காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -10

c ங்கள் எல்லாம் இரண்டு நாளாக தர்மத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வந்துள்ளீர்கள். இதனை எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்?இந்த தர்மத்தால் என்ன லாபம்?உங்களின் தாய் தந்தையர் நீங்கள் யாவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நல்லவர்களாகவும் கெட்டிக்காரர்களாகவும் இருக்க நல்ல புகழுடன் இருக்க, ஆசைப்படுகின்றனர். ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்குண்டான முயற்சியும் இருக்க வேண்டும். நல்லதை நனறாக புரிந்து கொண்டு அதன்படி செய்தால் தான் பலன் கிட்டும். வெறும் ஆசை மட்டும் போதாது. முயற்சிதான் பிரயத்னம் என்பது. நிரம்பச் சொல்லித் தருகிறார்கள். நீங்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். இவர்கள் சொல்வது யாவும் இவர்கள் எழுதியது அல்ல. பல வருடங்களுக்கு முன்னால் முன்னோர்கள் எழுதியதைச் சொல்லுகிறார்கள். நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஸம்ஸ்க்ருதம். இதற்கு இரண்டுவித எழுத்துக்கள் உண்டு. ஒன்று க்ரந்தம் என்ற LH. மற்றொன்று தேவநாகரி. இது தான் சற்று அதிகமாக பழக்கத்தில் உள்ளது. இந்த இரண்டினையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை தெரிந்து கொண்டால் தான் பழைய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் நிரம்ப படிக்க வேண்டும். படிப்பதற்கு முடிவே இல்லை. நம் மனதில் அஞ்ஞானம் அதிகம். நாமே பல வந்தத்திற்காக சிலவற்றை செய்து பின் மிகவும் வருந்துகிறோம். இந்த வருத்தம் வராமல் இருக்க யாவற்றினையும் நன்கு செய்ய ஞானத்தினைப் பெற வேண்டும். நேரத்தினை வீணாக்காமல் படிக்க வேண்டும். நான்கு வேதங்கள் படித்தவர்கள் எல்லாம் சதுர்வேத மங்கலத்தில் இருந்துள்ளனர். நமது வேதம், புராணம், முதலியவற்றினைப் படித்தால் நல்ல பழக்க வழக்கங்களும் குணங்களும் ஏற்படும். படிப்பும் நல்ல குணங்களும் சேர்ந்து இருந்தால் தான் நல்ல பெயர் எடுக்க முடியும். தற்போது தங்கள் மீதுள்ள ப்ரியம் தொடர்ந்து இருக்க நன்கு உழைத்து வாழ்க்கையில் எப்படி வாழவேண்டுமோ அங்ஙனம் எடுத்துக்காட்டாக வாழ உங்களை ஆசீர்வதிக்கிறோம்.

(14-08-96 சிஜிசிமாணவர்கட்கு ஆற்றிய உரை)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 9
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 11
Next