ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள சில நல்ல கருத்துக்கள்
ருக்,-8-59-5
1. நம்முடைய மேன்மைக்காகவே நாம் உண்மை பேசுகிறோம்.
ருக்-9-74,3
2. இந்த பரந்த உலகில் நேர்மை வழியினை கடைப்பிடிப்போர் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
ருக்-4,23,10
3. உண்மையைத் தேடுவோர் அதனை கட்டாயம் கண்டு கொள்வர்.
ருக்10,61-10
4. உண்மையை கடைபிடிப்போர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எப்போதும் இனம் கண்டுகொள்வர்.
ருக்,9,73,8
5. உண்மையைக் காப்பவரையும் நேர்வழி நடப்பவரையும் எவரும் வெற்றிகாண இயலாது. ருக்-9,75,26. உண்மை பேசுவது இனிமையையும் அன்பையும் உண்டாக்குகிறது.
ருக்-7,61-5
7. உண்மை ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தின் மீது உள்ளது.
ருக்-9,73,6
8,பாவிகள் உண்மை வழி நடக்க முடியாது.
ருக்-7,61,5
9,மனித சமுதாயத்தின் எதிரிகள் தீயவழியினை கடைப்பிடிப்பவர்கள்.
ருக்,1,71,3
10. இடைவிடாது உழைப்பவர் மட்டுமே சுகத்தினை சுவைக்க முடியும்.
ருக்-1,39,10
11.தர்ம, அர்த்த,காம,மோக்ஷ சதுர்வித புருஷார்த்தங்களைத் தேடுவோர் நிரந்தரமாக உழைப்பவர்கள்.
ருக்8-2-18
12,சுறுசுறுப்பானவர்களையே கடவுள் நேசிக்கின்றார். சோம்பேறிகளை அல்ல.
ருக்.10,191,4
14.மனம் தெளிவாக செயல்படில் வாழ்வில் வெற்றிகிட்டும்.
ருக்1-191-2
15.நீங்கள் யாவரும் ஒன்றாகச் செல்லுங்கள் ஒரே குரலில் பேசுங்கள். உங்கள் மனம் ஒரே எண்ணம் கொண்டதாக அமையட்டும்.
ருக்,9,71-1
16.விழிப்புடன்இருப்பவர் எதிரிகளிடம் இருந்தும் பாபிகளிடம் இருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்வர்.
ருக் 1,90,6
17. உண்மையும் நேர்மையும் ஆனவருக்கு காற்று சுகத்தையும் நதிகள் சுவையான நீரையும் அளிக்கின்றன.
ருக்-5,12,5
18. தூய்மையானவர்களைத் தூற்றுவோர் அழிந்து போவார்கள்.
ருக்,1-15,5
19. சுபீக்ஷத்தை அளிக்கும் ஸ்வராஜ்யத்தினை வணங்குவோம்.
ருக்1,89,4
20. இந்த பூமியும் ஆகாயமும் நமது தாயும் தந்தையும்.
ருக்-1,56,2
21. மனிதனே உளது ஆன்மபலம் உன்னை செழுமைக்கு இட்டுச்செல்லட்டும்.
ருக்,10,28
22. திடமான ஆன்ம பலம் உடலால் இளைத்தவனை திடகாத்திரமான பலவானையும் வெற்றிகாணச்செய்யும்.
ருக்8,48,14
23. நம்மை காக்கும் கடவுள்கள் நமக்கு நல்லறிவு அளிக்கட்டும்.
ருக், 3,26,9
24. ஆசார்யன் வற்றாத நூற்றுக்கணக்கான அறிவு ஊற்றுகட்கு இருப்பிடம்.
ருக்,9,69,2
25. அறிவுடன் செயல்பட்டால் வாழ்வு இன்பம் அளிக்கும்,
ருக்,1,144,1
26. அறிஞர்கள் தங்களின் அறிவை சிறந்த செயல்கட்கு உபயோகிப்பார்கள்.
ய,வே,36-18,
27. நட்புக் கண்களோடு ஒருவரை ஒருவர் பார்ப்போமாக.
