புது மதங்களும் பெரிய கல்வி நிலையங்களும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆனாலும் புத்த, ஜின மதங்கள் வந்ததிலிருந்துதான் புது ஸித்தாந்த ப்ரசாரம் மாத்திரமின்றி மற்ற எல்லாக் கலைகளும் விஞ்ஞானங்களும் ஜாஸ்தியானதால் பெரிய ஸ்கேலில் வித்யாசாலைகள் நடத்துவது ரொம்பவும் குறிப்பிடும் அளவுக்கு வ்ருத்தியானது. அதற்கு முந்தி, மிகப் பெரும்பாலும் தனி மநுஷ்யராக உள்ள குருவிடம் ஒருசில வித்யார்த்திகளே சிக்ஷைபெறும் குருகுலவாஸ முறைதான்.

புது மதங்களோடு பெரிய ஸ்கேல் வித்யாசாலை வந்ததற்கு இன்னொரு முக்யமான காரணமும் உண்டு. இந்தப் புது மதங்களுக்கு ஹிந்துக்களைத் திருப்பியவர்களுக்கு நிஜமாகவே எல்லா ஜனங்களுக்கும் அறிவை வ்ருத்தி செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கலாம். இருந்தாலும் கன்வர்ஷன் (மதமாற்றம்) என்று வரும்போது வேறு உள்நோக்கமும் இருந்திருக்கக்கூடும் என்பது நம்முடைய ஸமீபகால சரித்ரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.

ஸமீப காலத்தில் என்ன பார்த்தோம்? இலவசமாகப் படிப்புச் சொல்லித் தருவதற்காக எங்கே பார்த்தாலும் ஸ்கூல் வைத்து, நைஸாக அதன் மூலமே மதப் பிரசாரம், மதமாற்றம் எல்லாம் பண்ணுவதை நிறையப் பார்த்திருக்கிறோமல்லவா? அதனால் ஆதியில் இந்த தேசத்திலேயே அவைதிகமான புது மதங்கள் உண்டானபோதும் ஆள் பிடிப்பதற்கு உபாயமாக வித்யாசாலைகளை பெரிய அளவில் ஏற்படுத்தியிருகக்லாமென்று தோன்றுகிறது. இதைக் காட்டி பொதுஜனங்களை வசீகரிப்பதற்கு நம்முடைய ப்ரத்யேகச் சூழ்நிலை நல்ல வாய்ப்பு தருவதாக இருந்ததையும் சொல்லவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பழங்காலக் கல்விப் பெருநிலையங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ப்ரத்யேகச் சூழ்நிலை
Next