பெரிய திருமொழித் தனியன்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெரிய திருமொழித் தனியன்கள்

திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்தது

கலயாமி கலித்த்வம்ஸம் கவிம் லோக திவாகரம்

யஸ்ய கோபி:ப்ரகாஸாபி:ஆவித்யம் நிஹதம்தம:

எம்பெருமானார் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

வாழி பரகாலன் வாழி கலிகன்றி,

வாழி குறையலூர் காழ்வேந்தன் -- வாழியரோ,

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள், மங்கையர்கோன்

நூயோன் சுடர்மான வேல்.

ஆழ்வான் அருளிச்செய்தது

கட்டளைக் கலித்துறை

நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி

நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழநன் னூல்துறைகள்

அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம்,பரசமயப்

பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனுவல்களே.

எம்பார் அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

எங்கள் கதியே!இராமா னுசமுனியே,

சங்கைகெடுத் தாண்ட தவராசா,-- பொங்குபுகழ்

மங்கையர்கோ னீந்த மறையா யிரமனைத்தும்,

தங்குமனம் நீயெனக்குத் தா.

(மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று,

கோலிப் பதிவிருந்த கொற்றவனே, -- வேலை

அணைத்தருளும் கையா லடியேன் வினையை,

துணித்தருள வேணும் துணிந்து.)


 





 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கண்ணி நுண்சிறுத்தாம்பு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வாடினேன்
Next