ய,வே,36,24
28. தலைநிமிர்ந்து நூறு ஆண்டுகள் வாழ்வோமாக.
சா,வே,1590
29. நண்பர்களின் உதவியுடன் தன் எதிரிகள் யாவரையும் ஒருவர் வெற்றி காண முடியும்.
சா,வே,435,
30. அடையவேண்டும் என்ற முயற்சி உடையவர்களே வாழ்வில் செழிப்பினை அடைகின்றனர்.
சா,வே,441
31. குறிக்கோள் இல்லாதவர் முயற்சியும் செய்வதில்லை,எந்தவிதமான பொருளினையும் சேர்ப்பதில்லை.
ருக்,10,141,6
32. இறைவா, எங்களுடைய எண்ணங்களை தூய்மையாக்கி எங்களது யாகங்களையும் வெற்றியடையச் செய்ய எங்களுக்கு அறிவுச்சுடரினை வழங்குங்கள்.
ருக்,10,164,35
33. இந்த யாகம் இந்த உலகத்தின் நாபியாகிறது.
ருக்,1,1,83,3
34. முயன்று செயல்படும் யாககர்த்தா சிறந்த சக்தியினை அடைகின்றார்.
ருக் 1,83,5
35.முதன் முதலில் யாகத்தைச்செய்தவர் அதர்வ ரிஷியாவார்.
ருக்,1,107,1
36.யக்ஞம் செய்வது தேவர்களை மகிழ்விப்பதற்கு ஒரு சாதனம்.
ருக்,5,393
37.இறைவா யாகம் செய்பவர்களின் மனத்திலிருந்து அறியாமை இருளை விலக்கிவிடு.
ருக்,8,1,1
38.இறைவனைத் தவிர மற்றவர்களைத் துதிக்காதே. ருக்,8-1-20
39.இறைவனிடத்தில் கை ஏந்தாதவர் எவர் உளர்? ருக்,4,25,7
40.தேவையானவர்கட்குத் தானம் அளிக்காத தனவந்தர்களின் தனத்தை கடவுள்எடுத்துக் கொண்டு அவர்களின் உடைமைகளை பறித்து பின் அவர்களை அழித்து விடுகின்றார்.
ருக்,8,92,32
41. இறைவா!நாங்கள் தங்களைச் சார்ந்தவர்கள்,நீங்கள்எங்களைச் சார்ந்தவர்.
ருக்,8,103,5
42. இறைவா, தங்களின் பக்தன் மிகவும் பலமாக காப்பாற்றப்படும் , எதிரிகளின் பாசறையிலும் உண்பதற்கு ஏதேனும் பெறுவான்.
ருக்,1,164,43
43.யாகம் செய்வது என்பதுதான் மிகப் பழமையான மதச்சடங்கின் கடமையாக இருந்தது.
ருக்,5,34,5
44.பலமாக இருந்து சுறுசுறுப்பாக இல்லாதவர்க்கு கடவுள் உதவி செய்ய மாட்டார்.
ருக்,10,143,3
45.இறைவன்அருள் இருப்பின் கரம்பு நிலமும் நல்ல செழிப்பான நிலமாக ஆகிவிடும்.
ருக்,10,64,2
46. கடவுளைத் தவிர வேறு எவராலும் நமக்கு சுகத்தை அளிக்க இயலாது. ருக்,8,62,1
47.கடவுளால் அளிக்கப்பட்ட சொத்து எப்போதும் மங்களகரமானது.
ருக்,8,16,5
48.கடவுளை தன் பக்கம் கொண்டவர்கள் வெற்றி காண்பார்கள்.
ருக்6,61,3
49.ஸரஸ்வதி தேவியே!கடவுளர்களை நிந்திப்பவர்களை அழித்து விடு.
ருக்- 5-4-5
50. சுய கட்டுப்பாடுடைய விருந்தாளியை நமது வீட்டிற்கு அழைத்து உபசரிக்க வேண்டும்.
ருக்- 2-18-8
51. இறைவனிடத்தில் என்னுடைய பக்தி நிரந்தர மானதாக இருக்கட்டும். ருக்-2-12-14
52. யாகம் செய்பவர்களையும், சுறுசுறுப்பாய் இருப்பவர் களையும் கடவுள் காப்பாற்றுகிறார்.
