பிரஸித்தமான பெயர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஸுமுகச் – சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக: ||

‘விநாயகர்’ என்பது அடுத்த பேர். பிள்ளையாரின் பிரஸித்த நாமாக்களில் ஒன்று விநாயகர். வட தேசத்தைவிட தக்ஷிணத்தில் அதிப்ரஸித்தமான நாமா. ‘பிள்ளையார் சதுர்த்தி’ என்று பேச்சில் சொல்வதையே ‘விநாயக சதுர்த்தி’ எனறுதான் நாம் formal- ஆகக் குறிப்பிடுகிறோம். வடக்கே ‘கணேஷ் சதுர்த்தி’ என்பார்கள். ஸித்தி விநாயகர், வரஸித்தி விநாயகர், ச்வேத விநாயகர் என்றெல்லாம் பெரும்பாலும் விநாயக சப்தம் சேர்த்தே நம் தக்ஷிண தேசக் கோவில்களில் அவருக்குப் பெயர் சூட்டியிருக்கும். ‘விநாயகர் அகவல்’ என்றே ஒளவையின் பிரஸித்த ஸ்தோத்திரத்திற்குப் பெயர் இருக்கிறது.

வி-நாயகர். நாயகர் என்றால் தலைவர். பல பேருக்கு மேலே அவர்களைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is விநாயகர் ; இரட்டைப் பிள்ளையார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  எல்லா ஜாதியினருக்கும் உயர்வு மனப்பான்மை
Next