரும் வருவர். விஷத்தைக் கண்டு யாவரும் ஓட ஈஸ்வரன் அதனை எடுத்து உண்டார். அதனால் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார். இதனை ஏன் ஏற்றார், அவருக்கு கங்காதரர் என்றும் ஒரு பெயர் உண்டு. தன் முன்னோர்கள் கபில முனிவரின் சாபத்தால் அழிந்ததை அவர்கள் கடை தேற தவம் செய்து, கங்கையை கொணர்ந்தான் பகீரதன். தற்போதும் பலவித சிரமங்கள் உற்று வெற்றிக் காண்பதை '' பகீரத ப்ரயத்னம் '' என்கிறோம். கங்கையின் வேகத்தை பரமேஸ்வரர் தாங்கிக் கொண்டு கங்கையின் கர்வத்தினையும் அடக்கினார். கங்கை அவர் சடையில் சிக்கிக் கொள்ள, பகீரதன் மீண்டும் ப்ரயத்னம் செய்ததின் காரணமாக நமக்குக் கங்கை கிட்டியது. விஷம் இனிப்பானது அல்ல. அதனையும் உண்டார். ஸம்ரக்ஷணாய கர்ம த்வயம் அனன்ய ஸாத்யம் மற்றவர்களைக் காப்பாற்ற மற்றவர்களால் முடியாத இரண்டு செயல் செய்யப்பட்டது. இந்த இரண்டு காரணங்களும் மிகவும் சிறந்தது. சிவ பக்தி மிகவும் முக்கியம். இந்த யாத்திரையின் நோக்கம் ஈஸ்வர பக்தி, ஸதாசாரம், ஸத்சங்கம் ஆகியவற்றினை பரப்புவதே தங்கள் வாழ்வில் தினமும் ஈஸ்வரனின் நினைவும் «க்ஷத்திரங்களின் படிப்பும், நமது கலாசாரத்தை கை விடாமையும், ஆகியவை ஏற்பட்டு யாவரும் தர்ம வழியில் செயல்பட்டு எல்லா நலன்களையும் பெற ஆசீர்வதிக்கிறோம்.

(23-11-97 அன்று ஷாஜாபூரில் ஆற்றிய ஹிந்தி உரையின் தமிழாக்கம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 17
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 19
Next