ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 69வது ஜயந்தியை முன்னிட்டு ஒரு கவி சமர்ப்பணம் கல்லால மரத்தின் கீழ் நால்வர் சீடர் அமர்ந்திருக்க சொல

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 69வது ஜயந்தியை முன்னிட்டு

ஒரு கவி சமர்ப்பணம்.

கல்லால மரத்தின் கீழ்

நால்வர் சீடர் அமர்ந்திருக்க

சொல்லால் விளக்காமல் சின்முத்திரை

காட்டி போதித்தவர் ஆதிகுரு

வில்லால் வெற்றி காண்பதற்கு

விஜயனுக்கு அருளினார் ஜகத்குரு

சொல்லாலும் செயலாலும் காட்டியவர்

சங்கரராய் வந்த ஜகத்குரு.

சங்கரர் அமைத்தார் பலபீடம்

ஜகத்தோர் நல்வாழ்வு பெற்றிடவே.

வங்கக் கரையில் தொடங்கியே

விரிந்து பதரியும் அடங்கிடவே.

சங்கரர் ஸர்வஞ்ஞபீடம் காஞ்சியில்

அமர்ந்தார் மக்கள் களித்திடவே

சங்கரர் வழித்தோன்றல் பல்லாரும்

சமயத்தை வளர்த்தனர் செழித்திடவே.

அறுபத்தி ஒன்பது ஆண்டுகாணும்

அறுபத்தி ஒன்பதாம் பீடாதிபர்

குருபக்தி மிகுந்தவர் குருவின்

எண்ணங்களை பூர்த்தி செய்பவர்.

வருமனைவர் துயர்களைய ஆண்டவனை

வணங்கி வழிபட்டு வேண்டுபவர்

மறுபிறவி அடையாத வழியினை

முயன்று பெற்றிடக் காட்டுபவர்.

ஜயமுண்டு பயமில்லை என்பதனை

ஜகத்தில் நிலைநாட்ட வந்தவரே

வயமாக செய்வதில் யாவரையும்

உமக்கு நிகர் நீரே.

நயமாக சொல்வதிலும் செய்வதிலும்

நானிலத்தில் வேறுளர் யாரே

ஜயேந்திர பெரியவரே உம்தாளை

ஜயஜயபோற்றி எனவணங்குது பாரே.

காஞ்சி மடத்தின் கருமணியே

கண்டவர் வியந்திடும் கலைந்தியே

வாஞ்சித பலனை அருள்நிதியே

வணக்கத்திற் குரிய ஜகத்குருவே.

சஞ்சிதம் முதலாம் பாபங்கள்

தீர்ந்திடச் செய்யும் தயாநிதியே.

தஞ்சம் அடைந்தோம் நின் பாதம்

தயவாய் கடைக்கண் அருள்வீரே.

- இராமாயணம்

காஞ்சிபுரம்

12-08-03