நவக்கிரகங்கள் குரு (பிரஹஸ்பதி) வயிற்றில் ஏற்படும் உபாதைகள் களைய இவரை வழிபடுதல் சாலச் சிறந்தது தனது எல்லா பாபங்களà

நவக்கிரகங்கள்
குரு (பிரஹஸ்பதி)

வயிற்றில் ஏற்படும் உபாதைகள் களைய இவரை வழிபடுதல் சாலச் சிறந்தது. தனது எல்லா பாபங்களிலிருந்தும் விடுபட இவர் வழிபாடு அவசியமானது. பலம், வீரம், நீண்ட ஆயுள் ஆகியவை கிட்டவும், மகப் பேறுகிட்டவும், நல்ல சிறந்த கல்வி கிட்டவும் இவர் அருள் புரிவார். இவர் தேவர்கட்கு குருவாகக் கருதப் படுகிறார். உலகினைக் காப்பவராகவும் அறிவுள்ளவர்களில் சிறந்தவராகவும் எண்ணப்படுகிறார். கனிந்த உள்ளம் படைத்தவர். இவர் உலககுரு என அழைக்கப் படுகிறார். நியாயம் வழங்குபவராகவும் வேதத்தினால் மட்டும் அறியப் படுபவராகவும் விளங்குகிறார்.

இவரை வழிபடுவதற்கு வியாழக்கிழமை சிறந்ததாக கருதப்படுகிறது. ராசி மணடலத்தில் தனுசு, மீனம் ஆகிய வீடுகளுக்கு அதிபதி. ஒவ்வொரு ராசியிலும் இவர் ஒரு ஆண்டு தங்கி 12 ராசிகளையும் சுற்றிவர 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.