ருக்-2-12-9
53. உலகம் யாவும் கடவுளில் பிரதிபலிக்கிறது.
ருக்-6-47-18
54. உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் கடவுளின் உரு பிரதிபலிக்கிறது. ருக்-6-16-28
55. தனது தீவிரமான வெப்பத்தால் நெருப்பு எல்லா புழுக்களையும் அழித்துவிடுகின்றது.
ருக்- 2-3-11
56. நெய் தீயினை வலுப்படுத்துவதால் அதனை நோக்கித் தாவுகிறது.
ருக்-5-3-3
57. நெருப்புக் கடவுளிடம் நல்ல பெயர் வாங்க காற்றுக் கடவுளாகிய " மருத்தும் "நெருப்பிற்கு தொண்டு செய்கிறது.
ருக்-3-1-13
58. இறைவனும் தூய உள்ளத்தவரும் இணைந்து இருக்கின்றனர். ருக்-7-56-5
59. மக்களுக்கு மருத்துக்கள் பலத்தை அளிக்கட்டும்.
ருக்-1-152-3
60. சூரியன் உண்மையை பலப்படுத்தி நம்மை பொய்மையிலிருந்து காப்பாற்றுகின்றார்.
ருக்-2-23-6
61. பிரஹஸ்பதியே, தாங்கள் தெளிவான நோக்குடையவர்கள் தாங்களே எங்களின் காப்பாளரும் வழி காட்டியுமாக ஆவீர். ருக்-1-106-3
62. தகுந்த அறிவுரை வழங்கும் நமது முன்னோர்கள் நம்மை காப்பாற்றட்டும். ருக்-10-116-9
63. நல்லதொரு வேலைக்காரனைப் போல் நல்ல மனிதனுக்கு மனம் குளிர்ந்த கடவுள் தொண்டு செய்கிறார். ருக்-1-44-1
64. விடியற்காலையில் கடவுள்கள் எழுகின்றனர். ருக்-10-63-4
65. மனித சமுதாயத்தின் செயல்பாட்டினை தேவர்கள் எந்நேரமும் கண் கொட்டாமல் கண்காணித்து வருகின்றனர். ருக்-8-18-15 66. தேவர்கள் தூய்மையானவர்களிடம் வசித்து அவர்களின் அந்தரங்க எண்ணங்களையும் அறிகின்றனர்.
ருக்-1-3-8 67. தேவர்கள் யாவரும் சுறுசுறுப்பானவர்கள்.
ருக்-1-90-30
68.அழிவற்ற தேவர்கள் மனித சமுதாயத்தின் மீது சுகத்தைப் பொழியட்டும்.
ருக்-2-41-16
69. சரஸ்வதி தேவியே, நாங்கள் புகழற்றவர்கள்;எங்களுக்கு புகழ் அளியுங்கள்.
ருக்-5-43-11
70. எங்களுடைய யாகத்தில் மதிப்பிற்குரிய ஸரஸ்வதி இருக்கட்டும்.
ருக்-2-41-17
71. ஸரஸ்வதி தேவியே, நீண்ட ஆயுளுக்குத் தேவையான யாவும் தங்களிடத்தில் இருக்கும்.
ருக்-7-96-3
72. ஸெளபாக்கியவதியான ஸரஸ்வதி யாவர் மீதும் அன்பைப் பொழிகின்றார்
ருக்-7-96-5
73. ஸரஸ்வதியே தங்களிடமிருந்து கிளம்பும் இனிமையான காற்று எங்களுக்கு சுகம் அளிப்பதாக அமையட்டும்.
ருக்-6-61-7
74. தங்கமயமான பாதையில் சென்று ஸரஸ்வதிதேவி தனது எதிரிகளின் உள்ளத்தில் பயத்தினை ஏற்படுத்துகின்றார்.
ருக்-1-89-3
75. ஸெளபாக்கிவதியான ஸரஸ்வதி எங்களுக்கு இன்பம் அளிக்கட்டும்.
