வைராக்கியமும் மான உணர்வும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மஹான்கள் வைராக்யத்தின் மேல் ராஜ கௌரவத்தைப் புறக்கணித்தார்கள். கவிகளாகவே இருந்தவர்கள் மான உணர்ச்சியின்மேல் இப்படிப் பண்ணியிருக்கிறார்கள்.

மஹான்கள் மான உணர்ச்சிக்கு மேலே போனதால் மானாபிமானங்களை விட்டுவிட்டவர்கள். மஹான்களாக இல்லாத மற்ற ஜனங்கள் மானத்தை விட்டு ஹீனமாகப் பிழைப்பதை அதோடு சேர்த்து நினைப்பதற்கில்லை. என்ன அவமானம் வேண்டுமானாலும் பட்டுக்கொண்டு ஆஸ்தான கவி என்ற பெரிய பெயரில் இருந்துவிட்டால் போதும் என்று புகழ், ஸன்மானம் முதலியவற்றுக்காக மானத்தை விட்டால் அது ரொம்பவும் குறைவு. அப்படியில்லாமல் தீரத்துடன், துணிச்சலுடன், ‘இன்டிபென்டென்டா’க (ஸ்வதந்த்ரமாக) ஒரு கவி இருந்தானென்றால் அதை அவனுடைய ஸ்டேஜை வைத்துப் பார்க்கும்போது விசேஷமாகப் போற்றிக் கொண்டாடத்தான் வேண்டும். நாம் இருக்கிற ஸ்டேஜில் நாமும் ஸ்வய லாபத்துக்காக மானத்தை விடாமல் அவர்களைப் போலத்தான் இருக்கணும் என்று பாடம் பெறவேண்டும்.

இவர்களில் காளிதாஸன், கம்பன் என்ற இரண்டு பேரையும் சொல்லிவிட்டேனே! அதனால் அவர்கள் கதையைச் சொல்லிவிடுகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மன்னனைப் பொருட்படுத்தாத மஹான்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  காளிதாஸனும் போஜராஜனும்
Next