ருக்- 6-61-4
76. ஸரஸ்வதி தேவி தன் சக்தியினாலேயே மிகுந்த பலமுள்ளவர். ருக்-2-3-8
77. ஸரஸ்வதி நமது அறிவை பலப்படுத்தட்டும்.
ருக்-6-61-4
78. ஸரஸ்வதி தேவியே எங்களை எங்கள் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லுங்கள்.
ருக்-1-124-12
79. இல்லற தர்மத்தினை சிறப்பாக செய்யும் இல்லறத்தானின் மீது விடியல் கடவுளான உஷா தனது அருளைப் பொழிகின்றார்.
ருக்-1-123-9
80. உண்மையின் கடவுளாகிய ருதத்தின் மனைவியான உஷா தனது வகுக்கப்பட்ட இடத்திலிருந்து இம்மியும் நகர்வதில்லை.
81.உஷா .எங்களது நல்ல ஐஸ்வர்யத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் வழிகாட்டியாக இருக்கின்றார்,
ருக்,3,61,2
82. உஷாவின் தேர் தங்கத்தால் ஆனது, அவர் ஒரு மனிதனுக்கு வள்ளல் தன்மைக்கான வழியினைக் காட்டுகிறார்.
ருக்4,14,3
83.உஷாதேவி தோன்றி மக்களை நல்வழியில் சென்று நல்ல செயல்களை செய்யத் தூண்டிவிடுகிறார்.
ருக்1,92,7
84..உஷாதேவி ஒளிமயமானவர், மக்களை உண்மை பேசத் தூண்டுகிறார். ருக்,1,185,2
85.சுவர்க்கமும் பூமியும் நம்மை அழிவினின்று காப்பாற்றறட்டும்.
ருக்,10,63,16
87.தேவர்களால் காப்பாற்றப்படும் இந்த பூமி நாங்கள் வசிக்க ஏற்றதாக மங்களகரமானதாக அமையட்டும்.
ருக், 5,5,8
88.நல்ல பேச்சுக் கடவுளான இடாவும் அறிவுக்கடவுளாகிய ஸரஸ்வதியும் பூமியின் கடவுளாகிய மஹியும் மக்களுக்கு சுகத்தை அளிக்கின்றனர்.
ருக்4,23,8
89.உண்மையைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்களை செவிடர்களும் கேட்க முடியும்.
90. உண்மையைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்கள் தேவர்களை மகிழ்விக்கின்றது.
ருக்,4,23,9
91.உண்மை அழிவற்ற செல்வத்தினை அடையச் செய்கின்றது.
ருக்4,3,12
92. மழை நீருக்கு இனிப்பையும் அமிர்தத்திற்கு ஒப்பான தூய்மையையும் உண்மை தான் அளிக்கின்றது.
ருக்,7,60,5
93.மனிதனின் தீய செயல்களை தேவர்கள் அறிவார்கள்.
ருக்,10,37,2
94.எல்லா பக்கங்களிலும் எனது உண்மை பேச்சு என்னைக் காப்பாற்றட்டும்.
ருக்,8,79,5
95.தேடுபவன் தன் குறியினை கட்டாயம் அடைவர்.
ருக்,10,42,10
96.நம்முடைய தகுதியினாலேயே நாம் வெற்றி அடைவோமாக.
ருக்10,17,7
97.நிலத்தை உழுதபின் தான் ஒருவர் விளைச்சலை அறுக்க முடியும்.
ருக்,7,82,9
98.குறிக்கோள் உள்ளவர்கள் தான் வாழமுடியும், அவர் யாவற்றினையும் வெற்றி கண்டு பலசாலியாகின்றார்.
ருக்,9,73,3
99.கடினமான பாதையில் செல்ல அறிவுள்ளவர்கட்குத்தான் தைர்யமும் துணிவும் உண்டு.
ருக், 4,33,11
100. இடைவிடாது உழைப்பவரைத்தான் தங்களின் நட்பிற்கு ஏற்றவர்களாக தேவர்கள் கருதுகின்றனர்.
ருக்,7,32,9,
101.திறனற்றவர்களை தேவர்கள் ஆதரிப்பதில்லை.
ருக்-1-139-10
102. கடுமையாக உழைப்பவன் பல அரண்மனைப் போன்ற வீடுகட்கு சொந்தக்காரனாக ஆகிறான்.
ருக்-10-117-5
103. ஐஸ்வர்யம் ஒருவரிடமே நீண்ட காலம் தங்குவதில்லை.
ருக்-1-125-7
104. தானம் அளிக்காதவர்களை கஷ்டங்கள் தாக்குகின்றன.
ருக்-1-92-3
105. நல்ல செயல் புரிவோருக்கும் தானம் அளிப்பவருக்கும் மட்டும் உஷாதேவி செழுமையினை அளிக்கின்றார்.
ருக்-10-117-3
106.தானம் அளிப்பவரின் ஐஸ்வர்யம் ஒருபோதும் குறைவதில்லை.
ருக்-5-42-8
107.பசுக்களையும் ஆடைகளையும் தேவையானவர்கட்கு அளிப்பவர்களுடன் சௌபாக்யவதி மஹாலக்ஷ்மி வசிக்கின்றாள்.
ருக்-1-125-6
108.தானம் அளிப்பவர்கள் நீண்ட ஆயுளை சுவைக்கின்றனர்.
ருக்-1-125-6
109. தானம் அளிப்பவர்கள் அழியாத் தன்மை பெறுகின்றனர். -ருக்-10-117-4
110.தேவையான காலத்தில் உதவாத நண்பன் நண்பனே அல்ல.- ருக்-10-117-7
111.தான உள்ளம் படைத்த நண்பன் கருமியினை கைவிடுகின்றான். -ருக்-10-117-6
112.மூர்க்கனிடம் உள்ள ஐஸ்வர்யம் எவருக்கும் பயனில்லை.- ருக்-3-8-5
113.அறிஞர்கள் தங்களின் செயல்களை தங்களின் அறிவுத் திறமை மூலம் தூய்மையாக்குகின்றனர்.- ருக்-1-125-11
114.விடியலில் எழுபவர்கட்கு எல்லா வகை நன்மைகளும் கிட்டும்.- ருக்-5-2-6
115.நம்மை பழிப்பவர் தாமே பழிக்காளாவர்- ருக்-7-4-7
116.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது. - ருக்-5-51-15
117.தான சிந்தனை உள்ளவர், அஹிம்ஸைவாதிகள், நன்கு படித்த அறிஞர்கள் ஆகியோரின் நட்பைப் பெறுவோமாக. - ருக்-9-58-1
118.மகிழ்வு நிறைந்த மனம் கொண்டோர் வாழ்க்கைக் கடலில் அமைதியாக நீந்தி இருப்பர்.- ருக்-10-164-2
119.பொதுவாக மக்கள் உயர்ந்த உள்ளம் கொண்டவரை நேசித்து அவர்களை முன் உதாரணமாகப் பின்பற்றுவர்.- ருக்-10-117-9
120.இரட்டையரும் சமமான பலம் கொண்டவர்களாக இருப்பதில்லை.- ருக்-10-120-3
121.இனிமையாக பேசுபவரிடம் எப்போதும் இனிமையாகவே பழக வேண்டும்.- ருக்-2-41-8.
122.நிந்திப்பவர்கள் எதிரிகட்கு ஒப்பானவர்.- ருக்-3-53-23
123.குதிரையின் முன்பு கழுதையை எவரும் நிறுத்துவதில்லை.- ருக்-10-10-1
124.என்னுடைய நண்பர்களிடம் என்னுடைய நடத்தை ஏற்புடையதாக இருக்க வேண்டும்.- அ.வே.9-6-24
125.சந்தேகம் கொண்டவன் அல்லது ஏமாற்று நோக்கம் கொண்டவன் ஆகியவனின் உணவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.- அ.வே.5-3-4
126.எனது விருப்பம் யாவும் நிறைவேறட்டும். - ஈ.சோ.11
127. அத்யாத்ம வித்தையின் மூலம் அழியாத் தன்மையினை அடைய முடியும்.